Home அடடே... அப்படியா? புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார் ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார் ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி, துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதம் குறைத்து உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இதை அடுத்து, புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.40 காசு வரை குறைய வாய்ப்புள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version