ஜி.எஸ்.டி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகிறது

09 June30 GST - 2026இன்று சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகிறது. நீண்ட நாட்களாக பேசப்பட்ட இந்த ஜி.எஸ்.டி முறை 2017 ஜூலை 1-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அமலுக்கு வந்தது. ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், தொடக்கத்தில் ஜி.எஸ்.டியில் சேர்க்கப்பட்டிருந்த பொருட்களுக்கு இப்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த வரி விகிதமாக இருந்த சில பொருட்களுக்கு இப்போது வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டியில் 5 கட்ட வரி விதிப்பு விகதங்கள் உள்ளன. 0%, 5%, 12%, 18%, 28% பெட்ரோல், டீசல், மது சார்ந்த பொருட்கள் இன்னும் ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வரப்படவில்லை. இனி வரும் காலங்களில் ஜி.எஸ்.டியால் மக்கள் பயன் பெறுவர் என்கின்றனர் வல்லுனர்கள்.

மறைமுக வரி வருவாயை நெறிமுறைப்படுத்துவதில் தொடங்கி, தொழில் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதை கட்டுப்படுத்த ஆணையம் அமைக்கப்பட்டது வரை இந்த ஓராண்டில் பல முன்னேற்றங்கள் ஜி.எஸ்.டியில் நடந்துள்ளது. ஓரே குடையின் கீழ் அனைத்து மறைமுக வரிகளையும் கொண்டு வர வேண்டும் என்ற ஜி.எஸ்.டியின் முக்கிய நோக்கம் நிறைவேறி வருகிறது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

“ஜி.எஸ்.டி கொண்டு வரப்பட்டதால், அனைத்து நிறுவனங்களும், வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இரட்டை வரி விதிப்பு முறைக்கும் முடிவு கட்டியுள்ளது” என்கிறார்ர் டிரான்ஸ்கான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆதித்யா கெடியா.

“ஜி.எஸ்.டியின் கீழ் இந்தியா முழுவதும் ஒரே வரி விகிதம் வசூலிக்கப்படுவதால், பொருட்களின் விலை சீராக இருக்கிறது. தொழில் போட்டியையும் இது அதிகரித்துள்ளது. இது மக்களுக்கு பயன் தரும் விஷயம்” என்கிறார் கெய்த்தான் நிறுவனத்தின் நிறுவனர்.

ஜி.எஸ்.டியால் கிடைக்கும் விலைக் குறைப்பை, மக்களுக்கு கொடுக்காமல், பொருட்களின் விலையில் அதிக லாபம் ஈட்டுவதை கட்டுப்படுத்தவும், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டியின் சிறப்பம்சமான உள்ளீட்டு வரி வருவாய் மூலம் நிறுவனங்களுக்கு கிடைக்கும் பலன்கள், அவர்களின் தயாரிப்புகளின் விலையில் பிரதபலிக்க வேண்டும். அதை கண்காணிக்கவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான வரி விதிப்பு ஜி.எஸ்.டி மூலம் குறைந்துள்ளதை அடுத்து, வீடுகளுக்கான விலை சந்தையில் குறைந்திருக்கிறது. எனவே குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

சிறு நிறுவனங்களின் வரி செலுத்தும் முறை ஒன்றாக குறைக்கப்பட்டதால், நேரம் மற்றும் செலவு மிச்சமாகியுள்ளது.

ஜி.எஸ்.டியில் பதிவு செய்து கொள்வது ஆன்லைன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. உள்ளீட்டு வரி வருவாய் மூலம், வியாபாரிகளுக்கு லாப அளவு அதிகரித்துள்ளது. உள்ளீட்டு வரி வருவாய் நடைமுறை உள்ளதால், மொத்த லாபத்துக்கான வரி செலுத்தும் அளவு கணிசமாக குறையும்.

சர்வதேச நிதி மையம், இந்திய அரசு ஜி.எஸ்.டி நடைமுறையை இன்னும் எளிமையாக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஜி.எஸ்.டியில் இருந்து சிறப்பான பயன்களைப் பெற இன்னும் சில காலங்கள் தேவைப்படலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories