Home இந்தியா ஜாக்கிரதை ‘அந்த’ மாதிரி கூகுள்ல சர்ச் பண்றீங்களா? உடனே காவல்துறைக்கு செய்தி போய் விடும்!

ஜாக்கிரதை ‘அந்த’ மாதிரி கூகுள்ல சர்ச் பண்றீங்களா? உடனே காவல்துறைக்கு செய்தி போய் விடும்!

Google-search
Google search

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, மாநில போலீசாருடன் இணைந்து ஆபாசம் அல்லது தவறான விஷயங்களுக்காக இணையத்தைப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக மற்றொரு முக்கியமான நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநிலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், அதிகாரிகள் ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளனர், அதில் ஆன்லைனில் ஆபாசம் சார்ந்த தகவல்களை தேடும் நபரின் விவரங்கள் ஒரு எஸ்எம்எஸ் மூலம் காவல்துறையை சென்றடையும்.

ஒரு நபர் ஆபாசம் அல்லது தவறான உள்ளடக்கத்திற்காக இணையத்தில் உலாவ தொடங்கும்போது, உடனே ​​காவல்துறையினரிடம் இருந்து 1090 என்ற எண்ணிலிருந்து எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு SMS வரும்.

இந்த நடவடிக்கை மக்களின் மனநிலையை மாற்ற எடுக்கப்பட்டுள்ளதாக உ.பி. ஏ.டி.ஜி நீரா ராவத் தெரிவித்தார். இதன்மூலம் புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

‘டிஜிட்டல் சக்ரவாயு’ (பெண்களின் பாதுகாப்பிற்கான 360 டிகிரி இன்போசிஸ்டம்) எனப்படும் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு டிஜிட்டல் அணுகலுக்கான ரோட்மேப்பை அரசு உருவாக்கியுள்ளது. ஆரம்பத்தில் இது வெறும் ஆறு மாவட்டங்களில் ஒரு முயற்சி திட்டமாக மட்டுமே தொடங்கப்பட்டதாகவும், இப்போது இது மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் ‘ஹுமாரி சுரக்ஷா’ (Humari Suraksha) என்று அழைக்கப்படும். மேலும் இது உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து இணைய பயனர்களையும் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version