Home சற்றுமுன் இன்றும் நாளையும்… கடைகள், பஸ்கள் முழு நேரம் இயங்க அனுமதி!

இன்றும் நாளையும்… கடைகள், பஸ்கள் முழு நேரம் இயங்க அனுமதி!

karur shops closed
karur shops closed

இன்றும்(சனி), நாளையும் (ஞாயிறு) அரசு பஸ்கள் 24 மணி நேரம் ஓடும் நாளை ஞாயிறு ஊரடங்கு கிடையாது ; இன்று(சனி), நாளை(ஞாயிறு) அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து. தமிழக அரசு உத்தரவு

தமிழக மக்கள் இரண்டு வாரங்களுக்கு தேவையான பொருட்களை இன்று அல்லது நாளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்

  • வாடகை டாக்சி ஆட்டோ. கார் .பஸ் .எதுவும் ஓடாது
  • ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி இல்லை
  • மளிகை காய்கறி இறைச்சி கடை 12 மணி வரை அனுமதி
  • நியாய விலைக்கடை 8 மணி முதல் 12 மணி வரை அனுமதி
  • அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்க தடை
  • தற்போது நடைபெற்று வரும் கட்டடப் பணிகள் நடைபெறும்
  • மதியம் 12 மணி வரை ஹோட்டலில் பார்சல் அனுமதி
  • தேனீர் கடை 12 மணி வரை அனுமதி
  • அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்
  • தனியார் நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட தடை
  • மளிகை பலசரக்கு காய்கறி இறைச்சி மீன் விற்பனை கடை மதியம் 12 மணி வரை அனுமதி
  • மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு பேருந்து இயங்காது

மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போது கீழ்க்காணும் செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

  • அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை (Courier service), மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமார் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பளணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகளங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை (Petrol, Diesel & LPG etc.,} எடுத்துச்செல்லும் வாசுனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். வேளாண் உற்பத்திக்கு தேவையான
    பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள், மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள், காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

• முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 5.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது

Swiggy, Zomato போன்ற மின் வணிசும் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

  • காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.

நியாய விலைக் கடைகள் காலை 8.00 மணி முதல் நண்பகல்
12.00 மணி வரை செயல்படும்.

தன்னார்வலர்கள் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவர்களுக்கான சேவை வழங்குபவர்கள் தொடர்புடைய
நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை / ஆவணங்களுடன்
சென்று வர அனுமதிக்கப்படுகிறது.

  • நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்… நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் (on going in construction:works) அனுமதிக்கப்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version