― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ஈ.வே.ராமசாமி நாயக்கர் தொடர்பான... ஐம்பெரும் புளுகுகள்!

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தொடர்பான… ஐம்பெரும் புளுகுகள்!

- Advertisement -

பெரியார் இல்லாவிட்டால் தமிழகத்தில் கல்வி இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்காது.

இது அண்டப் புளுகு. தமிழ்நாடு கடந்த இருநூறு ஆண்டுகளாக கல்வியில் மற்றைய மாநிலங்களை விட முன்னால் இருந்தது. இது அனில் ஸீல் தனது “The Emergence of Indian Nationalism புத்தகத்தில் சொல்வது:

Despite its reputation as the ‘benighted’ Presidency, Madras possessed a level of literacy higher than any other province. By 1886 it had five more English colleges than Bengal, and it had as many arts students. With twenty-three more colleges, and three times as many students, it was far ahead of Bombay.

1961ல் அது பெரிய மாநிலங்களில் கேரளாவிற்கும் மகராஷ்டிராவிற்கும் அடுத்தபடியாக இருந்தது. இன்றும் அதே நிலைமைதான். இது நிச்சயமாக பெரியாரால் நிகழ்ந்தது அல்ல. அவர் கல்வியைப் பற்றி அதிகம் பேசியதேயில்லை. அழி, ஒழி எரி என்று பேசிக் கொண்டிருந்தவருக்குக் கல்வியைப் பற்றிப் பேச நேரமில்லாத்தில் வியப்பே இல்லை.

பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் போராடினார்.

இது ஆகாசப் புளுகு. பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் பேசினார் என்பது உண்மை. ஆனால் அவர் கடைசிவரை சாதி ஒழிப்பிற்காக எந்தப் போராட்டமும் நட்த்தவில்லை.

அவரது ஈரோட்டுப் பாதை திட்டத்தில் சாதியை ஒழிப்பதற்கான எந்த வழிமுறையும் சொல்லப்படவில்லை. இன்று வரை அவரது சீடர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சாதியற்ற திருமணங்களின் வீதம் மிகவும் அடிமட்டத்தில் இருக்கிறது.

செயற்திட்டம் ஏதும் இல்லாமல் சவடால் விட்டுக் கொண்டே காலம் தள்ளிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு முன்னோடி பெரியார்.

பெரியார் இல்லாவிட்டால் பெண்விடுதலை நிகழ்ந்திருக்காது.

இது கோட்டைப் புளுகு. தமிழகத்தில் பெண்விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்கள் 19ம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து வந்து கொன்டிருக்கிறார்கள். இந்துவின் ஆசிரியரான ஜி சுப்ரமணிய ஐயர் 1889 தனது விதவை மகளுக்கு மறுதிருமணம் செய்வித்தார்.

பாரதி தொடர்ந்து பாடியும் எழுதியும் வந்தான். காங்கிரஸ் இயக்கம் காந்தியின் தலைமையின் கீழ் வந்த பின்பு பெண்கள் பொது இயக்கங்களில் பெருவாரியாகப் பங்கு கொள்ளத் துவங்கினார்கள். இவர் தடலாடியாகப் பேசினார். ஆனால் தேவடியாள், விபச்சாரி, குச்சுக்காரி, போன்ற அலங்காரச் சொற்கள் இல்லாமல் அவர் பொதுக்கூட்டங்களில் பேசியதே இல்லை என்று சொல்லலாம்.

எனக்குத் தெரிந்து வேலைக்கு செல்லும் பிராமணப் பெண்களை கீழ்த்தரமாகக் கேலி செய்தவர்கள் திராவிட இயக்கத்தினர். இவர்களின் பெண் விடுதலை என்பது ஆகப் போலித்தனமானது.
சுதந்திர இந்தியாவில் பெண் விடுதலையின் அடித்தளம் இடப்பட்டது இந்துச் சட்டங்கள் திருத்தப்பட்ட போதுதான். பெண் விடுதலைக்கு மற்றையக் காரணங்கள் கருத்தடைச் சாதனங்கள், நகரங்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் அதிகரித்தமை. இவற்றிற்கும் பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகம் அவர் எழுதியதிலேயே மிகச் சிறந்த புத்தகம் என்று சொல்லலாம்.

பெரியார் இல்லாவிட்டால் இடஒதுக்கீடு வந்திருக்காது.

இது சமுத்திரப் புளுகு. இட ஒதுக்கீட்டை அவர் ஆதரித்தார் என்பது உண்மை. ஆனால் முதன்முதலில் இட ஒதுக்கீடு வந்த போது அவர் நீதிக் கட்சியில் இல்லை.

1947ல் இட ஒதுக்கீட்டை அதிகப் படுத்தியது மாநிலத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சி. இவர் அப்போது சுதந்திரம் அடைந்ததற்காகத் துக்கம் கொண்டாடிக் கொண்டிருந்தார். 1951ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்த்து மத்தியில் இருந்த நேரு அரசு.

அந்தக் காலகட்டத்தில் பெரியாரை கண்டு கொள்ளக்கூட யாரும் இல்லை. காங்கிரசுக்கு அவர் எதிரி. திமுக அவருக்குக் கண்ணீர்துளிகளாகத் தெரிந்தார்கள். மாறாக தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கிடைத்த கோபத்தில் அம்பேத்காரை விலை போய் விட்டார் என்று திட்டியவர் பெரியர்.

பெரியாரால்தான் தமிழனுக்குத் தன்மானம் வந்தது...

இது புளுகுகளுக்கெல்லாம் பெரிய புளுகு. தமிழனை அவமானம் செய்யும் புளுகு. தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் தமிழருக்குத் தன்மானத்தைக் கொடுத்தார் என்று வெட்கமே இல்லாதவர்கள்தாம் சொல்வார்கள்.

தமிழனுக்கு தமிழைப் பற்றிய பெருமிதம் என்றும் இருந்தது.
“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர்ஞாலத் திருளகற்றும் தன்னேரில்லாத தமிழ்” என்று பெரியார் பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்க் கவிஞன் ஒருவன் பாடி விட்டான்.

தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் உண்மையாக களத்தில் இறங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். சர்வோதயத் தொண்டர்கள்.

பெரியார் உண்மையாக தமிழகத்திற்கு அளித்தது என்ன?
இவர் தமிழகத்திற்குக் கொடுத்தது நாசி இனவெறி. இன்று வரை நாசி இயக்கம் உயிரோடு இருக்கும் மிகச் சில இடங்களில் தமிழ்நாடு ஒன்று. அதற்கு நாம் பெரியாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

வன்முறைகள் ஏறத்தாழ இல்லாத நாசி இயக்கமாக இருப்பதற்கும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

பெரியார் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தார், மனதார நினைத்தார் என்பது உண்மை. ஆனால் நினைப்பைச் செயல்படுத்துவதற்கு தேவையான பொறுமை அவரிடம் இல்லை.

இந்தியா போன்ற நாட்டிலும் தமிழகம் போன்ற சாதி வேற்றுமைப் பேய்கள் ஆடும் மாநிலத்திலும் எல்லோரையும் அணைத்து செல்ல வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் அவரிடம் இல்லை. தடாலடித் தீர்வுகளை அவிழ்த்து விடுவது எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம் என்ற ஞானம் அவரிடம் இல்லவே இல்லை.

நாசி இனவெறி என்ற பூதம் வேறு அவரைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.

பெரியாரின் சீடர்கள் பலரிடம் பெரியாரின் நல்ல பண்புகள் இல்லை. நாசி இனவெறி மட்டும் இருக்கிறது.

பெரியார் – ஐம்பெரும் புளுகுகள்
– P A Krishnan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version