― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்காட்மேன் வெப் சீரியல் நிறுத்தம்: ஜீ5 நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு!

காட்மேன் வெப் சீரியல் நிறுத்தம்: ஜீ5 நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு!

- Advertisement -
godman

சென்னை : எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து ‘காட்மேன்’ வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்துவதாக ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது.

இளங்கோ ரகுபதியின் தயாரிப்பிலும் , பாபு யோகேஸ்வரனின் இயக்கத்திலும் காட்மென் வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜெயப்ரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனை வரும் ஜூன் 12ஆம் தேதி ஜி5 நிறுவனத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வெளியிட ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

அதற்கு முன்னோட்டமாக, இந்தத் தொடரின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. அதில், மோசமான வசனங்களும், பலான காட்சிகளும், ஒரு சமுதாயத்தைப் பற்றிய இழிவுபடுத்தும் வசனங்களும், இந்து மதத்தை இழிவுபடுத்தும் காட்சிகளும் இருந்ததால், மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

godmanseries

இதை அடுத்து இந்த வெப் சீரிஸுக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இணையதளங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சென்னை, மதுரை உள்பட, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், பிராமணர் சங்கம், அந்தணர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பிலும், பாஜக., மற்றும் தனிநபர்கள் சிலரின் சார்பிலும் போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும். வெப்சீரிஸ் தொடர்களுக்கு சென்சார் வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதை அடுத்து யுடியூப் மற்றும் ஜீ5ன் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் இருந்து அந்த டீசரை நீக்கினர்.

zee godman webseries

இந்நிலையில் இந்த வெப்சீரிஸ் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார் காட்மேன் தொடரின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.

காட்மேன் இணைய தொடரில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மதத்தினரை அவதூறாக சித்திரிப்பதாக அளித்த புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

zee godmen serial

இந்நிலையில் ஜீ5 நிறுவனம் டுவிட்டரில், ”எங்களின் காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக நிறைய கருத்துக்கள் வந்தன. அதன் காரணமாக இந்த தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு மதம், சமூகம் மற்றும் தனிப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின் ஜீ5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாது” என பதிவிட்டுள்ளது.

aswathaman godman message

இதனிடையே இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து பாஜக.,வின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அஸ்வத்தாமன்ம், Godmen விவகாரம் ! ? வெற்றி ! Godmen திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என ZEE நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! ஒத்துழைத்த காவி சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் !!! இப்போது தான் உண்மையான வெற்றி ! இனிதான் நாம் கொண்டாட வேண்டும்!இனி இங்கு யாரும் இந்துக்களை புண்படுத்தி ஒன்றை விற்றுவிட முடியாது….! என்று சமூகத் தளங்களில் பதிவிட்டிருந்தார்.

ஜீ5 நிறுவனத்தின் அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து, தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version