- Advertisement -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருக்கோஷ்டியூரில் 19 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சம்ப்ரோக்ஷணம்!

திருக்கோஷ்டியூரில் 19 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சம்ப்ரோக்ஷணம்!

19 ஆண்டுகளுக்கு பின் திங்கள்கிழமை சம்ப்ரோக்ஷண வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பக்தர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்து, வைபவத்தை

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் ஸ்ரீ பூமி நீளா சமேத சௌம்ய நாராயணப் பெருமாள் கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பின் திங்கள்கிழமை சம்ப்ரோக்ஷண வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பக்தர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்து, வைபவத்தை தரிசித்து மகிழ்ந்தனர்.

திருக்கோஷ்டியூர் கோயிலில் 1961, 1992, 2004 ல் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. தற்போது 19 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணிகள் முடிந்து நேற்று சம்ப்ரோக்ஷணம் நடந்தது. இதற்காக, யாக சாலையில் 32 வேதிகை, 44 குண்டங்களுடன் மார்ச் 23ல் பூஜைகள் தொடங்கின. பட்டாச்சார்யார் ராமகிருஷ்ணன் தலைமையில் பட்டாச்சார்யர்கள் பூஜைகளை செய்தனர்.

நேற்று அதிகாலை சிறப்பு பூஜை முடிந்து 8ஆம் கால யாகபூஜை பூர்த்தியாகி பூர்ணாகுதி திருவாராதனம் நடந்தது. காலை 9:30 மணியளவில் கலசங்கள் புறப்பாடாகி விமான, ராஜகோபுரம் சென்றன. தொடர்ந்து காலை 9:52 மணி முதல் விமானங்கள், ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு சம்ப்ரோக்ஷணம் நடந்தது. பின் அலங்கார திருவாராதனமும், சர்வ தரிசனமும் நடந்தது. ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் அலுவலர்கள் செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

3 × two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version