― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுவைட்டமின் D குறைவா உங்களுக்கு? நீங்கள் செய்ய வேண்டியது!

வைட்டமின் D குறைவா உங்களுக்கு? நீங்கள் செய்ய வேண்டியது!

- Advertisement -

உடலுக்குத் தேவையான வைட்டமின்களுள் மிகவும் முக்கியமானது வைட்டமின் டி. ஏறத்தாழ 200 மரபணுக்களின் செயல்பாடுகளை வைட்டமின் – டி தான் கட்டுப்படுத்துகிறது. உடல் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திலும் வைட்டமின் டி- யின் பங்கு மிக முக்கியமானது.

உடலில் ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளுள் அதிகம் ஏற்படுவதும் வைட்டமின் டி தான். 2018 – ம் ஆண்டு சுகாதாரத்துறை வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் 80 – 90 சதவிகிதம் பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைட்டமின் டி குறைபாடு அனைத்து வயது தரப்பினரையும் பாதித்துள்ளது. வைட்டமின் டி குறைபாட்டினால் இதய நோய், காச நோய்கள் உருவாகின்றன. உடல் ஆரோக்கியமாக இயங்க எப்போதும் வைட்டமின் டி சத்து அதிகம் இருக்கும் உணவுப் பொருள்களை உண்ணுவது அவசியம்.

எல்சேவியர் பொது சுகாதார இதழின் சமீபத்திய ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களை கோவிட் – 19 பாதிப்பு தீவிரமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகிய இரண்டு காரணங்களும் தான் வைட்டமின் டி குறைபாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சூரிய வெளிச்சத்தில் நாம் வெளிப்படாமல் இருக்கும் காரணம் தான் வைட்டமின் டி குறைபாட்டுக்கு மிகமுக்கியக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக நாம் வீட்டிலும், அலுவலகத்துக்குள் தான் பொழுதைக் கழிக்கிறோம். சூரிய வெளிச்சத்தில் நிற்பதென்பது அரிதான காரியமாக மாறிவிட்டது. நடைப்பயிற்சி மேற்கொண்டால் கூட சூரியன் மறைந்த பிறகு மங்கிய வெளிச்சத்தில் தான் ஓடுகிறோம். இந்தப் பழக்கம் தான் வைட்டமின் டி குறைபாட்டை அதிகப்படுத்திவிடுகிறது.

அதனால், வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். வைட்டமின் டி குறைபாட்டை வெளிப்படுத்தும் ஐந்து ஆபத்தான அறிகுறிகளை அறிந்துகொள்வோம்…

  1. காயங்கள் குணமாக நீண்டகாலம் ஆகுதல்

சர்க்கரை நோய் இருந்தால் மட்டுமல்ல வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தாலும் காயம் குணமாக நீண்ட காலம் ஆகும்.

  1. பலவீனமான தசைகள் மற்றும் வலி ஏற்படுதல்

நாம் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டுதான் பணிபுரிகிறோம். உடல் உறுப்புகளின் இயக்கம் தடைப்படுகிறது. இதனால் தேவையான அளவு வைட்டமின் டி உடல் உறுப்புகளால் நுகரப்படுவதில்லை. இது தசை நார் வலி, எரிச்சலை ஏற்படுத்தும். சில நேரங்களில் புண்கள் கூட ஏற்பட்டுவிடும்.

  1. முடி உதிர்தல்

அளவுக்கு அதிகமாக முடி உதிர்வது கூட வைட்டமின் டி குறைபாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த சீரமின் உற்பத்தி வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படுவதே காரணம் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

  1. மூச்சு வாங்குதல்

கொரோனா நோய்த் தொற்று மட்டுமல்லாமல் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் கூட சுவாச பிரச்னைகளும் சுவாச நோய்களும் ஏற்படும். இது சுவாசிக் குழாயில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

  1. உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தியை நாம் இழந்துவிடுவோம். அதனால், அடிக்கடி தொற்றுநோய்களுக்கு ஆட்படுவதும் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.

இந்தக் குறைபாட்டிலிருந்து தற்காத்துக்கொள்ள வைட்டமின் டி நிறைந்த உணவுப் பொருள்களைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக முட்டையின் மஞ்சள் கரு, மீன், பாலாடைக்கட்டி ஆகியவற்றை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொண்டு, தினமும் குறிப்பிட்ட அளவு நேரம் சூரிய வெளிச்சத்தில் நின்றாலே வைட்டமின் டி குறைப்பாட்டில் சிக்காமல் தவிர்த்துக்கொள்ளலாம்! உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்!

தினமும் ஒரு தம்ளர் பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தில் 20 சதவீதம் வரை பெற முடியும். பாலில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ரைபோஃப்ளேவின் உள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் பால் குடிப்பது அவசியம் என்கிறார்கள். பசும்பால் போன்று சோயா பாலிலும் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்திருக்கிறது.

பால் பொருள்களில் யோகர்ட் தினமும் சேர்த்து வரலாம். செயற்கை இனிப்புகள் கலந்து வெளியில் விற்கப்படும் யோகர்ட்டை வாங்காமல் வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

உணவு பொருள்களில் காளானில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. சூரிய ஒளியிலேயே வளரும் இந்த மஷ்ரூமில் வைட்டமின் பி1 பி2 பி5 சத்துகள், காப்பர் போன்றவை நிறைந்திருக்கிறது. அடிக்கடி இதை க்ரேவியாகவோ, பிரியாணியில் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். சூரிய ஒளியினால் திறந்த வெளியில் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மஷ்ரூம்களில் மட்டுமே வைட்டமின் டி நிறைந் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் உணவை அதிகம் விரும்புவார்கள். மீன் விரும்பும் பிரியர்கள் உண வில் அதிகப்படியாக சால்மன் மீன் சேர்த்துவருவது நல்லது. வைட்டமின் டி, கால்சியம், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த மீன் இது.

ஆய்வு ஒன்று கூறும்போது இந்த மீனை தொடர்ந்து சாப்பிடும் போது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதாக கூறுகிறது. மற்ற மீன்களை காட்டிலும் இந்த மீனில் அதிகப்படியான வைட்டமின் டி இருக்கிறது என்பதால் அசைவம் உண்பவர்கள் இனி சால்மன் மீனை தேடி சாப்பிடுங்கள்.

பிரண்டை பிரண்டையில் வைட்டமின் டி சத்து உள்ளது. தினசரியும் பிரண்டையை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளலாம். நிலத்தடி நீரில் நிறைய சத்துக்கள் இருப்பதால் அதை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். மினரல் வாட்டர் என்ற பெயரில் சத்தில்லாத தண்ணீரை உற்பத்தி செய்து குடித்து வருகிறோம். சத்தான நீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்பதும் மருத்துவர்கள் அறிவுரை

​ ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு பழச்சாறு புளிப்பும் இனிப்பும் நிறைந்த இந்த ருசிக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதால் இதை தினமும் எடுத்துகொள்ளலாம். தினமும் காலை உணவோடு ஒரு தம்ளர் ஆரஞ்சு பழச்சாறையும் எடுத்துகொள்ளுங்கள்.இது வைட்டமின் மற்றும் கால்சியம் நிறைந்தது என்பதால் வளர்ந்த நாடுகள் இதை வலியுறுத்துகின்றன. சிலருக்கு பால் குடித்தால் ஒவ்வாமை பிரச்சனை உண்டாகும் இதற்கு மாற்றாக வைட்டமின் டி மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழச்சாறு நாளுக்கு வேண்டிய சத்தை கொடுத்துவிடும்.

​ முட்டை

மீன் வாசனையே பிடிக்காதே என்றும் சிலர் சொல்வதுண்டு. அவர்களுக்கு இந்த முட்டையின் மஞ் சள் கரு ஓரளவு பலனளிக்கவே செய்யும். முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. சூரிய ஒளி படாமல் ஹார்மோன் ஊசிகள் உதவியால் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளின் முட்டையில் இந்த வைட்டமின்களை எதிர்பார்க்கமுடியாது. நாட்டு கோழிகள் வெயி லில் அலைந்து திரிந்து திறந்த வெளியில் வளரும் கோழிகளிடமிருந்து பெறும் முட்டைகளை எடுத்துகொள்வது நிச்சயம் பலனளிக்கும்.

ஓட்ஸ்

தானியங்கள் எப்போதுமே உடலுக்கு சத்துகளை அளிப்பவையே. அந்த வகையில் ஓட்ஸ் உணவு வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் கொண்டிருக்கும் உணவு. இது உடல் ஆரோக் கியத்தையும் அதிகரிக்கிறது. வாரம் மூன்று நாள் காலை உணவாக ஓட் மீல் எடுத்துகொள்வது உங்களுக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின் டி அளவை ஓரளவு கொடுக்கும்.

​வைட்டமின் டி உள்ள உணவு வகைகள் எல்லாமே உங்களுக்கு வேண்டிய வைட்டமின் சத்தை கொடு க்க கூடியதுதான். ஆனால் பைசா செலவில்லாமல் தேவைக்கேற்ப வைட்டமின் டி சத்து தருவது சூரிய ஒளி மட்டுமே. பிள்ளைகள் வளரும் போதே அவர்களை சூரிய ஒளி படாமல் வீட்டிற்குள் வளர்ப் பதை தவிர்த்து திறந்த வெளியில் விளையாட அனுமதியுங்கள். தினமும் காலை 10 .30 மணி முதல் 12 மணிக்குண்டான நேரத்தில் பத்துநிமிடங்களாவது உடலில் வெயில்பட அனுமதியுங்கள்.

அதிக சன்ஸ்க்ரீன் க்ரீம்களை பயன்படுத்த வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. சூரிய ஒளியும் கூடவே வைட்டமின் டி நிறைந்த உணவும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்கிறார்கள் அனுபவமிக்க மருத்துவர்கள்.

வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகளும் விளைவுகளும் கண்டிப்பாக அதிகப்படியான உபாதைக ளையே ஏற்படுத்தும். இயற்கையை தவிர்க்க முற்பட்டதால் தான் வெப்பமிகுந்த நாட்டில் வாழும் போதே எளிதாக கிடைக்க கூடிய இந்த வைட்டமினை இழந்து குறைபாட்டோடு வாழ்கிறோம். இனியாவது இந்த குறைபாடு நேரமால் பார்த்துகொள்வோம்.

கண்பார்வை தெளிவாக மற்ற வைட்டமின் சத்துக்களைக் காட்டிலும் வைட்டமின் டி சத்து மனிதர்களின் கண்பார்வைக்கு மிகவும் அத்தியாவசிய வைட்டமின் தேவையாக இருக்கிறது.

சொல்லப்போனால் வைட்டமின் டி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே பலருக்கும் இரவு நேரத்தில் தெளிவாக பார்க்க முடியாத குறைபாடான மாலைக்கண் வியாதி ஏற்படுகிறது.

இந்தக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க வைட்டமின் டி ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இயற்கையாக ஏற்படும் கண்திசுக்கள் வளர்ச்சி குறைவதை தடுத்து, கண் பார்வை திறனை தெளிவாகவும் செய்ய வைட்டமின் டி ஊட்டச்சத்து உதவுவதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன. ப

ுற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க நமது உடலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் செல்களின் அபரிமிதமான வளர்ச்சியால் புற்று நோய் ஏற்பட வழிவகுக்கிறது. மனித உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை சரியான விகிதத்தில் கட்டுப்படுத்தும் திறன் வைட்டமின் டி ஊட்டச்சத்து பெற்றிருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் டி ஊட்டச்சத்து அதிகம் உட்கொள்ள, அவர்களின் உடலில் செல்களின் வளர்ச்சி உடலின் கட்டுப்பாட்ட்டிற்குள் இருக்க உதவுகிறது. குறிப்பாக காய்கறிகளில் இருந்து கிடைக்கப்பெறும் வைட்டமின் டி ஊட்டச்சத்து புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்றுநோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொற்று நோய்களை தடுக்க வைட்டமின் டி ஊட்டச்சத்து நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மிகுந்த வலிமை உடையதாக செய்கிறது. மேலும் ஈரப்பதம் மிக்க சவ்வு படலங்கள் கொண்ட உறுப்புகளான கண்கள், நுரையீரல், வயிறு மற்றும் பிறப்புறுப்புகளில் வெளியிலிருந்து ஏற்படக்கூடிய கிருமி தொற்றுகளை அழிப்பதற்கு பேருதவி புரிகிறது.

மேலும் வைட்டமின் டி ஊட்டச்சத்து நமது உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. ரத்தத்தில் நுழைகின்ற அந்நிய பொருட்கள் மற்றும் நோய்த் தொற்றுக் கிருமிகளை உடனடியாக சென்று தாக்கி அழிக்க செய்ய வைட்டமின் டி சத்து உதவுகிறது.

முகப்பருக்கள் பிரச்சனை தீர முகப்பரு என்பது பருவ வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பாதிப்பில்லாத குறைபாடாக இருக்கிறது. அதிக அளவில் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, நீடித்த மலச்சிக்கல் போன்றவை முகப்பரு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. முகத்தில் இருக்கின்ற செபேஷியஸ் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படும் போது முகப்பருக்கள் ஏற்படுகின்றன.

வைட்டமின் டி ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அந்த செபேஷியஸ் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து, முகத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து முகப்பரு பிரச்சனை ஏற்படாமல் முற்றிலும் தடுக்கிறது. எலும்புகள் உறுதி பெற வயது, கால்சியம் சத்து மற்றும் வைட்டமின் டி சத்து ஆகியவை ஒரு நபரின் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன.

எனினும் வைட்டமின் டி சத்து எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மைக்கு பக்கபலமாக இருக்கிறது. மேலை நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி வைட்டமின் டி ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்படும் ஆபத்து 6 சதவிகிதம் அளவு குறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையாகவும், உறுதியாகவும் இருக்க மற்ற ஊட்டச்சத்துகளை உண்ணும் போது வைட்டமின் டி ஊட்டச்சத்தையும் சேர்த்து உண்பதால் நன்மை பயக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. இனப்பெருக்கக் குறைபாடுகள் வைட்டமின் டி சத்து திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு இன்றியமையாத ஊட்டச்சத்து தேவையாக இருக்கிறது.

சிறுநீரக கோளாறு, கல்லீரல் கோளாறு, நீரிழிவு நோயாளிகளை தாக்கும் கொரோனா வைரஸ் எளிதில் உயிரைக் குடிக்கிறது. எனவேதான் சிறுநீரகம், கல்லீரல் நோய் பாதிப்பு உள்ளவர்கள் வைட்டமின் டி சத்து உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். தினசரியும் நமது உடம்பில் காலையிலும் மாலையிலும் சூரிய ஒளி படும் வகையில் நடைபயிற்சி செய்தாலே போதும் வைட்டமின் டி அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த வைட்டமின் டி சத்து ஆண்களின் உடலில் உயிர் அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து மலட்டுத்தன்மையை போக்குகிறது. பெண்களுக்கு வைட்டமின் டி ஊட்டச்சத்து கருமுட்டைகளின் சீரான வளர்ச்சியை ஊக்குவித்து, கருத்தரிதலுக்கு பேருதவி புரிகிறது. கருவில் வளர்கின்ற குழந்தை எந்த ஒரு குறைபாடுகளும் இன்றி வளர்வதற்கும் உறுதுணையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version