― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்குறைந்து வரும் இந்துக்களின் ஜனத்தொகை; ஏற்படும் ஆபத்துகள்: இந்து முன்னணி எச்சரிக்கை!

குறைந்து வரும் இந்துக்களின் ஜனத்தொகை; ஏற்படும் ஆபத்துகள்: இந்து முன்னணி எச்சரிக்கை!

- Advertisement -

அச்சுறுத்தும் தகவல்- குறைந்து வரும் இந்துக்களின் ஜனத்தொகை; ஏற்படும் ஆபத்துகள்… குறித்து இந்து முன்னணி எச்சரிக்கை செய்வதாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

பாரதப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு சமீபத்தில் 167 நாடுகளில் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. 1950 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெரும்பான்மையான சமூகத்தின் ஜனத்தொகையை பற்றிய ஆய்வு மேற்கொண்டது. அதில் இந்தியாவில் பெரும்பான்மையாகிய இந்துக்களின் ஜனத்தொகை 8% சரிந்துள்ளது என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

அதேசமயம் பிற சமூகத்தினர் ஜனத்தொகை அபரிமிதமாக நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்துள்ளது.

குறிப்பாக முஸ்லிம்களின் மக்கள் தொகை 43% அதிகரித்துள்ளது. கிறித்துவர்களின் மக்கள் தொகை 5.38 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மதமாறிய பிறகும் இந்துக்களின் பட்டியலில் போலியாக தொடரும் கிறிப்டோ கிறித்துவர்கள் அடக்கமா என்பது தெரியவில்லை.

இந்த ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவெனில், ஒட்டுமொத்த உலக சமூகங்களில் கடந்த 65 ஆண்டுகளில் எல்லா நாடுகளிலும் இந்துக்கள், ஜைனர்கள், பார்சிகள் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது கவலை அளிக்கும் விஷயம்.

பெரும்பான்மையான இந்துக்களின் ஜனத்தொகை 8 சதவீதம் குறைவது என்பது எண்ணிக்கையில் பெரிய சரிவு என்பதை இந்துக்கள் உணர வேண்டும். இது தேசத்தின் மக்கள் சமநிலையை பெரிதும் பாதிக்கும். ஜனநாயகத்தில் இந்துக்களின் பிரதிநிதித்துவம் இழக்க நேரிடும் என்ற அபாயத்தை கவனிக்க வேண்டும்.

அதுபோல எங்களுக்கு ஒரு குழந்தை என பெருமை பேசுபவர்கள், தங்களின் குடும்பம் ஒரே தலைமுறையில் 50 சதவீதம் குறைந்து, அதன் அடுத்த தலைமுறை ஒட்டுமொத்தமாக காணாமல் போகும் என்பதை உணர வேண்டும்.

மேலும் தேசத்தின் பாதுகாப்பு அமைப்புகளான இராணுவத்திற்கோ, காவல்துறைக்கோ சேவை செய்ய முன்வருவோரில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் ஆபத்தை உணர வேண்டும்.

அதேசமயம் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் ஜனத்தொகை 43 சதவிகிதம் உயர்ந்துள்ளதும் ஆபத்தானது. எங்கெல்லாம் முஸ்லிம்களின் ஜனத்தொகை பத்து சதவீதத்தை தாண்டுகிறதோ அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள அழிவை, ஆபத்தை கவனித்தால் அந்நிலை பாரதத்திற்கும் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது எச்சரிக்கும் செய்தியாகும்.

மக்கள் தொகை குறைந்தால் இந்துக்கள் தங்களது பிரதிநிதித்துவத்தை இழந்து விடுவோம். உதாரணமாக கேரள் மாநிலத்தில் இந்துக்கள் அதிகமாக வாழும் பாலக்காடு மாவட்டத்தில் தொகுதி சீரமைப்பினால் ஒரு தொகுதி குறைந்தது. அதேசமயம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு தொகுதி அதிகமாக்கப்பட்டது.

ஒட்டுமொத்த பாரதத்திலும் சுமார் 70 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் முஸ்லிம்கள் ஜனத்தொகை இருப்பதாக ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இதனை புரிந்து கொண்டால் வருங்காலத்தில் இதன் ஆபத்து நம் கண்முன் விரிவாக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய சூழ்நிலையில் பாரத நாட்டின் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்துக்கள் மக்கள் தொகை இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதேபோல் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் 200 மாவட்டங்களில் இந்துக்களின் ஜனத்தொகை இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதுபோல உலக அளவிலும் இலங்கை, மியான்மார் (பர்மா), ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, பூடான் போன்ற அண்டை நாடுகளில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்தனர். குறிப்பாக பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். ஆனால் அந்நாடுகளில் இன்று இந்துக்கள் சிறுபான்மையாகிவிட்டது மட்டும் அல்ல, அதளபாதாளத்தில் போய் கொண்டு இருப்பதை காண முடிகிறது.

இதற்கு காரணம் விழிப்புணர்வு இல்லாத சமூகமாக இந்துக்கள் வாழ்வதுதான் . மேலும், பெருகிவரும் மேற்கத்திய சிந்தனையான மைக்கிரோ ஃபேமிலி(குறுகிய குடும்பம்) மற்றும் லிவிங் டுகெதர் எனும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, தனித்து வாழ்வது, உணவு பழக்கத்தால் ஏற்படும் மலட்டு தன்மை, குடும்பக்கட்டுப்பாடு போன்ற பல காரணங்களால் இந்துக்களின் மக்கள்தொகை வேகமாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் பெருகி வரும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இதனை நமக்கு புலப்படுத்துகின்றன.

இந்து முன்னணியின் நிறுவனர் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள் 1984ஆம் ஆண்டிலேயே இது குறித்து எச்சரிக்கை விடுத்தார். சினிமா நாடகம் போன்றவற்றில் அதிக குழந்தைகள் பெறுவதை அவமானமாக சித்தரித்த காலத்தில் ஒரு புரட்சியாக பத்து குழந்தைகளை பெற்ற தாயை பாராட்டி கௌரவித்து வீரத்தாய் பட்டம் அளித்தார். தேசத்திற்கும் சமூகத்திற்கும் ஜனத்தொகை என்பது இன்றியமையாதது என்பதை அன்றே விளக்கினார்.

குடும்பக்கட்டுப்பாடு நல்லது என்றால் அனைத்து மதத்தினரும் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்து முன்னணி விடுக்கும் கோரிக்கை. இந்துக்களின் கருவையறுக்க மட்டும் குடும்பக்கட்டுப்பாட்டை பயன்படுத்தக்கூடாது.

மத சமநிலை அழிந்து சிறுபான்மை பெரும்பான்மையானால் மதவாதம் தலை தூக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் உன்னில் ஒருவன் மதமாறி போகிறான் என்றால் உங்களின் எண்ணிக்கை ஒன்று குறைந்தது என்பதுடன் எதிரியில் ஒருவன் கூடிவிட்டான் என்பதை உணர்ந்து கொள் என்று எச்சரிக்கிறார்.

எனவே இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் ஆய்வு இந்துக்களின் கண்களை திறக்க வேண்டும். இந்துக்களின் ஜனத்தொகை குறைந்தால் தேசத்தில் மத சகிப்புத் தன்மை, பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம், நமது பாரம்பரிய பெருமைகளான மொழி, இலக்கியம், ஆலயங்கள் என எல்லாம் கேள்வி குறியாகிவிடும்.

இதனை கருத்தில் கொண்டு, ஆன்மீக பெரியோர்கள், சமுதாய தலைவர்கள், குடும்பங்களில் உள்ள மூத்த தலைமுறையினர் ஆகியோர் இளைய தலைமுறைக்கு ஜனத்தொகை பெருக வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூற வேண்டியது கடமையாகும்.

வருங்கால சமூகமும் இந்து மக்களின் தொகை குறைந்தால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இந்து முன்னணி வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் வழிநடத்திய வெற்றிப் பாதையில் இந்துக்களிடம் வேகமாக குறைந்து வரும் ஜனத்தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடர்ந்து செய்யும். இந்துக்கள் தேச நலன் மற்றும் இந்து சமூக நலன் கருதி அதற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை நல்க அறைகூவல் விடுக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version