Home உள்ளூர் செய்திகள் 72 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்துக் கொலை!

72 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்துக் கொலை!

சென்னையில் 72 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொன்ற 21 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டை ரோட்டரி காலனி 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் 72 வயது மூதாட்டி. இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அரசு கொடுக்கும் முதியோர் பென்ஷனை வாங்கி ஜீவனம் நடத்தி வந்தார்.

அக்கம்பக்கத்தில் ஏதேனும் கூலி வேலைக்கு அழைத்தாலும் சென்று வேலை செய்துவிட்டு பணம் வாங்கி வருவார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பேசிவிட்டு இரவு 10 மணி அளவில் வீட்டில் தூங்கச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் மூதாட்டி கதவை திறக்கவே இல்லை.

இதனால் சந்தேகத்தின் பேரில் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது மூதாட்டி தலையில் பலத்த காயத்துடன் சடலமாக காணப்பட்டார். அவருக்கு கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயங்களும் ஆடைகள் கிழிந்த நிலையிலும் காணப்பட்டன.

இதையடுத்து தகவலறிந்த ராயப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் சஷாங் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது கூவம் வழியாக மூதாட்டியின் வீட்டிற்குள் ஒருவர் நுழையும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

விசாரணையில் கூவத்தில் குதிரை ஓட்டும் இளைஞர்கள் அந்த பகுதியில் அடிக்கடி மது அருந்துவது வழக்கம். அவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த வசந்தகுமார் மீது கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாகியிருந்த வசந்தகுமாரை 6 மணி நேரத்தில் பிடித்து போலீஸார் நடத்தினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் வசந்தகுமார் போதையில் வரும் போது மூதாட்டியின் வீடு திறந்திருந்தது. அப்போது பணத்தை கொள்ளையடிக்க உள்ளே சென்ற போது அந்த மூதாட்டி சப்தமிட்டுள்ளார்.

இதனால் அவரது வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் வசந்தகுமார். பின்னர் கத்தியால் மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்த ரூ 1300 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.6 மணி நேரத்தில் கொலையாளியை கண்டுபிடித்த போலீஸாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version