Home கிரைம் நியூஸ் நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளர்களா? தில்லி சைபர் கிரைம் விடுத்த எச்சரிக்கை!

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளர்களா? தில்லி சைபர் கிரைம் விடுத்த எச்சரிக்கை!

airtel
airtel

நாளுக்கு நாள் ஏமாற்று பேர்வழிகள் விதவிதமான முறைகளில் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இப்போது புதிதாக, தகவல் சரிபார்ப்பு என்ற பெயரில் சமீபகாலமாக பல மோசடி வழக்குகள் பதிவாகி வருவதாக சைபர் க்ரைம் மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிலும் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்து விட்டால் KYCல் இருந்து ஒரு SMS அல்லது தொலைபேசி அழைப்பு வரும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால். SIM பயனர் தகவல் சரிபார்ப்பு என்று கூறி மோசடி நடப்பதாக ஆயிரக்கணக்கில் வழக்குகள் பதிவாகி வருகின்றது. இதனடிப்படையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களை தில்லி காவல்துறையின் சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏர்டெல் பயனர்களில் பலருக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது

KYCயில் இருந்து பெறப்படும் குறுஞ்செய்தியில், ‘அன்புள்ள ஏர்டெல் SIM வாடிக்கையாளர்களே, உங்கள் KYC இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஏர்டெல் SIM-யை ஆக்டிவேட் செய்ய 93391 **** என்ற வாடிக்கையாளர் எண்ணை அழைக்கவும். நீங்கள் வாடிக்கையாளர் எண்ணை தொடர்பு கொள்ளாவிட்டால், உங்கள் கணக்கு 24 மணி நேரத்திற்குள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து DCP சைபர் கிரைம் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அந்த பதிவில், ‘கவனமாக இருங்கள் !! புதிய வகை மோசடி மூலம் உங்கள் கணக்கில் இருக்கும் பணம் பறிபோகலாம். ஏர்டெல் SIM கார்டு KYC-லிருந்து ஒரு எண்ணிற்கு அழைக்குமாறு வந்த குறுஞ்செய்தியில் இருக்கும் எண்ணிற்கு அழைக்கும் போது,வங்கிக் கணக்கு அல்லது கிரெடிட் கார்டிலிருந்து வெவ்வேறு வழிகளில் பணத்தை எடுத்து விடுவார்கள். என்று குறிப்பிட்டுள்ளது.

மொபைலில் புதிய பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்வதையோ, மொபைல் மூலம் பணம் செலுத்துவதையும் தவிருங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த குறுஞ்செய்தி வந்ததும் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்தை தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version