நிலக்கல்லில் இருந்து பம்பை நோக்கி சொந்த வாகனத்தில் சென்ற பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்தவர்களின் வாகனங்கள் எஸ்பி யதீஷ் சந்திராவினால் தடுத்து நிறுத்தப் பட்டது. அப்போது அவர் தனியார் வாகனங்களை பம்பையில் அனுமதித்தால் அங்கே போக்குவரத்து நெரிசலும் தடையும் ஏற்படும் என்று தெரிவித்தார். அதனால் தனியார் வாகனங்களை அனுமதிக்க முடியாது என்றார் நீங்களும் உங்கள் உடன் வந்தவர்களும் பம்பா செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் என்ன செய்வது என்று அவர் மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன் இந்தக் கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் இந்த கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியாது. இது உங்களுடைய அரசிடம் கேட்க வேண்டிய கேள்வி என்று பதிலளித்தார்
எவருமே தனியார் வாகனங்கள் மூலம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று சொன்னால், நீங்கள் முதலிலேயே கேஎஸ்ஆர்டிசி கேரள அரசு போக்குவரத்து பஸ்கள் மூலம் மட்டுமே அனைவரையும் அனுமதிப்போம் என்பதை முதலில் சொல்ல வேண்டும்… நீங்கள் இதுவரை அப்படி சொல்லி இருக்கிறீர்களா? என்று கேட்டார்!
அதற்கு பதிலளித்த எஸ்பி சரி.. தனியார் வாகனங்களை சிறிது சிறிதாக அனுப்புவதற்கு முயற்சி செய்கிறேன் என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் முயற்சி செய்யாதீர்கள் செயல்படுத்துங்கள் என்று கூறினார்
தொடர்ந்து பொன்ராதாகிருஷ்ணன் எஸ்பி யதீஷ் சந்திராவுக்கு அறிவுரை கூறிய போது சபரிமலை என்பது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உரியதல்ல அது பக்தர்களுக்கு உரிய இடம் என்று பதிலளித்தார்
இதன் பின்னர் அவர் தன்னுடன் வந்தவர்களுடன் கேரள அரசுப் பேருந்தில் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு சென்றார்.
இந்தச் சம்பவம் குறித்துக் கூறிய கேரள பாஜக., பொது செயலர் ஏ.பி.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பம்பை செல்லும் வழியில் எஸ்பி யதீஷ் சந்திராவினால் தடுத்து நிறுத்தப்பட்டு அவருடன் வாக்குவாதம் மேற்கொள்ளப்பட்டது துரதிருஷ்டவசமானது. எஸ்பி அவரிடம் மிகவும் கடினமாக கொடூரமாக நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என்று கூறினார்.
முன்னதாக, பம்பையில் கேரள அரசு பஸ் நிலையத்திற்கு சென்ற பொன் ராதாகிருஷ்ணன் அங்கே பக்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது அமைச்சர் எஸ்பி எதிர் சந்திராவிடம் தனியார் வாகனங்களுக்கு பம்பை செல்ல அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று கேட்டார்
அதற்கு பதிலளித்த எஸ்பி மிகவும் கடினமாகவும் அதிகார தோரணையுடன் பதிலளித்தபோது நீங்கள் வாகனத்தில் சென்று அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதற்கு நீங்களே பொறுப்பாக முடியும்! அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டார்
அதற்கு பதிலளித்த பொன்ராதாகிருஷ்ணன் ஒரு மத்திய அமைச்சரின் வாகனம் செல்வதால்தான் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று உங்களால் சொல்ல முடியுமா என்று பதில் கேள்வி கேட்டார்
அதன் பின்னர் எஸ்பி., மத்திய அமைச்சரின் வாகனம் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிப்பதாக கூறினார். ஆனால் தனக்கு மட்டுமேயான சலுகையை ஏற்க மறுத்த பொன்ராதாகிருஷ்ணன் தான் கேரள அரசு பஸ்ஸிலேயே பம்பை செல்வதாக கூறினார் தன் வாகனம் மட்டும் பம்பை செல்வதற்குரிய சலுகையை தான் விரும்பவில்லை என்று கூறி உடன் வந்தவர்களுடன் கேரள அரசு பஸ் நிலையம் சென்றார், பின்னர் பம்பைக்கு நிலக்கல்லில் இருந்து அரசு பஸ்ஸிலேயே பயணம் செய்தார்.
இந்நிலையில் பாஜக பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் குறித்து பதில் அளித்த போது மத்திய அமைச்சருக்கு உரிய முறையில் சரியாக பதில் அளித்திருக்க வேண்டும்! எஸ்பி வரம்பு மீறி பேசுகிறார். வரம்பு மீறி நடந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்!
இந்தச் சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளாவà¯à®•à¯à®•௠அழிவ௠ஆஆரமà¯à®ªà®®à¯
TN Government has ceased to exist after death of iron lady jayalalitha