Home நகைச்சுவை சூப்பர் ஸ்டார்னு அந்தப் புள்ளைக்கு பேரு வெச்சியே… சோறு வெச்சியா..?!

சூப்பர் ஸ்டார்னு அந்தப் புள்ளைக்கு பேரு வெச்சியே… சோறு வெச்சியா..?!

annathe nayan rajini
annathe nayan rajini

படத்தில அத்தனை பேர அடி அடினு அடிச்சியே தலைவா, அந்த டைரக்டர் சிவாவ ரெண்டு வெளுத்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா…

யோவ் டைரக்டர் படமாயா இது…விஸ்வாசம்னு ஒரு காவியத்த எடுத்தேனு தலைவர்ட்ட ஒரு வார்த்தையாச்சும் சொன்னியா மேன்…

வயசானத் தலைவர பாக்கறத விட நோஞ்சானா கீர்த்தி சுரேஷ பாக்கத் தாங்கமுடில…நடிகையர் திலகமா கலக்கின கீர்த்திய என்னய்யா பண்ணி வைச்சிருக்கிங்க…

சூப்பர் ஸ்டார்னு நயனுக்கு பேரு வைச்சியே மேன், அந்தப் புள்ளைக்கு சோறு வைச்சியா…

படம் ஆரம்பிச்சு தலைவர் வந்ததும் பக்கத்தில இருந்தவங்க விசிலடிச்சு தலைவானு கத்தி ஆராவாரம் பண்ணப்ப அடடானு சந்தோஷமா உக்காந்திருந்தேன்…கடைசில கீர்த்தி புள்ள தப்பு பண்ணிட்டேனு அழும்போது பக்கத்தில நீயில்லமா நாங்கதாம்மா தப்பு பண்ணிட்டோம்னு டை ஹார்ட் ஃபேன்ஸ் ரத்தக்கண்ணீர் வடிக்க வைச்சிட்டியே மேன்…

கதையக் கூட மசாலானு மன்னிச்சு விட்டறலாம்…அந்த வசனம் எழுதினவரை புடிச்சு கட்டி வைச்சு இதே படத்த நூறு தடவ பாக்கவுடனும்….

தலைவர் பேசறது பூராமே பன்ச் டயலாக்னு நினைச்சு….அந்தக் கொடுமைய எப்படி சொல்வேன்…

பக்கத்தில உக்காந்திருந்தவங்க ஒவ்வொரு டயலாக்கும் பதில் சொல்லி தெறிக்கவுட்டு சிரிச்சது மட்டுந்தா ஒரே ஆறுதல்…

மீனா குஷ்பு பாண்டியராஜ்னு எதுக்கு சர்க்கஸ்ல கலர் கலரா கோமளிங்களாட்டம்னே தெர்ல…

படத்தோட பாதி பட்ஜெட் அருவா வாங்கத்தா செலவு பண்ணிருக்காப்ல…அதில கொஞ்சமாச்சும் காஸ்ட்யூம் டிசைனருக்கு கொடுத்திருக்கலாம்…

இந்தக்கருமத்தையும் தலய வைச்சே எடுத்திருக்கலாம்ல…தலைவரு என்ன பாவம்யா பண்ணாரு உமக்கு…

தலைவா நீ இமயமலைக்கே போயிரு சிவாஜி…இவனுக கிட்ட மாட்டிட்டு பட்டது போதும்…

அந்த டைரக்டர மட்டும் எங்கியாச்சும் பாத்தா சொல்லுங்க… #அண்ணாத்த

  • சமூகத் தளங்களில் வைரலான விமர்சனப் பதிவு

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

fourteen − 8 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version