― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஜோதிடம்பஞ்சாங்கம்பஞ்சாங்கம் செப்.17 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம் செப்.17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

- Advertisement -
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம்: செப்.17

ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம

||श्री:|| 

!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்

!!ஸ்ரீ:!!

பஞ்சாங்கம்
ஆவணி ~ 31 (17.9.2023 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ சோபக்ருத் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ வர்ஷ ருது.
மாதம்~ ஆவணி மாஸம் { ஸிம்ம மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 10.47 am வரை த்விதியை பின் த்ருதியை
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 10.33 am வரை ஹஸ்தம் பின் சித்திரை
யோகம் ~ ப்ராம்யம்
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30. நல்லநேரம் ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.06
சந்திராஷ்டமம் ~ கும்பம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ த்ருதியை
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்

பிற்பகல்

12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்

மாலை

4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (17-09-2023) ராசி பலன்கள்

மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!


உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மனக் குழப்பத்தால் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அசதிகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அஸ்வினி : பொறுப்புகள் மேம்படும்.
பரணி : வரவுகள் உண்டாகும்.
கிருத்திகை : ஒத்துழைப்பு ஏற்படும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!


மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
மிருகசீரிஷம் : முயற்சிகள் சாதகமாகும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!


உடல் ஆரோக்கியம் சீராகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வருமான நிலையில் திருப்தி உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : வாய்ப்புகள் அமையும்.
புனர்பூசம் : பொறுப்புகள் கிடைக்கும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!


மற்றவர்களின் கருத்துகளை பகுத்தறிந்து உண்மையைப் புரிந்து அதற்கு ஏற்ப முடிவு எடுக்கவும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சிறு சிறு பயிற்சிகளால் உடல்நலம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் திடீர் மாற்றங்களால் மேன்மை ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : பகுத்தறிந்து செயல்படுவீர்கள்.
பூசம் : உடல்நலம் மேம்படும்.
ஆயில்யம் : மேன்மை ஏற்படும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!


ரத்தினம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். கூட்டாளிகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபார விருத்திக்கான சூழல் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

மகம் : மேன்மை ஏற்படும்.
பூரம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரம் : விருத்தி உண்டாகும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!


பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

உத்திரம் : பொறுப்புகள் மேம்படும்.
அஸ்தம் : சந்திப்பு ஏற்படும்.
சித்திரை : தேடல் பிறக்கும்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!


தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். நீண்ட தூரப் பயண சிந்தனைகள் மேம்படும். பொன், பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். முயற்சிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : ஒத்துழைப்பு ஏற்படும்.
சுவாதி : வாதங்களைத் தவிர்க்கவும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!


கலைப் பொருட்கள் மீது தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விளையாட்டான பேச்சுக்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். தைரியம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : தெளிவு ஏற்படும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!


சிந்தித்துச் செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதளவில் ஒருவிதமான திருப்தி ஏற்படும். குடும்பத்தினரிடம் பொழுதுகளைச் செலவு செய்வீர்கள். உத்தியோகப் பணிகளில் நிதானம் வேண்டும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூராடம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!


எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் மேம்படும். புதுமையான சிந்தனைகள் உண்டாகும். அனுபவ ரீதியாக சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

உத்திராடம் : உதவிகள் சாதகமாகும்.
திருவோணம் : சிந்தனைகள் பிறக்கும்.
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!


உடனிருப்பவர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகளால் கையிருப்புகள் குறையும். விருப்பமில்லாத சில சந்திப்புகள் ஏற்படும். எண்ணிய பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சதயம் : மாற்றம் ஏற்படும்.
பூரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!


முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : மதிப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.
ரேவதி : வாய்ப்புகள் சாதகமாகும்.


தினம் ஒரு திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)

பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.


தினம் ஒரு திருமுறை

மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே

விளக்கவுரை

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்


தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)

விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.

5 COMMENTS

  1. தினசரி பஞ்சாங்கம் மற்றும் தினப் பலன்கள் உபயோகமாக உள்ளது. நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,133FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,904FollowersFollow
17,200SubscribersSubscribe
Exit mobile version