Home கல்வி செப்டம்பர் 21ல் பள்ளி கல்லூரிகள் திறப்பா?

செப்டம்பர் 21ல் பள்ளி கல்லூரிகள் திறப்பா?

school
school

மாணவர்களின் படிப்பு நலன் கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக சமூகத் தளங்களில் செய்திகள் பரவின.

குறிப்பாக, உயர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தகவல் பரவியது.

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது எனவும், அதற்கு மேலுள்ள மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும் எனவும் கூறியதாக வதந்திகள் பரவின.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அவர்களுக்கு பள்ளிகளிலேயே முகக் கவசம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளதாகவும், கல்லூரியில் இதுவரை செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது அதனை பயன்படுத்தி மாணவர்கள் அடுத்து செமஸ்டர் தேர்வுக்கு நன்கு படித்து முன்னேற வேண்டும் என அவர் கூறியதாக, செய்திகள் பரவின.

ஆனால், செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு மாணவர்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெறலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது

அவ்வாறு மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது … விருப்பமுள்ளவர்கள் வரலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் இது நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு அதற்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டது

இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர் .கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் அவ்வாறு தெரிவித்திருந்தனர்

ஆனால் இப்போது மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து பொதுமக்களிடையே கருத்துக்கள் பரவி வருகின்றன குறிப்பாக செப்டம்பர் 21 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று வாட்ஸப் வாயிலாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version