Month: July 2018

  • மருத்துவப் படிப்பு: இன்று முதல் 10ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு

    தமிழகத்தில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் 2,593 காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகின. அதனைத் தொடர்ந்து மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் ஜுன் 11 முதல் 18 வரை நடைபெற்றது. இதனிடையே, தமிழக அரசு மருத்துவக்…

  • ராமநாதபுரத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ரூ.500 அபராதம் விதிக்கவும் ஆட்சியர் உத்தரவு

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் மழைநீரை நிலத்தடிக்குள் செல்ல விடாமல் தடை செய்யக் கூடியதாகவும், டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலை உருவாக்கக்கூடிய ஏ.டி.எஸ்.வகை கொசுக்கள் உற்பத்தியாக சாதகமாக வும் உள்ளது. சமீபகாலமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. தமிழக முதல்வர் வரும் 1.1.2019 முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புக்கு வலுச்சேர்க்கும் விதமாக,…

  • சென்னை ராஜீவ்காந்தி சாலை சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு

    சென்னை ராஜீவ்காந்தி சாலை சுங்க கட்டணம் இன்று முதல் 10% உயர்கிறது. 3 சக்கர வாகனம் ஒருமுறை செல்ல வரும் ஜூலை 1 முதல் ரூ.9 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 3 சக்கர வாகனம் சென்று திரும்ப ரூ.17, ஒருநாள் பாஸ் ரூ.30 ஆகவும் விலை உயர்த்தப்பட உள்ளது

  • சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக சான்றிதழ்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

    சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தற்காலிக சான்றிதழ்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் 132 உள்ளன. இந்த கல்லூரிகளில் தற்போது படித்து முடித்த மாணவர்களின் தற்காலிக சான்றிதழ்கள் முதல் முறையாக சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in ) வெளியிடப்படுகிறது.…

  • ஜி.எஸ்.டி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகிறது

    இன்று சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகிறது. நீண்ட நாட்களாக பேசப்பட்ட இந்த ஜி.எஸ்.டி முறை 2017 ஜூலை 1-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அமலுக்கு வந்தது. ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், தொடக்கத்தில் ஜி.எஸ்.டியில் சேர்க்கப்பட்டிருந்த பொருட்களுக்கு இப்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த வரி விகிதமாக இருந்த சில பொருட்களுக்கு இப்போது வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டியில் 5 கட்ட வரி விதிப்பு விகதங்கள் உள்ளன. 0%, 5%, 12%,…

  • மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையேயான மின்சார ரயில் சேவை இன்று ரத்து

    இன்று காலை 11 மணிக்கு புறப்பட வேண்டிய மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையேயான மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இன்று பகல் 1.55 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையேயான மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தொழில்நுட்ப பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.35 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி-சென்னை பயணிகள் ரயில் மாலை 4.35 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.