― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுஎண்ணற்ற பலனை அள்ளித்தரும் குப்பை மேனி இலை!

எண்ணற்ற பலனை அள்ளித்தரும் குப்பை மேனி இலை!

- Advertisement -

இந்தியா முழுவதும் காணப்படும் குப்பைமேனி செடி, ஒரு அடி உயரமுள்ளது. சிறிய, பல கிளைகளுடன் அடர்த்தியான செடி. இதன் இலையில் ஒரு ரூபாய் அளவு மஞ்சள் புள்ளிகள் காணப்படலாம். இலையின் ஓரம், ரம்பத்தின் பற்கள் போலிருக்கும். பூக்கள் வெண்மையாக, மிகச்சிறியதாக இருக்கும். காய்கள் மிளகு போல், பச்சையாக இருக்கும்

மருத்துவ பயனுடைய பகுதி

இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.

தலைவலி

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட தலைவலி நீங்கும்.

குப்பைமேனி இலையை காயவைத்து பொடியாக்கி மூக்கில் இட தலைவலி நீங்கும். அல்லது முப்பைமேனி இலையுடன் சாம்பிராணி சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்.

தோல் நோய்

குப்பைமேனி இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் மற்றும் கொழுப்பைக் குறைக்கும்.

குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.

பவுத்திரம்

குப்பைமேனியை அப்படியே வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகைப் பொடியை நெய்விட்டு கலந்து 2 வேளை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர பவுத்திரம் குணமாகும்.

நாடாப்புழு, நாக்குப்பூச்சி

குப்பைமேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.

குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதே அளவு நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்

குப்பைமேனி இலையை சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல் வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் பூசக் குணமாகும்.குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். இதையே தலைவலிக்கும் தடவி வர குணமாகும்.

குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும். மேலும் குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.

குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வை போக்கி, உடல் நலம் பெறும்.
குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்

10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.

குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

சொறி, சிரங்கு நீங்க

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

எதிர்பாராத விதமாக உடலில் நமக்கு எங்காவது அடிபடும் போது அப்பகுதி சிலசமயம் அளவுக்கதிகமாக வீங்கிவிடுகிறது. அப்படியான சமயங்களில் குப்பைமேனி செடிகளின் இலைகளை ஒரு கையளவு பறித்து, நன்றாக அரைத்து வீக்கம் உள்ள பகுதிகளில் பற்று போட்டு வந்தால் வீங்கம் மட்டும் கடுமையான வலி போன்றவை குறையும்.

“கண்ணாடி விரியன்” பாம்பின் விஷம் மிகவும் சக்திவாய்ந்தது. இப்பாம்பினால் கடிபட்டவர்களுக்கு குப்பைமேனி இலைகளை நன்றாக நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால், விஷம் உடலில் வேகமாக பரவுவதை நிறுத்தும்.

புண்கள் எப்போதாவது ஏற்படும் சில காயங்கள் சில நாட்களில் புண்களாக மாறிவிடுகிறது. ரசாயனங்கள் நிறைந்த மருந்துகளை இந்த புண்களுக்கு தடவுவதற்கு பதிலாக குப்பைமேனி இலைகளை நன்றாக அரைத்து புண்களின் மீது பற்று போட்டு வந்தால் நீண்ட நாட்களாக ஆறாத புண்களும் விரைவிலேயே ஆறும். தழும்புகள் ஏற்படுவதையும் குறைக்கும்.

நீரிழிவு நோயாளிகள் சில சமயங்களில் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல், தங்களுக்கு விருப்பமான உணவுகளை அதிகம் சாப்பிட்டு விடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடலை பாதிக்கிறது. குப்பைமேனி இலைச்சாறு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மலேரியா என்பது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு நோயாகும் சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிடின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக்கூடியது மலேரியா நோய். இந்த நோய்க்கான ஆங்கில வழி மருந்தை உட்கொள்ளும் போது குப்பைமேனி இலைகள், சாறு போன்றவற்றை மருந்தாக உட்கொண்டு வந்தால் இந்நோய் கூடிய விரைவில் குணமாகும்.

நோய் எதிர்ப்பு குப்பைமேனி இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலிலி இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது.

தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது.

முடிநீக்கம் பெண்கள் சிலருக்கு உடலில் ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் பிரச்சனைகளால் முகத்தில் தேவையற்ற இடங்களில் முடிகள் உதிக்கின்றன. குப்பைமேனி இலைகளை மஞ்சள் தூள் மற்றும் கோரை கிழங்கு பொடியுடன் சேர்த்து முகத்தில் தடவி,அது காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும். இது போன்று தொடர்ந்து செய்து வர தேவையற்ற முடிகள் முளைப்பதை தடுக்கலாம்.

உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெய்யுடன் செய்து காய்ச்சி உடலுக்கு தேய்த்து வந்தால் உடல் வலி தீரும்.

குப்பைமேனியின் உலர்ந்த பொடியை ஒரு கிராம் வெந்நீரில் அல்லது தேனில் கலந்து கொடுக்க, கோழை வருவது மட்டும் அல்லாமல், இருமலும் உடனடியாகக் கட்டுப்படும்.

குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயம் பட்ட இடங்களுக்கு தடவினால் காயம் விரைவில் குணமாகும்.

புழுக்கொல்லி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் புழுக்களும் அதன் முட்டையும் முழுமையாக வெளியேறாது. இரவு எல்லாம் ஆசனவாயில் அரிப்புடன் இருக்கும். குழந்தைகளுக்கு, ஒரு டீஸ்பூன் குப்பைமேனி இலைச்சாறை மூன்று நாட்கள் மாலையில் கொடுக்க, புழுத்தொல்லை தீரும். மலக்கட்டை நீக்கி, மாந்தம் நீக்கி, சீரணத்தை சரியாக்கி, அதன் மூலம் புழு மீண்டும் வராது

குப்பைமேனி இலையுடன் பூண்டு சேர்த்து பாலில் 1 ஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி தீரும். உடல் குளிர்ச்சி பெறும்.

குப்பைமேனி ஒரு கீரை. வெளி உபயோகம் மட்டும் அல்லாது உள்மருந்தாகவும் பயன் தரக்கூடியது. நெஞ்சுச் சளியுடன் வீசிங் எனும் இரைப்பும் தரும் நிலையில், குப்பைமேனி ஒரு சிறந்த கோழை அகற்றியாகச் செயல்படும்.

மூட்டு வலிக்கு குப்பைமேனி இலையை சாறு பிழிந்து நல்லெண்ணெய் காய்ச்சி தேய்த்து வர மூட்டு வலி குணமாகும். மூல நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை துவையலாக செய்து சாப்பிட்டுவர குணமாகும்.

குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது. பாத வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்படும். வெடிப்பில் தூசி புகுந்து துன்புறுத்தும். வலியை ஏற்படுத்தும். இதை பித்த வெடிப்பு என்றும் சொல்வது வழக்கம். பித்தத்தை சமன்படுத்தும், பாதவெடிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி, சீரகம், தனியா, பனங்கற்கண்டு. செய்முறை: இஞ்சி ஒரு துண்டு நசுக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டி இந்த தேனீரை குடித்துவர ரத்த ஓட்டம் சீராகும். பித்தம் அதிகமாக சுரப்பதை தடுத்து பித்தசமனியாக விளங்குகிறது. பசியை முறைப்படுத்துகிறது. தோல் ஆரோக்கியம் பெற்று வெடிப்புகள் விலகிபோகும்.

குப்பைமேனியை பயன்படுத்தி பாதவெடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

குப்பைமேனி, விளக்கெண்ணெய், மஞ்சள் பொடி. ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு பூசிவர பாதவெடிப்பு சரியாகும். பாதம் அழகுபெறும். குப்பைமேனி உடலை பொலிவுபெற செய்ய கூடியது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கும். அத்திமரப்பட்டை, புங்கமரப்பட்டையை பயன்படுத்தி பாதவெடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.

இலையை ஆமணக்கு விட்டு தாளித்து தினசரி காலையில் 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் மூலம் – ஆசவாய் அரிப்பு குணமாகும். இலைப் பொடியுடன் சிறிது சீனி சேர்த்து பசும்பாலில் 1 ஸ்பூன் அளவு சாப்பிட எப்படிப்பட்ட மார்பு வலியும் நீந்கி விடும். உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

கொட்டைப் பாக்கு அளவு இதன் வேரை அரைத்து பசும்பாலில் கலந்து 3 நாட்கள் கொடுத்து உப்பு இல்லா பத்தியமாக இருந்தால் எலிக்கடி விஷம் நீங்கும்.

நல்லெண்ணெயில் இலைச் சாற்றை கலந்து காய்ச்சி மூட்டு வலிக்கு பூசினால் வலி தீரும்.

ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.

கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து சிரங்குகள் மீது தடவி வர விரைவில் சிரங்கு அகன்றுவிடும். தேள், பூரான், வண்டுக்கடி வீக்கத்தின் மீது இலையை அரைத்துப் பூசிவர விஷம் முறியும்.

பெண்கள் குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் கழுவிவர, முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும்.

10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டுவர, தேக அழகும், ஆரோக்கியமும் ஏற்படும்.

குப்பைமேனி இலைகளைக் கொண்டு ஒரு தேநீர் தயாரிக்கலாம். 200மிலி தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியவுடன், அதில் சில குப்பைமேனி இலைகளைப் போடவும். பின்பு அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். இந்த நீரை ஆறியவுடன் அப்படியே பருகலாம் அல்லது வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசியவுடன் இந்த நீரால் ஒரு முறை தலையை அலசலாம்.

துவையல்

முதலில் குப்பைமேனி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு வாணலியில் எண்ணைய் விட்டு கொஞ்சம் கடுகு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

பின்பு நறுக்கிய இலைகளை வாணலியில் போட்டு நன்கு தாளித்து பின்பு சிறிது நீருடன் மிக்சியில் அடித் தால் குப்பைமேனி துவையல் ரெடி.

கஷாயம்

வாணலியில் குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக் கரைத்து வைத்து, சுண்டக் காய்ச்ச வேண்டும்.

இதில் உப்பு ‘பூர்த்து’ மிகுந்து விடும். இந்த உப்பை தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

இதன் பிறகு குப்பைமேனியில் இருந்து வடிந்த நீருடன் சிறிது மிளகு சேர்த்து கொதிக்க விட்டால் குப்பை மேனி கஷாயம் தயார்

குப்பைமேனி, கூந்தல் பாதுகாப்பில் பயன்படக் காரணம், இது கூந்தலின் எண்ணெய்ப் பதத்தை அதிகரித்து தருகிறது. மேலும், தீங்கு விளைவிக்கும் கூறுகளை வெளியேற்றுகிறது. இதனால் உங்கள் கூந்தலின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாகின்றன.

இந்த செடியின் நன்மைகளைப் பற்றி அறிந்தவர்கள், தாங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவில் சில இலைகளை சேர்த்து பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் அவர்கள் தயாரிக்கும் பேஸ் மாஸ்க், டானிக் இன்னும் பலவற்றில் இதனை சேர்த்து தயாரித்து பயன்படுத்துவார்கள்.

கூந்தல் முடி உதிர்வைத் தடுக்கிறது:

குப்பைமேனியை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது, இதனால் கூந்தலின் வேர்க்கால்கள் வலிமை அடைகிறது. இதனால் முடி உதிர்வது அல்லது உடைவது தடுக்கப்படுகிறது.

எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது:

தலை முடியில் எண்ணெய்பதத்தை நிர்வகிப்பது என்பது மிகவும் கடினமான செயல். இது ஒரு மிகப் பெரிய பிரச்சனையும் கூட, ஆனால் இதற்கு ஒரு தீர்வு உள்ளது. அதிகரித்த எண்ணெயப்பதத்தின் காரணத்தால் வெளியில் இருந்து தூசு மற்றும் இதர நச்சுகள் தலையில் குடியேறி விடுகின்றன. இதனால் கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, தலை முடியும் பிசுபிசுப்பாக மாறுகிறது. அதிர்ஷ்டவசமாக, குப்பைமேனி இலை, அதிகரித்த எண்ணெய்பதத்தை கட்டுப்படுத்துகிறது.

இது எப்படி சாத்தியப்படுகிறது?

உங்கள் கூந்தலில் உள்ள நச்சுகளை சுத்தம் செய்வதால் மற்றும் உச்சந்தலையில் எண்ணெய் பிசுபிசுப்பை அதிகரிக்கும் கிருமிகளுடன் எதிர்த்து போராடுவதால் இது சாத்தியப்படுகிறது.

கூந்தலை வலிமையாக்குகிறது:

மேலே கூறிய நன்மைகளால், கூந்தல் நல்ல முறையில் வலிமை அடைந்து வளர்ச்சி அடைகிறது. இதனால் தொடர்ந்து குப்பை மேனியை தலைக்கு பயன்படுத்தலாம். குப்பைமேனியில் ஊட்டசத்து மற்றும் கனிமங்கள் அதிக அளவில் உள்ளன. அது மட்டுமில்லாமல், இது கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்கும் ஆதாரமாக விளங்குகிறது.

கூந்தலை சுத்தம் செய்து, ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதால், கூந்தலின் அடர்த்தி அதிகரித்து கூந்தலின் தரமும் மேம்படுகிறது. இதனால் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஆகவே, குப்பைமேனியை கூந்தலுக்கு பயன்படுத்திய, ஒரு வாரத்திற்கு பிறகு, உங்கள் கூந்தல் முன்பை விட ஆரோக்கியமாக மாறி இருப்பதை காணலாம். ஒரு மாதத்திற்கு பிறகு மெலனின் அதிகரித்திருப்பதையும் உங்களால் உணர முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version