Home உள்ளூர் செய்திகள் கஞ்சா கும்பலை விரட்டிப் பிடித்த போலீஸ்! டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு!

கஞ்சா கும்பலை விரட்டிப் பிடித்த போலீஸ்! டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு!

திருச்சி மத்திய மண்டலத்தில் கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை, விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, போன்ற பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.

தினந்தோறும் 10 முதல் 15 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ராம்ஜிநகரில் அதிக அளவில் விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் 8 பேர் கொண்ட குழு தனிப்படை அமைத்து அந்த பகுதி முழுவதும் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் திருச்சி மாநகர் பொருத்தவரை பல இடங்களில் இரு சக்கர வாகனம், மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது .

ஆகையால் மேலும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 5 முதல் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இவற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்த மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் அனைத்தும் மண்டலத்திலும் தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாநகர காவல் ஆணையர் அருண் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் சோதனை செய்ததில் கஞ்சா, விற்பனை செய்ததாக 25-க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது கொண்டிருக்கும் தொலைபேசி மூலமாக கிடைத்த ரகசிய தகவலின்படி திருச்சி- மன்னார்புரத்தில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது விமான நிலையம் பகுதியிலிருந்து முகமது ஹனீபா என்பவர் ஓட்டி வந்த காரை, சோதனையிட நிறுத்தியபோது, கார் நிற்காமல் விரைந்து சென்றது. உடனே தனிப்படை காவல்துறையினர் விடாமல் விரட்டிச் சென்றனர்.

இந்த கார் சென்னை 4 வழிச் சாலையில் சென்னையை நோக்கி பறந்தது. அப்போது செந்தண்ணீர்புரம் பகுதியில் கார் சென்ற போது பைக்கில் விரட்டிச் சென்ற தலைமைக் காவலர் சரவணன், பைக்கில் இருந்து காரைப் பிடித்து நிறுத்தச் சொன்னார்.

ஆனால் நிற்காமல் சென்றது கார். பின்னர் காரில் தொற்றிய படியும் முன்பக்கத்தில் படுத்தபடியும் சென்று, காரின் ஸ்டியரிங்கை திருப்பி, சாலையோர தடுப்பு சுவரில் மோத வைத்தார்.

இதையடுத்து கார் நின்றது. அப்போது காரின் முன்பக்கம் தொற்றிக்கொண்டிருந்த தலைமைக் காவலர் சரவணன் தூக்கி வீசப்பட்டார். பின்னால் விரட்டி வந்த தனிப்படை போலீசார், சாமர்த்தியமாக காரை ஓட்டி வந்த முகமது ஹனீபாவை மடக்கிப் பிடித்தனர்.

காரிலிருந்து சுமார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். உயிரைப் பணயம் வைத்து காரை விரட்டிச்சென்ற தலைமைக் காவலர் சரவணன், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது நலமுடன் உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்த பிறகு பாராட்டுக்களை டிஜிபி C. சைலேந்திர பாபு, தெரிவித்தார்.

இவரது வீரச் செயலை பாராட்டி ரூபாய் 25 ஆயிரம் பரிசு தொகையை வழங்கினார். தலைமைக் காவலர் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க திருச்சி காவல்துறை ஆணையருக்கு, காவல்துறைத் தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version