Home சுய முன்னேற்றம் பனங்கொட்டையில் பொம்மை: குழந்தைகளுக்கு செய்முறைப் பயிற்சி!

பனங்கொட்டையில் பொம்மை: குழந்தைகளுக்கு செய்முறைப் பயிற்சி!

training-camp
training camp

குழந்தைகளுக்கு பனங்கொட்டை பொம்மை செய்முறை பயிற்சி நடைபெற்றது.

பனைமரங்களின் சிறப்பு மற்றும் தமிழ் பாரம்பரிய பொம்மை கலையை இளையோர் பாதுகாக்க வலியுறுத்தி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் இந்நிகழ்சியை ஏற்பாடு செய்தார்.

மதுரையை சேர்ந்த பல்வேறு சமூக ஆர்வலர்களின் குழந்தைகளுக்கு பனை ஆர்வலர் அசோக்குமார் இப்பயிற்சியை வழங்கினார். குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் இப்பயிற்சியை எடுத்துக் கொண்டனர்.

சிம்மக்கல் வீடற்றோர் இல்ல பொறுப்பாளர் கிரேசியஸ் முன்னிலை வகித்து பனைமரத்தின் மூலம் கிடைக்கும் பொருட்களையும் அதன் நலன்களையும் விளக்கினார்.

வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில் குழந்தைகள் இந்த பொம்மை செய்யும் முறையை நன்றாக பழகி மற்றவர்க்கும் சொலித்தர வேண்டும். பனை விதைகளை அதிகமாக நடவேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு அனைத்து குழந்தைகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

சமூக ஆர்வலர்கள் ஹக்கீம், துரைவிஜயபாண்டியன், ஜமாலுதீன், கண்ணன் தருன், சங்கரபாண்டியன், மணிவண்ணன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பித்தனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version