Home அடடே... அப்படியா? ஆபிஸ் வாசல் வரை சென்ட்ஆஃப் செய்யும் நாய்!

ஆபிஸ் வாசல் வரை சென்ட்ஆஃப் செய்யும் நாய்!

dog 1
dog 1

நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் பெண் ஒருவர், அங்கு இருக்கும் நாய் மீது அன்பை பொழிந்துள்ளார்.

இதனால், அவர் மீது அதிக கரிசனம் கொண்ட நாய், நாள்தோறும் அவர் ஆபீஸூக்கு வரும்போதெல்லாம், அவருடைய கையைப் வாயில் பிடித்துக் கொண்டு மாடியில் இருக்கும் அவரது பணியிடத்துக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளது.

நாயின் அன்பால் நெகிழ்ந்துபோன அந்தப் பெண், இதனைப் படம்பிடித்து ரெட்டிட் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், வழக்கம்போல் ஆபீஸூக்கு செல்லும் அவரை நோக்கி ஓடி வரும் நாயக்குட்டி, பெண்ணின் கையைப் பிடித்து மாடிக்கு அழைத்துச் செல்கிறது.

இது ஒருநாள் மட்டும் நடப்பது அல்ல, நாள்தோறும் செல்ல நாய்க்குட்டி ஆபீஸூக்கு இப்படி தான் வரவேற்று வேலை செய்ய அழைத்துச் செல்கிறது.

இப்படியான அனுபவம் யாருக்கு இருக்கும். வேலைக்கு வரும்போது, நம்மை வரவேற்று அழைத்துச் செல்ல தினம் யாரேனும் ஒருவர் இருப்பார்களா? அப்படியான ஒரு அன்பை யாரிடமாவது எதிர்பார்க்க முடியுமா?. நான் கேட்பது உங்களுக்கு விந்தையாக தோன்றினாலும், என்னுடைய எதிர்பார்ப்பை நாய்க்குட்டி நாள்தோறும் நிறைவேற்றுகிறது.

நான் வேலைக்கு செல்லும் அனைத்து நாட்களிலும், ஆபீஸின் முன்பக்கத்திலேயே என்னை வரவேற்று, கையைப் பிடித்து மாடியில் இருக்கும் என்னுடைய பணியிடத்துக்கு அழைத்துச் செல்கிறது.

இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. வேலை இடத்தைப் பற்றிய பயம், அன்றைய நாள் வேலை குறித்த டென்ஷன் எதுவும் இல்லாமல் இயல்பாக வேலை செய்ய முடிகிறது என்றால், நாய்க்குட்டியின் இந்த அன்பான செயலே காரணம் என மனம் நெகிழ்ந்து அந்தப் பெண் எழுதியுள்ளார்.

அவரின் இந்தப் பதிவுக்கு ரெட்டிட் தளத்தில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. வேலைக்கு செல்லும் ஒருவருக்கு இந்த மாதிரியான வரவேற்பு கிடைப்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று தான்.

அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. நீங்கள் எந்தவித டென்ஷனும் இல்லாமல் சூப்பராக வேலை செய்ய முடியும். அந்த நாய்க்குட்டிக்கு மறக்காமல் ட்ரீட் வைத்துவிடுங்கள் என நெட்டிசன்கள் அந்தப் பதிவுக்கு கமெண்ட் அடித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version