― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்வஞ்சிக்கப்படும் தென்காசி பகுதி; அண்ணாமலை ‘மனசு’ வைக்க ரயில் பயணிகள் கோரிக்கை!

வஞ்சிக்கப்படும் தென்காசி பகுதி; அண்ணாமலை ‘மனசு’ வைக்க ரயில் பயணிகள் கோரிக்கை!

- Advertisement -
railway news

வஞ்சிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு வரும் தென்காசி பகுதி ரயில் பயணிகளின் கோரிக்கைகளை தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை தலையிட்டு நிறைவேற்றித் தர வேண்டும் என்று, ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக, அண்ணாமலைக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் கடிதம், கடந்த ஜனவரி மாதமே அனுப்பப் பட்டிருக்கிறது. எனினும் இதுவரை கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்பதால், மீண்டும் அண்ணாமலையிடம் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு, மார்ச் 18ம் தேதியிட்ட மின்னஞ்சலில், அண்ணாமலையும் தங்களது மின்னஞ்சல் கடிதம் கிடைத்தது. தங்கள் கோரிக்கைகளுக்கு ஆவன செய்கிறோம் என்று பதில் அணுப்பியிருக்கிறார்.

நெல்லை வரை வந்த ஈரோடு ரயில், செங்கோட்டைக்கு நீட்டிக்கப்பட்டதில் அண்ணாமலையின் பங்கு அதிகம் என்பதால், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிடம் வலியுறுத்தி, ரயில் திட்டங்களை தென்காசி பகுதி மக்கள் பயனடைய மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் தலைவர் எல்.எம். முரளி, செயலர் கே.எச்.கிருஷ்ணன் ஆகியோர், கடந்த ஜனவரியில் அண்ணாமலைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…

வணக்கம். எங்கள் பகுதியான செங்கோட்டையின் ரயில் தேவைகள் பற்றி கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைக்கிறோம்.

வெகு விரைவில் நாடாளுமன்ற தேர்தல்கள் வரவிருப்பதால் எங்கள் வேண்டுகோள்களை விரைவில் தாங்கள் பெற்று தந்திட பணிவன்போடு வேண்டுகிறோம்.

1) கடந்த சில ஆண்டுகளாக செங்கோட்டை – தென்காசி – கடையநல்லூர் -சங்கரன்கோவில் – ராஜபாளையம்- ஶ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி – திருத்தங்கல் பாதையில் நிரந்தரமான புதிய ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

எங்கள் தேவைகள்

1) தினசரி பகல் நேர முன்பதிவில்லா செங்கோட்டை – கோயம்புத்தூர் & கோயம்புத்தூர் – செங்கோட்டை ரயில்கள் வழி மதுரை திண்டுக்கல் பழனி.
கோவையில் வேலை பார்ப்போர் ,
கல்லூரிகளில் படிப்போர்,மற்றும் பழனியில் முருகனை தரிசனம் செய்வோர் ஆகியோர் இந்த ரயில்களால் பெரிதும் பயனடைவர்.

2) தென்காசியிலிருந்து வடகாசியான வாரணாசிக்கு வாராந்திர விரைவு ரயில்கள் தேவை.

3) செங்கோட்டை – திருப்பதி தினசரி விரைவு ரயில் இயக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

4) மதுரையோடு நிற்கும் மும்பாய் , புதுடெல்லி, ஹைதராபாத் ரயில்களை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.தற்போது விருதுநகர் – சிவகாசி – ராஜபாளையம் -தென்காசி செங்கோட்டை மின்சார வழித்தடம் கடந்த சில மாதங்களாக மின்சார இன்சின்களால் இயக்கப்படுவதால் இந்த ரயில்களை நீட்டிப்பு செய்யலாம்.மேலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நல்ல தண்ணீர் வசதி லோக்கோ பைலட்டுகள் விடுதி பயண டிக்கட் சோதனை அதிகாரிகள் ஓய்வறை மற்றும் ரயில்களை சுத்தம் செய்யும் ஒப்பந்தக்கார ஊழியர்கள் உள்ளதால் ரயில்களின் நீட்டிப்பால் எந்த தடங்கலும் வராது.

5) தற்போது செங்கோட்டை சென்னை இடையே வாரம் மூன்று முறை இயங்கும் சிலம்பு அதிவேக ரயிலை தினசரி ரயிலாக மாற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும்.

6) செங்கோட்டை – மயிலாடுதுறை & மயிலாடுதுறை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் தினசரி முன்பதிவில்லா ரயில்களின் பெட்டிகளை 18 ஆக கூட்ட வேண்டும்.இதில் முன்பதிவு வசதியோடு கூடிய இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதியுள்ள பெட்டியை இணைக்க ஆணை பெற்றுத்தர வேண்டும்.

7) செங்கோட்டை – சென்னை இடையே ராஜபாளையம் சிவகாசி மதுரை வழியாக வந்தே பாரத் ரயிலோ அல்லது அம்ருத பாரத் ரயிலோ விரைவில் துவக்க வேண்டும்.
நன்றி! வணக்கம்!

இந்நிலையில், இன்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்

செங்கோட்டை தென்காசி வட்டார மக்கள் கீழ்க்காணும் புதிய ரயில்களை தென்காசி செங்கோட்டை வழியாக தெற்கு ரயில்வே இயக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்

1) தினசரி காலையிலும் மாலையிலும் முன்பதிவில்லா திருநெல்வேலி – திருவனந்தபுரம் & திருவனந்தபுரம் – திருநெல்வேலி ரயில்கள் வழி அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்

(2)இதே மாதிரி தினசரி முன்பதிவில்லா ரயில்கள் மதுரை – திருவனந்தபுரம் & திருவனந்தபுரம் – மதுரை காலையிலும் மாலையிலும் வழி விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்

(3)வாரம் மூன்று நாட்கள் ஓடும் சிலம்பு அதிவேக ரயிலையும் செங்கோட்டை தாம்பரம் அதிவேகரயிலையும் தினசரி ஆக்க வேண்டும்

(4) திருவனந்தபுரம் / கொல்லம் இவற்றிலிருந்து செங்கோட்டை வழியாகவோ அல்லது திருநெல்வேலியில் இருந்து அம்பை பாவூர்சத்திரம் தென்காசி வழியாகவோ கீழ்கண்ட ஊர்களுக்கு விரைவு ரயில்கள் உடனடியாக தேவை.

1) மும்பாய்
2) டெல்லி
3)மைசூர் / பெங்களூர்
4)மங்களூர்

5)வாரணாசி

6)ஹைதராபாத் வழி திருப்பதி

7)செங்கோட்டையில் இருந்து தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திருச்சி விருத்தாசலம் விழுப்புரம் வழியாக
சென்னைக்கு அம்ருத பாரத் ரயில்கள் விடவேண்டும்

8) தென்காசி -விருதுநகர் வழித்தடத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கலாம் என ரயில் சோதனை ஓட்ட ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதால் தென்காசியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

9)2017ல் சில நாட்களே ஓடி நிறுத்தப்பட்ட செங்கோட்டை – தாம்பரம் பகல் நேர முன்பதிவில்லா அந்தியோதயா ரயில்களை மீண்டும் இயக்க ஆவன செய்ய வேண்டும்.

10)தற்போது புனலூரோடு நிற்கும் ரயில்களை தென்காசி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

இதர கோரிக்கைகள்

1) செங்கோட்டையில் தற்போது 3 நடைமேடைகளே உள்ளன. மேலும் இரண்டு நடைமேடைகள் அமைக்க வேண்டும்.
2) செங்கோட்டை – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும்
3) செங்கோட்டையில் பிட்லைன் அமைக்க வேண்டும்
4) பகவதிபுரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டிகளுக்கான தண்ணீர் மற்றும் இதரவசதிகள் & இரண்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டு பொதிகை சிலம்பு ரயில்கள் இவை செங்கோட்டை வந்து சேர்ந்த பிறகு பகவதிபுரம் செல்ல வேண்டும். மீண்டும் மாலையில் செங்கோட்டைக்கு வர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version