― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகள்ள உறவை நல்ல உறவு ஆக்குகிறதா உச்ச நீதிமன்றம்?

கள்ள உறவை நல்ல உறவு ஆக்குகிறதா உச்ச நீதிமன்றம்?

- Advertisement -

திருமணத்திற்கு வெளியே ஆன பாலுறவு (Adultry) குறித்த உச்ச நீதி மன்றத் தீர்ப்புக் குறித்து பேஸ்புக்கில் எழுதப்பட்டிருக்கும் பதிவுகளைப் பார்த்தேன். பலவும் தீர்ப்பை முழுதும் உள்வாங்கிக் கொள்ளாமல் எழுதப்பட்டுள்ளன. பெண்கள் திருமணத்திற்கு வெளியே பால் உறவு கொள்ளலாம், அதைக் கண்டு கொள்ளமாட்டோம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டதைப் போல பல்ர் எழுதியிருக்கிறார்கள்.

உண்மையில் தீர்ப்பு பெண்களை முதன்மைப்படுத்தியது அல்ல, ஆண்களைப் பற்றியது
Adultry சட்டத்தின்படி பெண்கள் தண்டிக்கப்பட முடியாது

அரசமைப்புச் சட்டத்தின் 497ஆவது பிரிவு இன்னொருவரது மனைவியுடன் ஒருவர் அந்த மனைவியின் கணவரது ஒப்புதல் இல்லாமல் பாலுறவு கொண்டால் அது பாலியல் வல்லுறவு (Rape) என்று கருதப்பட வேண்டும், உறவு கொண்ட நபருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ அளிக்கப்பட வேண்டும்; அந்தச் செயலுக்குத் துணை போனர் என்று அந்த மனைவி தண்டிக்கப்படக் கூடாது என்று சொல்லியது.

// Adultery.—Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offense of rape, is guilty of the offense of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.//

தனது மனைவியோடு உறவு கொணடவன் மீது வழக்குத் தொடுக்கும் உரிமை கணவனுக்குத்தான் உண்டு

இந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு நான்கு விவாதத்திற்குரிய விஷயங்களைக் கொண்டிருக்கிறது
1.அயலானோடு பாலுறவு கொண்ட மனைவி குற்றத்திற்குத் துணை போனவர் அல்ல என்பது சரியா?
2.கணவருடைய சம்மதத்தோடு அயலான் அவரது மனைவியோடு பாலுறவு கொண்டால் அது குற்றமாகாது என்பது சரியா?
3.வழக்குத் தொடுக்கக் கணவனுக்குத்தான் உரிமை என்பது மனைவி அவனது உடமை என்ற நிலையை உறுதிப்படுத்துகிறதே?
4. திருமணமான ஆண், திருமணமாகாத பெண்ணோடு உறவு கொண்டால் அது adultry என்பதாகாதா?

இன்று உச்ச நீதி மன்றம் அரசமைப்புச் சட்டப் பிரிவை செல்லாததாக்கியிருக்கிறது
அதாவது Adultry என்பது கிரிமினல் குற்றம் அல்ல என்கிறது. அதாவது அடல்ட்ரியில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஒரு relief அளித்திருக்கிறது (பெண்ணுக்கு அந்த விலக்கு ஏற்கனவே இருந்து வருகிறது)

என்றாலும், அடல்ட்ரி சிவில் குற்றம். அதனடிப்படையில் மணவிலக்கு கோர முடியும். அதில் மாற்றமில்லை.

– மாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version