Homeஇந்தியாபுதிய கல்விக் கொள்கை குறித்த பிரதமர் மோடியின் முழுமையான உரை!

புதிய கல்விக் கொள்கை குறித்த பிரதமர் மோடியின் முழுமையான உரை!

modi-speech
modi-speech

PM ADDRESS- NEW EDUCATION POLICY
(07.08.2020 – FRIDAY)

வணக்கம்.  அமைச்சரவையில என்னோட துணைவர்கள்,  ரமேஷ் போக்ரியால் நிஷங்க் அவர்களே, சஞ்ஜய் தோத்ரே அவர்களே, நேஷனல் எடுகேஷன் பாலிஸி, தேசிய கல்விக்கொள்கையில, மகத்தான பங்களிப்பை அளிச்சிட்டு வர்ற, நாட்டின் புகழ்மிக்க விஞ்ஞானி, டா. கஸ்தூரிரங்கன் அவர்களே, மேலும் அவரோட குழுவினர், இந்த மாநாட்டில பங்கெடுத்து வரும், துணைவெந்தர்கள், பிற கல்வித்துறை வல்லுனர்க்ளே, இதர பெரியோர்களே, உங்க எல்லாருக்கும் பலப்பல வாழ்த்துக்கள்.  

நேஷனல் எடுகேஷல் பாலிஸி, தேசிய கல்விக்கொள்கை தொடர்பா, இன்றைய இந்த நிக்ழ்ச்சி, மிகவும் மகத்துவம் வாய்ந்தது.   இந்த மாநாடு வாயிலா, பாரத நாட்டோட கல்விச் சூழலுக்கு, நேஷனல் எடுகேஷன் பாலிஸி, தேசிய கல்விக் கொள்கையோட, பல்வேறு கோணங்களைப் பத்தி, விரிவான தகவல்கள் கிடைக்கும்.   எத்தனை தகவல்கள், அதிகத் தகவல்கள், அதிகத் தெளிவா ஆகுமோ, அந்த அளவுக்கு சுலபமா, இந்த தேசியக் கல்விக் கொள்கையை, அமலாக்கமும் செய்ய முடியும்.  

நண்பர்களே மூன்று நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட தொடர் ஆய்வுகள் அலசல்களுக்குப் பிறகு, இலட்சக் கணக்கான ஆலோசனைகள் விவாதங்களுக்குப் பிறகு, தேசியக் கல்விக் கொள்கை, ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கு.   இன்னைக்கு, நாடு முழுவதிலயும், பரவலான விவாதங்கள் நடைபெற்று வருது.   பல்வகைத் துறைகளைச் சேர்ந்தவங்க, பல்வேறு கோட்பாடுகளை உடையவங்க, தங்களோட கருத்துக்களை முன்வைக்கறாங்க, தேசியக் கல்விக் கொள்கையை ஆய்வு செய்திட்டு வர்றாங்க.  

இது ஒரு  ஆரோக்கியமான விவாதம்.   இது எந்த அளவுக்கு அதிகம் நடைபெறுதோ, அந்த அள்வு அதிக ஆதாயம், தேசிய கல்விக்கொள்கைக்கு கிடைக்கும்.   மேலும் ஒரு சந்தோஷமான விஷயம் எனென்னா, தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்த பிறகு, நாட்டின் எந்த ஒரு துறையிலேர்ந்தும், எந்த ஒரு பிரிவைச் சேர்ந்தவங்க கிட்டேர்ந்தும், ஒரு விஷயம் பேசப்படலை, அதாவது இதில, ஏதோ ஒரு சார்பு இருக்கு அப்படீன்னு.    

அல்லது, இது ஒருதலைப்பட்சமானதுன்னு.   இது ஒரு குறியீடும் கூட.   என்னென்னா, மக்கள் பல ஆண்டுகளா, பலகாலமா தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கற கல்வி அமைப்புல, என்ன மாற்றங்களை விரும்பினாங்களை, அவங்களால, இப்ப அவற்றைப் பார்க்க முடிஞ்சிருக்கு.    

இப்ப, சிலரோட மனங்கள்ல, ஒரு கேள்வி ரொம்ப இயல்பாவே எழ வாய்ப்பிருக்கு.   அதாவது இத்தனை பெரிய மாற்றத்தை, காகிதத்தில என்னமோ வடிச்சாச்சு, ஆனா இதை அடிமட்டத்தில எப்படி அமல் செய்யப் போறாங்க?   அதாவது, இப்ப எல்லாரோட பார்வையும், இதோட அமலாக்கம் மேல தான் இருக்கு.    

இந்த சவாலைப் பார்க்கும் வேளையில, அமைப்புகளை உருவாக்க, எங்க மாற்றங்கள் செய்யத் தேவை இருக்கோ, அவற்றை, நாம எல்லாரும் இணைஞ்சு செய்தாகணும், இதைச் செய்தே ஆகணும்.   நீங்க எல்லாரும், தேசிய கல்விக்கொள்கையோட அமலாக்கத்தில, இந்தப் பணியில, நேரடியா ஈடுபட்டிருக்கறவங்க.    

ஆகையினால, உங்க எல்லாரோட பங்களிப்பும், ரொம்ப அதிகம் மட்டுமில்லை, ரொம்ப முக்கியமானதும் கூட.    இன்னொரு புறம், அரசியல் உறுதிப்பாடு விஷயத்தில, நான் முழுமையான உறுதியோட இருக்கேன், நான் முழுமையா உங்களுக்குத் துணையா இருக்கேன்.  

நண்பர்களே, ஒவ்வொரு நாடும், தன்னுடைய கல்விமுறையை, தன்னோட தேசிய விழுமியங்களோட, இணைச்சுக்கிட்டு, தன்னுடைய தேசிய இலக்குகளுக்கு ஏற்ப, மாற்றங்களை ஏற்படுத்திக்கிட்டு, முன்னேற்றப் பாதையில செல்லுது.   இது எதைக் குறிக்குதுன்னா, நம்ம தேசத்தோட கல்விமுறை,  தன்னுடைய தற்கால, மற்றும் எதிர்காலத் தலைமுறைகளோட, எதிர்காலத்தை தயாரா வைக்கணும், எதிர்காலத்தைத் தயார் செய்யணும்.  

பாரதநாட்டு நேஷனல் எடுகேஷன் பாலிஸி, தேசியக் கல்விக்கொள்கையோட அடிப்படையும் கூட, இந்த எண்ணத்தைக் கொண்டது தான்.   தேசிய கல்விக் கொள்கை, 21ஆம் நூற்றாண்டு பாரதநாட்டோட, புதிய இந்தியாவோட அடித்தளத்தை ஏற்படுத்த இருக்குது.   21ஆம் நூற்றாண்டு பாரதத்துக்கு, நமது இளைஞர்கள், இந்த இளைய தலைமுறையினருக்கு, எந்த மாதிரியான கல்வி தேவையானதோ, எந்த மாதிரியான திறன்கள் தேவை, தேசியக் கல்விக் கொள்கையில, இந்த மாதிரியான விஷயங்கள் மேல சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருக்கு. 

பாரதத்தை, வலுவான நாடாக ஆக்க, வளர்ச்சிக்கான புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்ல, பாரதநாட்டு குடிமக்களை, மேலும் அதிகாரம் பஙக்ளிப்பு உடையவங்களா ஆக்க, மேலும் சந்தர்ப்பங்களுக்கு தகுதியானவங்களா அவங்களை ஆக்க, இந்தக் கல்விக் கொள்கையில, விசேஷ அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கு.  

இப்ப பாரதநாட்டின் மாணவன், அவர் தொடக்கக் கல்விநிலையில இருந்தாலும், சரி, அல்லது கல்லூரியிலயோ, அறிவியல்ரீதியான கல்வியைக் கற்பாரு.   வேகமா மாறிவரும் காலம், மற்றும் வேகமா மாறக்கூடிய தேவைகளுக்கு ஏத்தமாதிரி படிக்கும் போது, அப்ப அவங்களால, நாட்டை உருவாக்கும் பணியில, ஆக்கப்பூர்வமான பங்களிப்பை சிறப்பா அளிக்க முடியும்.  

நண்பர்களே, கடந்த பல ஆண்டுகளாகவே, நம்மோட கல்விமுறையில, பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்த்தப்படலை.   விளைவு என்னாச்சு?   நம்மோட சமூகத்தில, தெரிந்து கொள்ளும் ஆர்வம், மற்றும் கற்பனைத் திறன் மூலக்கூறுகளை, ஊக்கப்படுத்தறதுக்கு பதிலா, ஏட்டுக்கல்விக்கு மட்டுமே ஊக்கமளிக்கப்பட்டு வந்திருக்கு. 

சில சமயம் மருத்துவராக அலைமோதல், சில சமயத்தில பொறியாளர் ஆக தள்ளுமுள்ளு, சில சமயம் வக்கீல் ஆக அலைமோதல்,    ஆர்வம், திறமை, மற்றும் தேவை பத்தின சரியான மதிப்பீடு, இவை செய்யப்படாம, மந்தை மனப்பான்மையிலேர்ந்து, கல்வியை வெளியே கொண்டு வர்றது முக்கியமா இருந்திச்சு.  

நம்மோட மாணவர்கள் கிட்ட, நம்ம இளைஞர்கள் கிட்ட, நுண்ணாய்வு சிந்தனை, மற்றும் புதுமையான சிந்தனை, இவை எப்படி மலரமுடியும்?   அதாவது, நம்ம  கல்வியில, பேரார்வம் ஏற்பாத வரை, கல்வியோட தத்துவம் ஏற்படாத வரை, கல்விக்கான நோக்கம் இல்லாதவரை ஏற்படாது. 

நண்பர்களே,  இன்னைக்கு குருதேவ் ரவீந்திரநாத் டகோரோட நினைவு நாளும் கூட.   அவரு சொல்லுவாரு, உயர்வான கல்வி எதுன்னு சொன்னா, அது நமக்கு, வெறும் தகவல்களை மட்டும் அளிக்கறதில்லை, மாறாக, நம்ம வாழ்க்கையை ஒட்டுமொத்த இருப்போட, இணக்கத்தை உண்டாக்குது அப்படீம்பாரு.   உறுதியா சொல்றேன், தேசியக் கல்விக்கொள்கையோட பரந்த நோக்கம், இதோட தொடர்புடையது தான்.  

இதன் பொருட்டு, பகுதிபகுதியா சிந்திக்கறதுக்கு பதிலா, ஒரு முழுமையான கண்ணோட்டத்துக்கான தேவை இருந்திச்சு.   இதைத் தான், முன்னிறுத்துவதில, தேசியக்கல்விக் கொள்கை வெற்றிகரமா செஞ்சிருக்கு. 

நண்பர்களே, இன்னைக்கு நாம, தேசியக் கல்விக் கொள்கை, அமல்செய்யப்படும் நிலைக்கு வந்திருக்கையில, இந்த வேளையில, நான் வினாக்கள் பத்தின விவாதங்களை, உங்ககூட நிகழ்த்த விரும்பறேன்.   தொடக்கக் காலத்தில, இவை நம் முன்னால எழுப்பப்பட்டிருந்தன.  

அப்ப மிகப் பெரிய வினாக்களா ரெண்டு இருந்தன, அவை என்னென்னா, அதாவது நம்ம கல்விமுறையானது, நம்ம இளைஞர்களை, படைப்புத் திறன், பேரார்வம், மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு நிறைஞ்ச திசையில பயணிக்க, உத்வேகப்படுத்துதாங்கற கேள்வி.   நீங்க எல்லாரும், இந்தத் துறையில பல ஆண்டுகளா பணியாற்றிக்கிட்டு இருக்கீங்க….. நீங்க உங்க வாழ்க்கையை, கல்விக்காக அளிச்சிருக்காங்க அர்ப்பணம் செஞ்சிருக்கீங்க, உங்க எல்லாருக்கும், இதோட விடை ரொம்ப சிறப்பாவே தெரியும்.  

நண்பர்களே, நம்ம முன்னால வைக்கப்பட்ட ரெண்டாவது கேள்வி……. நம்மோட கல்விமுறையானது, நம்ம இளைஞர்களுக்கு, அதிகாரப் பங்களிப்பு அளிக்குதா?   நாட்டுல ஒரு, அதிகாரப் பங்களிப்பு உடைய சமூகத்தை ஏற்படுத்த, உதவிகரமா இருக்கா?   உங்க எலலருக்கும், இந்த வினாக்கள் பத்தியெல்லாம், நல்லாவே தெரியும், இதுக்கான விடைகள் பத்தியும் நல்லாவே தெரியும்.    

நண்பர்களே, எனக்கு இன்னைக்கு என்ன சந்தோஷம்னா, நாட்டோட national education policy, நாட்டோட தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கும் வேளையில, இந்த வினாக்கள் தொடர்பா, தீவிரமான முறையில செயல்பாடுகள் நடந்திருக்கு.   நண்பர்களே, மாறிவரும் காலச்சூழல்களுக்கு ஏத்தவகையில, ஒரு புதிய உலக அளவிலான ஒரு முறை, ஒரு புதிய வடிவம் அமைப்புகள்ல மாற்றம், ஒரு புதிய உலகத் தரத்திலான முறை, உருவாக்கம் அடைஞ்சிருக்கு.  

ஒரு புதிய, உலகத்தர நிலையும் கூட தீர்மானிக்கப்பட்டு வருது.   இதைக் கருத்தில் கொண்டு, பாரதநாட்டோட கல்விமுறை, தானே தனக்கு மாற்றங்களை செய்வதுங்கறது, இதுவும் மிகமிக முக்கியமான விஷயம்.   பள்ளிக்கூட பாடத்திட்டத்தோட, 10 ப்ளஸ் 2 முறையிலேர்ந்து விலகி இதைத் தாண்டி, இப்ப 5 ப்ளஸ் 3 ப்ளஸ் 3 ப்ளஸ் 4,  இந்தப் பாடத்திட்டத்துக்கு வடிவம் கொடுப்பது, இந்தத் திசையில மேற்கொள்ளப்பட்ட ஒரு அடி.  

நாம நம்ம மாணவர்களை எல்லாம், உலகக் குடிமக்களா ஆக்கவும் வேணும், அதே நேரம் இன்னொண்ணையும் கவனத்தில வைக்கணும், அதாவது அவங்க, உலகக் குடிமக்களாகவும் ஆகணும், இதோடு கூடவே, அவங்க தங்களோட வேர்களோட இணைஞ்சும் இருக்கணும்.   வேர்கள்லேர்ந்து உலகம் வரையும், மனிதன் தொடங்கி மனிதம் வரையும்,   கடந்த காலத்திலேர்ந்து நவீனகாலம் வரை, அனைத்துக் கூறுகளையும் ஒருங்கிணைச்சு, இந்த தேசியக் கல்விக் கொள்கைக்கான வடிவம், முடிவு செய்யப்பட்டிருக்கு.  

நணப்ர்களே, இந்த விஷயத்தில எந்த ஒரு விவாதமும் இல்லை…….. அதாவது குழந்தைங்க வீட்டுல பேசுற மொழியும், பள்ளியில அவங்க பாடம் கத்துக்கற மொழியும், ஒண்ணுபோல இருக்கும் போது, பிள்ளைங்களோட கற்றல் வேகம் ரொம்ப சிறப்பாவே அமையுது.   இது ஒரு பெரிய காரணம், இதன் காரணமா, எந்த அளவுக்கு முடியுமோ, 5ஆம் வகுப்பு வரை, பிள்ளைங்க அவங்களோட தாய்மொழியில மட்டுமே, படிப்பைச் சொல்லிக் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கு.  

இதன் காரணமா, பிளைங்களோட, அவங்களோட அடித்தளம், அதிக பலப்படுவது உண்மை.   அவங்களோட மேற்படி படிப்புகள்லயும் கூட, அவங்களோட அடித்தளம், மேலும் பலமானதா ஆகும்.   நண்பர்களே, இதுவரை இருக்கற நம்ம கல்விமுறை, இந்த முறையில, எதைப் பத்தி சிந்திப்பது?………

நான் ரொம்ப பொறுப்புணர்வோட பேசறேன், எதை சிந்தப்பதுங்கறது மேல தான் கவனம் இருந்திச்சு.  ஆனா, இந்தக் கல்விக் கொள்கையில, எப்படி சிந்திப்பது?, இதுமேல அழுத்தம் கொடுக்கப்பட இருக்கு.   இதை நான் ஏன் சொல்றேன்னா, இன்னைக்கு நாம இருக்கற நிலையில………. இந்த நிலை எப்படிப்பட்டதுன்னா, இங்க தகவல் மற்றும் உள்ளடக்கம், இவற்றுக்கு குறைவே இல்லை, ஒருவகையில, ஏராளமாவே இருக்குன்னு சொல்லலாம்.  

எல்லாவகையான தகவல்களும், உங்க மொபைல்லேயே கிடைக்குது.   இப்ப என்ன முக்கியம்னா, இதில எந்தத் தகவலை நாம அடையணும், எதைப் படிக்கணும்?    இந்த விஷயத்தைக் கருத்தில கொண்டு தான், தேசியக் கல்விக் கொள்கையில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கு, அதாவது படிப்புக்காக, மிக நீண்ட பெரிய பாடத்திட்டம் இருக்கு, ஏகபப்ட்ட புத்தகங்கள் இருக்கு, அவற்றோட தேவையை குறைக்கணும்.  

இப்ப முயற்சி என்னென்னா, பிள்ளைங்க கத்துக்கறதுக்காக, enquiry base, discovery base, மேலும், analysis base, முறைகள் மீது, அழுத்தம் அளிக்கப்பட்டிருக்கு.   இதன் காரணமா பிள்ளைங்க கிட்ட, கத்துக்கற ஆர்வம் அதிகரிக்கும்.   அவங்க வகுப்புகள்ல அவங்களோட, பங்கெடுப்பும்கூட அதிகரிக்கும்.  

நண்பர்களே, ஒவ்வொரு மாணவனுக்கும், ஸ்டூடெண்டுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைச்சே ஆகணும், அதாவது அவங்க தங்களோட ஆர்வத்தை முன்னெடுத்துப் போக முடியணும்.   அவங்க தங்களோட வசதிகள் தேவைகளுக்கு ஏத்தவகையில, ஏதோ ஒரு பட்டப்படிப்பு, இல்லை படிப்பை, கடைப்பிடிக்க முடியணும்.    ஒருவெளை அவரு விரும்பினா, அதைக் கைவிடவும் முடியணும்.  

அடிக்கடி என்ன ஆகுதுன்னா, ஏதோ ஒரு படிப்பு படிச்ந்ச பிறகு, மாணவர் ஒரு வேலைக்குப் போகும் போது, அப்பத்தான் அவரு உணர்றாரு, அதாவது அவரு படிச்சது, வேலைக்கான தேவையை நிறைவேத்தலைங்கற விஷயம்.   பல மாணவர்கள், வேற வேற காரணங்களால, இடையிலேயே, படிப்பைத் துறந்து வேலை பார்க்க வேண்டியிருக்கு.   இப்படிப்பட்ட அனைத்து மாணவர்களோட நலனை கருத்தில் கொண்டு, பலநிலையிலான நுழைவு வெளியேற்ற விருப்பத் தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கு.  

இப்ப மாணவர்கள், மீண்டும் தங்களோட படிப்போட இணைஞ்சுக்கலாம், தங்களோட வேலைத் தேவைகளுக்கு ஏத்த வகையில, அதிக திறமையான முறையில, படிக்க முடியும், கத்துக்க முடியும்.   இதில இன்னொரு கோணமும் உண்டு.   மாணவ்ர்களுக்கு மேலும் ஒரு சுதந்திரமும் உண்டு.   இப்ப அவங்க ஒரு படிப்பை, இடையிலேயே நிறுத்திட்டு, இன்னொரு படிப்பைத் தேர்ந்தெடுத்தா, அப்படியும் செய்யலாம்.   

இதுக்காக அவங்க, முந்தைய படிப்பிலிருந்து ஒரு குறிப்பிட்டட் காலத்துக்கு, விலகி இடைவெளி எடுத்துக்கலாம்.   மேலும் அவங்க, இன்னொரு படிப்பில சேர்ந்துஇக்கலாம்.   உயர்கல்வியை, ஓட்டத்திலிருந்து விடுவிக்க, பலநிலை நுழைவு மற்றும் வெளியேற்றம், க்ரெடிட்டின் பின்னணியில, இந்த நீண்ட தொலைநோக்கு சிந்தனையை கருத்தில வச்சு, நாம முன்னெடுத் திருக்கோம்.  

நாம, எந்த காலகட்டத்தை நோக்கிப் போயிட்டு இருக்கோம்னா, அங்க எந்த ஒரு நபரும், வாழ்க்கை முழுவதும், ஒரே வேலையையில மட்டுமே நீடிச்சு இருக்கறவரா இருக்க மாட்டாரு.  

மாற்றம்ங்கறது உறுதியானதுன்னு முடிவு செஞ்சே பயணிங்க.  மேலும் இதன் பொருட்டு, அவரு தொடர்ச்சியா, தனக்குத் தானே, மீள்திறனாக்கம், மற்றும், மேம்பட்ட திறனாக்கம் செய்துக்க வேண்டியிருக்கும்.  

நேஷனல் எடுகேஷன் பாலிஸி, தேசியக் கல்விக்கொள்கையில, இதுலயும் கூட, நுணுக்கமான கவனம் செலுத்தப்பட்டிருக்கு.  

நண்பர்களே, எந்த ஒரு நாட்டின் வளர்ச்சியிலயும், ஒரு பெரிய பங்களிப்பு இருக்குன்னு சொன்னா, அது சமூகத்தோட அனைத்துத் மட்டங்களோட கண்ணியம், அதோட dignity.   சமூகத்தோட எந்த ஒரு நபராகட்டும், என்ன வேலை வேணா செய்தாலும், யாரும் தாழ்ந்தவங்கன்னு கிடையாது.   நாம இங்க சிந்திக்க வேண்டியது என்னென்னா, பாரதம் மாதிரியான கலாச்சார வளம் நிறைஞ்ச, நிறைவாக இருந்த நாட்டுல, இந்தத் தீமை எங்கிருந்து வந்திச்சு?  

உயர்ந்தவன் தாழ்ந்தவன்ங்கற உணர்வு, உடலுழைப்பு கூலித்தொழில் புரியவங்களை கேவலமா பார்க்கறது, இந்த மாதிரியான, வக்கிர நோக்கு, எப்படி நமக்குள்ள குடியேறிச்சு?   இதுக்கு பெரிய காரணம்னு சொன்னா, நம்மோட கல்விமுறையால, சமூகத்தோட இந்த நிலையில இருப்பவங்களோட, ஒரு தொடர்பின்மையை ஏற்பட்டிருக்கு.   நீங்க கிராமங்களுக்குப் போனா அங்க விவசாயிகள் தொழிலாளிகள் உடலுழைப்புல ஈடுபட்டவங்க வேலை செய்வதைப் பார்க்கும் போது,  அப்பத் தானே தெரிஞ்சுக்க முடியும்!!!   அவங்களைப் புரிஞ்சுக்க முடியும்!!!   அவங்க எத்தனை பெரிய பங்களிப்பை அளிச்சிக்கிட்டு இருக்காங்கன்னு!!!!  

சமூகத்தோட தேவைகளை நிறைவு செய்ய வேண்டி, அவங்க தங்களோட வாழ்க்கையை அர்ப்பணிச்சி இருக்காங்கன்னு!!!   அவங்களுக்கு மதிப்பளிக்கற நடத்தையை, நம்ம தற்கால தலைமுறையும் எதிர்காலத் தலைமுறைகளும் கத்துக்கிட்டே ஆக வேண்டியிருக்கு.   ஆகையினால, தேசியக் கல்விக் கொள்கையில, மாணவர்கள் கல்வி, மற்றும் உழைப்பின் கண்ணியம், இது குறித்தும்கூட, அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கு.  

நண்பர்களே, 21ஆம் நூற்றாண்டு பாரதத்திலெர்ந்து, உலகனைத்துக்குமே, நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு.   பாரதநாட்டுக்கு இருக்கற வல்லமை என்னென்னா, நம்மால, திறன் மற்றும் தொழில்நுட்பத்துக்கு இடையிலான இணக்கத்தை, உலகம் முழுவதுக்கும் அளிக்க முடியும்.   நம்மோட இந்தப் பொறுப்பையும் கூட, நம்மோட கல்விக் கொள்கை, கவனத்தில கொள்ளுது.  

தேசியக் கல்விக் கொள்கையில, என்னஎன்ன தீர்வுகள்லாம் அளிக்கப்பட்டிருக்கோ, அதனால, எதிர்காலத்திய தொழில்நுட்பம் தொடர்பா, ஒரு கண்ணோட்டத்தை மேம்படுத்தும் உணர்வும் உண்டு.   இப்ப தொழில்நுட்பமானது, மிக விரைவகவும் மிக சிறப்பான வகையிலயும், மிகக் குறைவான செலவிலயும், சமூகத்தில கடைப்படியில இருக்கற மாணவனையும் எட்ட, ஒரு பாதையை வகுத்திருக்கு.  

நாம இதை மேலும் அதிக அளவுல பயன்படுத்தியாகணும்.   இந்தக் கல்விக் கொள்கை வாயிலா, தொழில்நுட்பம் ஆதாரமான, சிறப்பான உள்ளடக்கம், மற்றும் ஸ்கோர்ஸை மேம்படுத்த, அதிக உதவிகரமா இருக்கும்.   அடிப்படைக் கணினியறிவு, மீது அழுத்தம், கோடிங்க் மீது குவிமையம், அல்லது, ஆய்வுகள் மீது அதிக அழுத்தம், இவை வெறும், கல்விமுறை மட்டுமில்லை, மாறா சமுதாயம் முழுவதின் அணுகுமுறையை மாத்தக்கூடிய, சாதனமா ஆகமுடியும்.  

Virtual lab, virtual lab மாதிரியான கோட்பாடு, பல இலட்சக்கணக்கான நண்பர்களுக்கு, சிறப்பான கல்விக் கனவுகளைக் கொண்டு சேர்க்க இருக்கு, முன்னால அவங்களால, படிப்புக்களை படிக்கக்கூட இயலாத நிலை இருந்திச்சு, ஏன்னா அதில, பரிசோதனைக்கூட பரிசோதனைகள் அவசியமா இருந்திச்சு.   நேஷனல் எடுகேஷல் பாலிஸி, தேசியக் கல்விக் கொள்கை, நம்ம நாட்டுல, ஆய்வுக்கும் கல்விக்கும் இடையிலான இடைவெளிக்கு, முடிவு கட்டவும், முக்கியமான பங்களிப்பை அளிக்க இருக்கு.  

நண்பர்களே, நிறுவனங்கள்லயும், மேலும் கட்டமைப்புகள்லயும், இந்த சீர்திருத்தங்கள் பிரதிபலிக்கும் போது, அப்பத் தான், தேசியக் கல்விக் கொள்கையை, அதிக தாக்கமுடையதா, மேலும் விரைவான கதியில, அமல் செய்ய முடியும்.   இன்னைக்கு காலத்தோட தேவை என்னென்னா, புதுமைகள் படைத்தல், மற்றும் இணைவாக்கத்தோட, விழுமியங்களை நாம சமூகத்தில கட்டமைக்க விரும்பினோம்னு சொன்னா, அவை முதல்ல, நாட்டின் கல்வி நிறுவனங்கள்லேர்ந்து தான் துவங்கியாகணும்.   

இவற்றோட தலைமை உங்க வசம் தான் இருக்கு.   நாம கல்வி, மற்றும் விசேஷமான, உயர்கல்வியை அதிகாரப்பங்களிப்புடைய சமூகத்தை நிறுவும் சக்தியா நாம ஆக்க விரும்பும் போது, அப்ப இதன் பொருட்டு, உயர்கல்வி நிறுவனங்களையும் கூட, அதிகாரப் பங்களிப்பு உடையனவா ஆக்குவது அவசியம்.  

எனக்குப் புரியுது, இப்ப நாம, நிறுவனங்களுக்கு அதிகாரப்பங்களிப்பு அளிப்பதுன்னு பேசும் போது, அதுகூடவே, வேற ஒரு சொல்லும் சேர்ந்தே வருது.   அந்தச் சொல் உங்களுக்கு நல்லாவே தெரியும், அந்தச் சொல் என்ன?   Autonomy….. தன்னாட்சி.  

உங்களுக்கும் நல்லாத் தெரியும், இந்த தன்னாட்சி விஷயத்தில நம்ம நாட்டில, இருவகையான கருத்துக்கள் நாடு முழுவதிலயும் நிலவிக்கிட்டு இருக்கு.   ஒரு கருத்துப்படி, எல்லாத்தையும் அரசுகட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, முழுவீச்சில செயல்படணும்னு.   இப்ப ரெண்டாவது கருத்து என்னென்னா, அனைத்து நிறுவங்களுக்கும், இயல்பாகவே தன்னாட்சி கிடைச்சாகணும்.  

முத கருத்துப்படி, அரசுசாரா நிறுவனங்கள் மீது அவநம்பிக்கை பிரதிபலிக்குது.   ஆனா ரெண்டாவது கருத்துப்படி, தன்னாட்சியானது, உரிமைங்கற வகையிலயும் கூட,  பார்க்கப்படுது அணுகப்படுது.     நல்ல கல்வி அளிக்கும் பாதை, இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலிருந்து தான் ஏற்படுது. 

இரண்டு எண்ணங்களுக்கு இடையில தான் உருவாகுது.   எந்த அமைப்பு, தரமான கல்வியை அளிக்கும் பொருட்டு, அதிகமா வேலை செய்யுதோ, அதுக்கு, அதிக தன்னாட்சி அளிப்புங்கற, வெகுமதி அளிக்கப்படணும்.   இதன் காரணமா, தரத்துக்கு ஊக்கமும் அளிக்கப்படும், தவிர அனைவருக்கும், வளர்வதற்கான ஊக்கமும் கிடைக்கும்.  

நேஷனல் எடுகேஷன் பாலிஸி, தேசியக் கல்விக் கொள்கை வர்றதுக்கு முன்னால, இப்ப சமீப ஆண்டுகள்ல, நீங்களுமே கூட பார்த்திருக்கலாம்…… எப்படி நம்மோட இந்த அரசு, ஏராளமான, ஏராளமான கல்வி நிறுவனங்களுக்கு, தன்னாட்சி வழங்கற நடவடிக்கை எடுத்திருக்கறதை.   எனக்கு நம்பிக்கை இருக்கு, தேசிய கல்விக் கொள்கையோட,  அமலாக்கம் நாளாவட்டத்தில ஏற்படும் போது,  கல்வி நிறுவனங்களுக்கு, தன்னாட்சி வழங்குவதும் கூட, மேலும் முடுக்கி விடப்படும்.  

நண்பர்களே, நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர், மகத்தான விஞ்ஞானி, டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் சொல்லுவாரு, the purpose of education, is to make, good human beings, with skill, and expertise.   Enlightened, human beings, can be created, by teachers.  

உண்மையிலேயே, கல்விமுறையில மாற்றம், நாட்டுக்கு, நல்ல மாணவர்கள், நல்ல தொழில் வல்லுனர்கள், மேலும் நல்ல குடிமக்களை அளிக்கும், மிகப் பெரிய ஊடகம், நீங்க எலலாரும் தான், ஆசிரியர்களான நீங்க எல்லாரும் தான், பேராசிரியர்களும் தான்.   கல்வித்துறையோட தொடர்புடைய நீஙக் தான், இதை செய்திட்டு இருக்கீங்க உங்களால தான் இதைச் செய்ய முடியும்.  

ஆகையினால, நேஷனல் எடுகேஷன் பாலிஸி, தேசியக் கல்விக் கொள்கையில, ஆசிரியர்களோட கண்ணியத்தையும், கருத்தில கொள்ளப்பட்டிருக்கு.   இதில மேலும் ஒரு முனைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கு……….. நாட்டில இருக்கற திறமைகள், அவை நாட்டிலேயே தங்கியிருந்து, அவை இனிவரவிருக்கும் தலைமுறைகள் வளர்ச்சியில ஈடுபடணும்.  

தேசியக் கல்விக் கொள்கையில, ஆசிரியர் பயிற்சி மீது அதிக அழுத்தம் அளிக்கப்பட்டிருக்கு.   அவங்க தங்களோட, திறன்களை, தொடர்ந்து மேம்படுத்திக்கிட்டே இருக்கணும், இதுமேல அதிக அழுத்தமளிக்கப்பட்டிருக்கு.   என் நம்பிக்கை…… ஒரு, ஆசிரியர் கத்துக்கும் போது, ஒரு நாடு தலைமை தாங்குது.  

நண்பர்க்ளே, நேஷனல் எடுகேஷன் பாலிஸி, தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டி, நாம அனைவரும், மனவுறுதிப்பாட்டோட இணைஞ்சு பணியாற்றுவது அவசியம்.   இதிலேர்ந்து, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கல்வி வாரியங்கள், தனித்தனி மாநிலங்கள், வேறுவேறு தொடர்புடையவர்களோட இணைஞ்சு, உரையாடல் மற்றும் உடன்பாடு தொடர்பான, நடவடிக்கைகள் தொடங்கப்பட இருக்கு.  

நண்பர்களே நீங்க எல்லாரும், ஏன்னா உயர்கல்வியில தலைசிறந்து விளங்கற நிறுவனங்கள்லயே, நீங்க சிறப்புநிலையில இருக்கீங்க.   அப்ப உங்களோட பொறுப்பு…… அதிகமாயிருக்கு.   என்னோட வேண்டுகோள் என்னென்னா, தேசிய கல்விக் கொள்கை தொடர்பா, தொடர்ந்து, வெபினார்களை நடத்தி வாங்க, கலந்துரையாடல்களை நடத்துங்க, கொள்கை அமலாக்கம் தொடர்பா உத்திகளை உருவாக்குங்க, உத்திகளைச் செயல்படுத்த வழிமுறைகளை ஏற்படுத்துங்க, வழிமுறைகளோட காலக்கெடுவை இணையுங்க, அவற்றை அமல் செய்ய ஆதாரஙக்ள் மனிதவள ஆதாரங்கள்…… இவற்றை ஒருங்கிணைக்கத் திட்டங்களைத் தீட்டுங்க.  

இந்த செயல்பாடுகள் எல்லாத்தையும் புதிய கொள்கையின் அடிப்படையில நீங்க தான் மேற்கொள்ளணும்.   தேசியக் கல்விக் கொள்கை, வெறும் ஒரு சுற்றறிக்கை மட்டுமில்லை.   தேசியக் கல்விக் கொள்கை, ஏதோ ஒரு சுற்றறிக்கையைத் தாக்கல் செய்யறதாலயோ, அறிவிக்கை வடிவத்தாலயோ மட்டும், அமல் செய்யப்பட முடியாது.  

இதுக்காக, மனசை செலுத்தணும், நீங்க எல்லாரும், உறுதியான மனவுறுதியை வெளிப்படுத்தியாகணும்.   நாட்டோட நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் படைக்க வேண்டி, உங்களுக்காக, நம்மனைவருக்காக, செய்யப்பட வேண்டிய பெரிய வேள்வி.   21ஆம் நூற்றாண்டுல நமக்கெல்லாம் கிடைச்சிருக்கற பெரிய சந்தர்ப்பம்.  

நம்மோட இந்த முயற்சிகளால, இந்த நூற்றாண்டு முழுவதற்கும், ஒரு திசை கிடைக்கப் போகுது.  இப்ப இதில, இந்த கௌரவம் நிறைஞ்ச அத்தியாயத்தோட இணைய, நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கறேன்.   இதில உங்க பங்களிப்பு ரொம்ப தேவையானது.   இந்த மாநாட்டைப் பார்க்கற, கேட்டுக்கிட்டு இருக்கற, ஒவ்வொருத்தரோட பங்களிப்பும் அவசியமானது.  

எனக்கு நம்பிக்கை இருக்கு, இந்த மாநாட்டில, தேசியக் கல்விக் கொள்கையை, திறம்பட அமலாக்கம் செய்வது தொடர்பா, சிறப்பான ஆலோசனைகளும், சிறப்பான தீர்வுகளும் உறுதியா காணப்படும்.   மேலும் குறிப்பா ஒரு விஷயம் சொல்லணும் இந்த சந்தர்ப்பத்தில, பொது மேடையில, டாக்டர் கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு, அவரோட குழுவினர் அத்தனை பேருக்கும், நான் ஏராளமான பாராட்டுக்களைத் தெரிவிச்சுக்கறேன், பலப்பல நன்றிகளை உரித்தாக்கறேன்.  

இது ஒண்ணும் சின்ன வேலையில்லை மிகப்பெரிய பணி.   பலரோட ஆலோசனைகள் கிடைச்சுது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்திச்சு.   முற்றுப்புள்ளியோ கால்புள்ளியோ இங்க அங்க இடம்மாறிச்சுன்னா என்னவாகும்னே தெரியாது.   அந்த வகையில, டாக்டர் கஸ்தூரிரங்கன் அவர்களும் அவரு குழுவினரும், ரொம்ப நுணுக்கமா செய்திருக்காங்க ஒரு தவமாகவே இதை செஞ்சிருக்காங்க.  

இதனால தான், முழுமையான வகையில சர்ச்சைகளே இல்லாத வகையில, நம்பிக்கை உணர்வு நிறைஞ்ச, கனவுகளை நனவாக்கக்கூடிய, உறுதிப்பாட்டுக்கு உறுதி அளிக்கவல்ல, கடமையே கண்ணாயினார் என்ற முனைப்போட, இந்தப் புதிய, கல்விக் கொள்கை நமக்கு அளிக்கப்பட்டிருக்கு. 

எனக்கு நம்பிக்கை இருக்கு, நம்ம நாட்டோட, வருங்கால சந்ததிகளோட பிரகாசமான எதிர்காலத்துக்காக, தற்கால தலைமுறையோட, திறமைகளை மேம்படுத்த, இந்தப் புதிய கல்விக் கொள்கை கைகொடுக்கும்.   நான் மீண்டும் ஒருமுறை, கல்வியுலகத்தைச் சேர்ந்த பெரியோர் உங்க எல்லாருக்கும், என் வணக்கத்தைத் தெரிவிக்கறேன், நல்வாழ்த்துக்களைக் காணிக்கையாக்கறேன்.   பலப்பல நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன்.  

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த பிரதமர் நரேந்திர மோதியின் பேச்சின் தமிழ் வடிவம்…

ஒலிபரப்பு: ஆலிண்டியா ரேடியோ, சென்னை வானொலி நிலையம்

தமிழாக்கம் : ராமஸ்வாமி சுதர்ஸன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,078FansLike
380FollowersFollow
77FollowersFollow
74FollowersFollow
4,145FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 11 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

காலங்களில் அவள் வசந்தம் -திரைப்படம் ஒரு பார்வை..

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் இயக்கியுள்ள படம்காலங்களில் அவள் வசந்தம். படக்குழுவினரை சரியாக பயன்படுத்தியுள்ளார்....

சர்தார் -விமர்சனம்..

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். முதல் படத்தில் வங்கி மற்றும்...

பிரின்ஸ் –தீபாவளி ரேஸ் சில் வெற்றி பெருமா.. திரைவிமர்சனம்..

பிரின்ஸ் தீபாவளியை முன்னிட்டு இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும்...

தமிழகத்தில் ரூ.200 கோடி வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’..

தமிழகத்தில் ரூ.200 கோடியை வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் என்னும் சாதனையை 'பொன்னியின் செல்வன்'...

Latest News : Read Now...

Translate »
Exit mobile version