Home நலவாழ்வு மச்சம் சொல்லும் மிச்சம்: உள்ளங்கையில்…

மச்சம் சொல்லும் மிச்சம்: உள்ளங்கையில்…

Mole-3
Mole 3

ஆண்களுக்கு வலது கையில் மச்சம் இருப்பது மிகவும் உயர்ந்த அம்சமாகும். வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர் சகல சாஸ்திரங்களிலும் வல்லவர்களாக இருப்பார் என்பது விதி.

குறிப்பாக கணித சாஸ்திரம், நீதி இயல், பொறியியல் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள். சிறுகச் சிறுக முன்னேறி உன்னதமான நிலையை அடைவார்கள்.

கை விரல்களில் மச்சம்
கைவிரல்களில் அமையும் மச்சங்களுக்கு ஏறத்தாழ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான பலன்கள்தான். கட்டைவிரலில் மச்சம் இருந்தால், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பர்.

ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால், தலைமைப்பொறுப்பு வகிப்பவர்களாக இருப்பர். ஆட்சி அதிகாரம் செய்யக்கூடிய அம்சம் பெற்றவர்களாக இருப்பர். தன்னம்பிக்கை அதிகம் இருக்கும்.

நடுவிரலில் மச்சம் இருப்பின், கலை உள்ளம் படைத்தவர்களாக இருப்பர். குறிப்பாக வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள், நடனம், நாடகம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

மோதிர விரலில் மச்சம் அமைந்திருப்பின், அழகான தோற்றமும் அளவான உடல் அமைப்பும் அமைந்திருப்பது இயற்கை. எதையும் கூர்மையாக விளங்கிக்கொள்ளும் இயல்பு உண்டு. எதிர்ப்புகளை இவர்கள் முறியடிப்பார்கள்.

சுண்டு விரலில் மச்சம் இருந்தால், சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள் என்பது சாஸ்திர விதி. கல்வித் துறையில் இவர்களுக்கு மிகவும் உயர்ந்த தகுதி அமையும்.

எதிலும் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவது இவர்களின் குணம். தனியார் பதவியில் உயர்நிலையில் இருப்பார்கள்.

அரசியல் துறையில் பேச்சாளராக இருத்தல், வழக்கறிஞராகப் பேரும் புகழும் அடைதல். இடது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால், விகாரமான தோற்றத்தைப் பெற்று இருப்பார்கள்; பிடிவாத குணம் இருக்கும்.

வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்.

புத்திக்கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை செல்வச் செழிப்புடன் இருக்கும். உயர் பதவியை அடைவார்கள். தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் அளவான நிறைவான வாழ்க்கையையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் நினைத்ததை நடத்தி முடிப்பவர்கள் .

வளரும்…….

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version