― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்வந்தேறிகளின் வம்பு பிரசாரங்களால் ஏற்பட்ட விளைவுகள்! ஆனால்... உண்மை என்ன?

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்களால் ஏற்பட்ட விளைவுகள்! ஆனால்… உண்மை என்ன?

- Advertisement -

சமஸ்கிருத மொழி இறந்த மொழியல்ல…! ஜீவ மொழி!

சமஸ்கிருதம் ‘ம்ருத’ மொழியல்ல! ‘அம்ருத’ மொழி!

ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்குச் செய்த ஆயிரக்கணக்கான துரோகங்களுள் மிகத் தீவிரமான துரோகத்தை சம்ஸ்கிருத மொழி மீது செய்தார்கள்.

ஜீவ மொழியான சமஸ்கிருதத்தை இறந்த பாஷை என்று பிரச்சாரம் செய்தார்கள். ஒரு மொழியை இறந்த மொழி என்பதற்கு எது ஆதாரம்?

உலகில் 5000 பேரை விட குறைவாக ஒரு மொழியை உபயோகித்தால் அது இறந்த மொழி என்பது அவர்களின் விளக்கம். கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் சம்ஸ்கிருதம் அந்தப் பட்டியலில் எவ்வாறு சேரும்?

இன்றைக்கும் லட்சக்கணக்கானோர் சம்ஸ்கிருதம் பேசுபவர்கள் உள்ளார்கள். பல லட்சம் பேர் சம்ஸ்க்ருத மொழியை புரிந்து கொள்கிறார்கள். சம்ஸ்கிருத நூல்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. அப்படிப்பட்ட மொழியை இறந்த மொழி என்பது ஒரு சூது. ஏமாற்றுவேலை.

கிறிஸ்துவர்களான ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டபோது சமஸ்கிருத படிப்பும் பாடசாலைகளும் முழுமையாக அலட்சியத்திற்கு ஆளாயின.

பல சம்ஸ்கிருத கல்விக்கூடங்கள் மூடப்பட்டன. ஆங்கில மொழியை வளர்க்கும் முடிவோடு, அரசாங்கப் பணிகளைப் பெறுவதற்கு சம்ஸ்கிருதம் உதவாது என்ற மனப்பான்மையை மக்களிடம் விதைத்தார்கள்.

சுதந்திரம் வந்த பின் ஏற்பட்ட அரசாங்கங்களும் அதனை சரி செய்யவில்லை.

இந்தியன் எஜுகேகேஷன் ஆக்ட் என்பதை நடைமுறைப்படுத்திய பிரிட்டிஷ் அரசு பாரத தேசத்தில் நடந்து வந்த குருகுல பாடசாலைகள் சட்டத்திற்கு உட்பட்டவை அல்ல என்று அறிவித்தது.

பாடசாலை உருவாக்கத்திற்கு பொருளாதார உதவி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது. அதனால் சம்ஸ்கிருதம் கற்றுத்தரும் பல பாடசாலைகள் மூடப்பட்டன.

1822-25 ல் ராஜமண்டரியில் இருந்த கல்விக்கூடங்களில் மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்ட பாடப்புத்தகங்களின் பட்டியலில் (பிரிட்டிஷ் அதிகாரிகள் மூலம் அனுப்பப்பட்ட ரிப்போர்ட் ஆதாரமாக) சித்தாந்த கௌமுதி, தர்க்க சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், பஞ்ச காவியங்கள், ஆகம சாஸ்திரம் முதலானவை இருந்தன.

சம்ஸ்கிருத பாடசாலைகளை நடத்தியவர்களுக்கு ஹிந்து அரசர்கள் சன்மானமாக அளித்த நிலங்கள் அனைத்தையும் பிரிட்டிஷார் கைப்பற்றிக் கொண்டனர். அதன் விளைவாக சிறிது சிறிதாக பல பள்ளிகள், குருகுலங்கள், அக்ரஹாரங்கள் (இன்றைய பல்கலைக்கழகத்திற்கு சமமான) பலவும் மூடப்பட்டன.

சர்வஜ்ஞபுரம் அக்ரஹாரத்தில் (மைசூர் மாவட்டம் அரிசிக்கரை) கிடைத்துள்ள சாசனங்கள் மூலம் அன்றைய கல்வி முறை பற்றி பல செய்திகள் தெரிய வந்துள்ளன. வேதங்களோடு கூட புராணங்களும் தர்க்கமும் அங்கு கற்றுத்தரப்பட்டன.

நாளந்தா 5- 12 நூற்றாண்டுகளுக்கு இடையில் மிகச்சிறந்த பல்கலைக்கழகமாக விளங்கியது. 1194ல் கொடூரமானவனான கொடுமையாளன் ‘முகமதுபின் பக்தியார் கில்ஜி’ அதனை எரித்து சாம்பலாக்கும் வரை அது அற்புதமான நூலகக் களஞ்சியமாகத் திகழ்ந்தது.

‘வா ஹுன் டி சாங்’ தன் யாத்திரை நூலில் நாளந்தா நூலகத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளார் .தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் 45 ஆயிரம் ஓலைச் சுவடி நூல்கள் உள்ளன. பல மேன்மையான நூல்களை மேலை நாட்டவர்கள் திருடி ஒளித்துக் கொண்டார்கள்.

இஸ்லாமிய மத பயங்கரவாதிகளும் கிறித்துவ மத வெறியர்களும் தங்களது மத வெறி தீரும் அளவுக்கு ஆயிரக்கணக்கான சம்ஸ்கிருத நூல்களை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

மாக்ஸ்முல்லர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதினார், “நமக்கு ஆப்பிரிக்கா நாட்டவரை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றுவதற்கு இருநூறு ஆண்டுகள் பிடித்தன. ஆனால் 400 ஆண்டுகளுக்குப் பிறகும் பாரதியர்களை அவ்வாறு மாற்ற இயலவில்லை. இதற்குக் காரணம் சம்ஸ்கிருத மொழியே என்பது என் நம்பிக்கை. அதனை அழிப்பதற்காக நான் சம்ஸ்கிருதம் கற்று வருகிறேன்”.

2-2-18 35 அன்று பதிவு செய்யப்பட்ட மெக்காலேயின் பிரசங்கம் இவ்வாறு உள்ளது. “இதுவரை பாரத தேசத்தில் போற்றி வளர்க்கப்பட்ட சம்பிரதாயங்களை ஆணி வேரோடு பிடுங்கி எறிவேன். அதற்காக உடனடியாக சம்ஸ்கிருத புத்தகங்களை பதிப்பிப்பதை நிறுத்தி விடப் போகிறேன். சம்ஸ்கிருத கல்விக் கூடங்களை மூடப்போகிறேன்.

இத்தகைய தீய எண்ணத்தின் காரணமாக சம்ஸ்கிருத மொழியின் விஷயத்திலும் சம்ஸ்கிருத நூல்களின் விஷயத்திலும் மேலைநாட்டவர் செய்த தீய பிரச்சாரங்களுக்கும் குள்ள நரித் தந்திரங்களுக்கும் சரியான பதில் அளிக்கும் அறிஞர்கள் அரிதாகிப் போயினர். புதிய தலைமுறை பண்டிதர்கள் உருவாவதும் குறைந்து போனது.

இப்போதும் சிலர் சம்ஸ்கிருத மொழியை ஒரு மத மொழியாக, பிராமண மொழியாக, உயிரற்ற மொழியாக வர்ணிப்பதன் பின்னணியில் பிரிட்டிஷாரின் சதியே உள்ளது.

நம் கலாச்சாரம், சம்பிரதாயங்களுக்கு விரோதிகளான இடதுசாரிகள் சம்ஸ்கிருத மொழி மீது இன்றைக்கும் வந்தேறிகளின் வழிமுறையிலேயே விஷத்தைக் கக்குகிறார்கள். ஆனால் இந்த அமிர்த மொழியின் சுவை அறிந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் பொங்கிப் போகிறார்கள் என்பதே உண்மை.

சம்ஸ்கிருத மொழி இந்தியர்கள் அனைவருக்கும் அமிர்த மொழி! (நாமகரண சம்ஸ்காரம்) பெயர் சூட்டும் விழாவில் தொடங்கி சம்ஸ்கிருதம் சிறு வயது முதல் நம் காதுகளில் விழுந்த மொழி! வீட்டில் நடக்கும் பலப்பல நிகழ்ச்சிகளிலும் கோவில்களிலும் சம்ஸ்கிருத வாக்கியங்கள் நம் காதுகளுக்கு அறிமுகமாயின.

சம்ஸ்க்ருத பாரதி என்ற அமைப்பின் மூலம் லட்சக் கணக்கானோர் சம்ஸ்கிருத மொழியை கற்று வருகிறார்கள். இந்தியாவின் மொழிகள் பெரும்பான்மைக்கும் சம்ஸ்கிருதமே பிறப்பிடம் ஆதலால் அனைத்து மக்களும் சம்ஸ்கிருத மொழியை புரிந்து கொள்ள இயலுகிறது.

உதாரணம் ஜலம், போஜனம் போன்ற சொற்கள் ஏறக்குறைய நாடு முழுவதும் ஒன்று போலவே உள்ளன. அதுமட்டுமல்ல ஆங்கிலத்தில் உள்ள நிறைய சொற்களுக்கு மூலம் சம்ஸ்கிருதமே. பித்ரு – பாதர் மாத்ரு – மதர் முதலானவை.

சம்ஸ்கிருத நூல்களில் உள்ள கதாபாத்திரங்கள் பலவும் உலகம் முழுவதும் அறியப்பட்டவையாக உள்ளன. அவை பலருக்கும் உற்சாகத்தை அளிப்பவை. சிரவணன், ஹரிச்சந்திரன் கதைகள் காந்திஜியின் ஆளுமையை மாற்றியமைத்தன என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

சம்ஸ்கிருதத்தில் சங்கீதம் உள்ளது. அர்த்தம் புரியாவிட்டாலும் கேட்பவர்களின் செவிக்கு விருந்து ஏற்படுத்தும் ஸ்லோக நூல்கள் பல உள்ளன. ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம் போன்ற பலவும் இதற்கு உதாரணங்கள்.

ஜெயதேவரின் அஷ்டபதிகள், நாராயண தீர்த்தரின் தரங்கங்கள் முதலானவை செவிக்கு இனிமையாகவும் ஆழமான உணர்ச்சியோடும் இருப்பதை நாமறிவோம். நாட்டின் மக்கள் தொகையில் கோடிக்கணக்கானோருக்கு சம்ஸ்கிருத சொற்களோடு உள்ள பெயர்கள் அல்லது தெய்வங்களின் பெயர்கள் உள்ளன. உதாரணத்திற்கு ஜெய – லலிதா, கருணா – நிதி, மமதா போன்றவை.

ஆங்கிலேயர்கள் ‘டெட் லாங்குவேஜ்’ என்பதற்கு மொழிபெயர்ப்பாக இறந்த மொழி என்றார்கள். ஆனால் டெட் என்பது இறந்த என்று மட்டுமே எப்போதும் பொருள்படாது. டெட் என்ட், டெட் ஸ்லோ போன்ற சொற்களில் டெட் அலெர்ட், டெட் இன்வெஸ்ட்மென்ட் போன்று, டெட் என்றால் மிகவும் சிரமம் என்று எண்ணி, வந்தேறிகள் சமஸ்கிருதத்திற்கு அந்த முத்திரை குத்தினார்கள் என்றார் ஓர் அறிஞர்.

அனைத்து மொழிகளையும் போல சம்ஸ்கிருதம் மற்றுமொரு மொழியல்ல! இது சம்பூரணமான ஞானச் சுரங்கம். புராதன பாரத தேச சரித்திரத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவும் ஓர் ஊடகம். சம்ஸ்கிருத மொழி மூலமாகவே நாட்டின் பெருமை, பெருமிதம், உன்னதம், கலாச்சார பரம்பரை என அனைத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் பிரிட்டிஷாரின் சாபத்தால் இந்த அமிர்த வாணி சில தலைமுறைகளுக்கு கிட்டாமல் தொலைவானது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சம்ஸ்கிருதம் முக்கிய பயிற்று மொழியாக இல்லாமல் போனதால் இந்த மொழியில் உள்ள விஞ்ஞான அம்சங்கள் மாணவர்களுக்கு கிடைக்காமல் போயின.

இப்போதுதான் உலகமெங்கும் ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. மேல்நாட்டு கல்விக்கூடங்களில் சமஸ்கிருத மொழிக்கு கௌரவ மரியாதை கிடைத்து வருகிறது.

நம் நாட்டில் 16 சம்ஸ்கிருத கல்லூரிகள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் பள்ளிகள் எத்தனையோ உள்ளன.

மாநில அரசின் செகண்டரி வித்யா போர்டு மும்மொழிக் கொள்கை மூலம் ஆறாவது வகுப்பு முதல் இன்டர் வரை உள்ள மாணவர்கள் இந்த அமுத மொழியைக் கற்று வருகிறார்கள்.

உத்தராகாண்ட் மாநிலத்தில் சமஸ்கிருதம் இரண்டாவது விருப்ப மொழியாக இருந்து வருகிறது. நர்சரி முதல் கட்டாயமாக சம்ஸ்கிருதம் கற்றுத் தரும் பள்ளிகள் சில உள்ளன. சில மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் தாய் மொழியோடு கூட சம்ஸ்கிருதமும் கற்றுத் தருகிறார்கள்.

பாரம்பரியமாக வரும் சம்ஸ்கிருத பாடசாலைகள் சுமார் ஐயாயிரத்துக்கும் மேலாக நம் நாட்டில் உள்ளன. இவை மட்டுமின்றி ஆயிரத்துக்கும் மேல் வேத பாடசாலைகள் உள்ளன. சில மாநிலங்களில் ‘சன்ஸ்க்ரிட் செகண்டரி எஜுகேஷன் போர்டு’, டைரக்டரட் ஆஃப் சன்ஸ்க்ரிட் எஜுகேஷன்’ ஆகியவை உள்ளன.

120 பல்கலைக்கழகங்களில் யுஜி – பிஜி.,யில் சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. அனைத்து கேந்திரிய வித்யாலயாவிலும் சமஸ்கிருதப் பிரிவு கட்டாயமாக இருக்கவேண்டும் என்று நாடாளுமன்றம் தீர்மானம் இயற்றி உள்ளது.

பல சம்ஸ்கிருத அகாடமிகளும், 16 சம்ஸ்கிருத பரிசோதனை அமைப்புகளும் உள்ளன. சம்ஸ்கிருத மொழியில் 60 க்கும் மேலாக வார மாத பத்திரிகைகள் வெளிவருகின்றன. சமஸ்கிருத மொழியைப் பரப்பும் முயற்சியில் உள்ள தனியார் நிறுவனங்களும் சங்கங்களும் நூற்றுக்கணக்கில் உள்ளன.

ஆகாசவாணி, தூர்தர்ஷன் மூலம் சமஸ்கிருத வாரம், அமர வாணி என்ற பெயர்களில் சமஸ்கிருத நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. திவ்ய வாணி சமஸ்கிருதம் என்ற பெயரில் இடைவிடாமல் ஒலிபரப்பாகும் இன்டர்நெட் ரேடியோ புரோகிராம்கள் மூலம் 165 நாடுகளில் இருக்கும் சம்ஸ்கிருத அன்பர்கள் பயனடைகிறார்கள்.

கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ‘மத்தூரு’ சமஸ்கிருத கிராமமாக புகழ் பெற்றுள்ள செய்தி அனைவரும் அறிந்ததே!

இது மட்டுமின்றி நாட்டில் இது போன்ற கிராமங்கள் இன்னமும் ஆறு உள்ளன. சம்ஸ்கிருத பாரதியின் முயற்சியால் இவற்றின் உருவாக்கம் சாத்தியமாயிற்று.

நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் உள்ள பல புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் சம்ஸ்கிருத மொழியை கம்ப்யூட்டர் மொழியாக தயாரித்து அதுபற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

சிறுவர் இலக்கியத்தை சம்ஸ்கிருத மொழியில் எழுதுவதற்காக ஏற்பட்ட ஓர் அமைப்பு ‘சம்ஸ்கிருத பால சாகித்ய பரிஷத்’. இதன் மூலம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற கதைகள் அடங்கிய புத்தகங்களை எழுதி வருகிறார்கள்.

சென்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது 25 ஆயிரம் பேருக்கு மேல் பொது மக்கள் சம்ஸ்கிருத மொழியை தாய்மொழியாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

வலைப்பூக்கள் வழியாகவும் இமெயில் வழியாகவும் யூட்யூப் மூலம் சமஸ்கிருத மொழியை படிப்பவர்கள் எவ்வளவோ பேர் உள்ளார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் பல சம்ஸ்கிருத நூல்கள் மறுபதிப்பு ஆகின்றன. எத்தனையோ பேர் எழுதிய ஆய்வு நூல்களும் படைப்புகளும் நூல் வடிவம் எடுத்து வருகின்றன. சம்ஸ்கிருதம் கற்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுவோர் உலகளவில் பெருகி வருகிறார்கள்.

சமஸ்கிருத ஸ்லோகங்கள் கற்றுத் தருவதன் வழியாக ஞாபக சக்தி அதிகமாகிறது. உச்சரிப்பும் வலிமை பெறுகிறது. மன ஒருமைப்பாடு ஏற்படுகிறது.

இந்தக் காரணங்களால் சிறு வயதிலிருந்தே சம்ஸ்கிருதம் கற்றுத் தருவதற்கு பெற்றோர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சம்ஸ்கிருத மொழிப் பயிற்சியால் மேதமை வளர்கிறது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால் பல மேற்கத்திய நாடுகளிலும் சமஸ்கிருதம் கற்க தொடங்கியுள்ளார்கள்.

சமஸ்கிருதம் கற்று நம் நூல்களைப் படித்து வக்கிரமான விமர்சனங்களை உளறிக் கொட்டி, நம் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் கிறிஸ்தவ குள்ளநரிக் கும்பல்கள் நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல்கலைக்கழகங்களில் அதிகம் தென்படுகின்றனர்.

நம் நாட்டில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற ஓலைச்சுவடி நூல்களில் என்ன உள்ளது என்று அறிய வேண்டுமானால் சம்ஸ்கிருத அறிஞர்கள் அவர்களுக்குத் தேவை. அதற்கான முயற்சியில் மும்முரமாக உள்ளனர் இந்த மதவெறி பிடித்த துரோகிகள்.

வரப்போகும் ஆண்டுகளில் சம்ஸ்கிருதத்தை இயல்பு மொழியாகப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களின் மேல் கவனம் பெருகி வருகிறது. செயற்கை மொழி பெயர்ப்பு மீது நடந்து வரும் பரிசோதனைகளில் வெற்றி பெற்றால், ‘கோடிங்’ கிற்கு சம்ஸ்கிருதம் ஊடகமாக மாறினால், மொழியோடு சம்பந்தமில்லாமல் இரு மனிதர்கள் ஒருவரோடொருவர் உரையாட இயலும்.

எதிர்காலத்தில் உலக மொழியாக சம்ஸ்கிருதம் தன் வலிமையை காட்டப் போகிறது. சம்ஸ்கிருத ஸ்லோகங் களையும் மந்திரங்களையும் படிப்பதாலும், துவாதச நாமங்கள், அஷ்டோத்திர சத நாமாவளி, சகஸ்ரநாமங்கள் சிறிது சிறிதாக பிள்ளைகளுக்கு கற்பிப்பதாலும் அவர்களின் ஞாபக சக்தி பெருகுகிறது.

சமஸ்கிருதம் தாய்மொழி! வாழும் மொழி! தேச மொழி! விஞ்ஞான மொழி!

சம்ஸ்கிருதம் இல்லாத பாரத தேசம் ஆத்மா இல்லாத நாடு!

சம்ஸ்கிருத மொழியிலுள்ள எல்லையற்ற சொற் புதையல் உலகில் வேறு எந்த மொழியிலும் தென்படாது. மூல மொழியான ஜெர்மன், பிரெஞ்சு, டச்சு, ஸ்பணிஷ் போன்றவற்றிற்கு தாய்மொழி சமஸ்கிருத மொழியே!

கால வெள்ளத்தில் உலக மொழிகளில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் சம்ஸ்கிருத மொழியின் இலக்கணம் வெற்றியோடு முழுமையாக விளங்குகிறது.

குறைந்த எழுத்துருக்களிலும் மிக அழகான ஆழமான பொருள் அளிக்கும் சம்ஸ்கிருத மொழியின் உணர்வுபூர்வமான பெருஞ்செல்வம் பல அமைப்புகளின் லட்சியத்தை குறிக்கும் வாக்கியங்களாக விளங்குகிறது. அதனால்தான் சம்ஸ்கிருதம் அமிர்த மொழி.

  1. ஆயுள் காப்பீட்டு திட்டம் – யோக க்ஷேமம் வஹாம்யஹம் – பகவத் கீதை
  2. மதராஸ் ரெஜிமென்ட் இந்திய ராணுவம் – ஸ்வதர்மே நிதானம் ஸ்ரேய: – பகவத் கீதை
  3. இந்திய அரசாங்கம் – சத்தியமேவ ஜெயதே – மாண்டூக்ய உபநிஷத்.
  4. சுப்ரீம் கோர்ட் – யதோதர்மஸ் ததோஜய: – மகாபாரதம்
  5. ஆகாசவாணி – பஹுஜன ஹிதாய பஹுஜன சுகாய – பௌத்த நூல்
  6. கார்ப்பரேஷன் வங்கி – சர்வே ஜனா: சுகினோ பவந்து – சாந்தி மந்திரம்
  7. லோக்சபா – தர்மசக்ர ப்ரவர்தாய – லலிதா விஸ்தரம்
  8. ஹைதராபாத் சென்ட்ரல் யூனிவர்சிட்டி – சா வித்யா யா விமுக்தே – விஷ்ணுபுராணம்
  9. காசி பல்கலைக்கழகம் – வித்யயா அம்ருத மச்யுதே – ஈசாவாஸ்ய உபநிஷத்
    1௦. பாரதீய வித்யா பவன் – ஆனோ பத்ரா: கருதவோ யாந்து விஸ்வத: – ருக்வேதம்
  10. இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் – அதிதி தேவோ பவ – தைத்திரீய உபநிஷத்
  11. உத்தர பிரதேஷ் காவல்துறை – பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்- பகவத்கீதை
    (தொடரும்)

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version