― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்கட்டுரைகள்அஞ்சலி: ஸ்ரீ வேதகிரி - ஸ்ரீ சிவராம்ஜி செதுக்கிய சிலை!

அஞ்சலி: ஸ்ரீ வேதகிரி – ஸ்ரீ சிவராம்ஜி செதுக்கிய சிலை!

- Advertisement -

ஸ்ரீ சிவராம்ஜி செதுக்கிய சிலை ஸ்ரீ வேதகிரிஜி

சங்கம் மற்றும் சேவாபாரதி கார்யகர்த்தர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஸ்ரீ வேதகிரிஜி நேற்று நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

1980 முதல் அவர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். ஸ்ரீ சிவராம்ஜியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவரை வழிகாட்டியாக கொண்டு தன்னுடைய சங்க பயணத்தைத் தொடர்ந்தவர். நான் சில ஆண்டுகள் அவருடன் பணியாற்றியவன் என்ற முறையில் எனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தொடக்கம் முதல் சேவை பணிகளை அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். மாநகர் சேவா பிரமுக் ஆகவும் பணியாற்றியவர். 1999ஆம் ஆண்டு சேவாபாரதி தமிழ்நாடு அறக்கட்டளை துவங்கப்பட்ட போது, அதில் இரண்டு பேர் நிறுவன அறங்காவலர்கள் இருந்தனர். ஒருவர் திரு சுந்தர. லெட்சுமணன், மற்றொருவர் திரு வேதகிரி. அதுமுதல் மறையும் வரை அவர் சேவாபாரதி பொறுப்பில் இருந்து சேவை பணியாற்றி, பலருக்கு முன் உதாரணமாக இருந்தவர்.

மறைந்த திரு டி.வி. ராஜகோபால்ஜியுடன் இணைந்து சென்னையில் பெரியவர்களை சம்பர்க்க செய்வார். அவர்களிடம் சேவாபாரதி சார்பாக நடைபெறும் சேவை பணிகளை எடுத்துரைத்து, அதில் அவர்களையும் கலந்து கொள்ள சொல்வார். தமிழ்நாடு முழுவதும் சேவைப் பணிகளுக்கு தேவையான நிதிகளை அதன் மூலம் சேகரித்து விடுவார்.

ஸ்ரீ வேதகிரியிடம் உள்ள இரு ஈர்ப்பு என்வென்றால், அவர் ஒரு நபரை ஒரு முறை சந்தித்தார் என்றால், அவருடைய நட்பு வட்டரத்தில் அவர் வந்துவிடுவார். கடைசிவரை இருவருக்குள்ளும் ஆத்மர்த்தமான நட்பு இருந்துக் கொண்டே இருக்கும். அதுமட்டுமட்டுமல்ல அவரை ஏதாவது ஒரு பணியிலும் ஈடுபடுத்தி விடுவார்.

ஸ்ரீ வேதகிரிஜி பெரியவர்களிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு சாதாரண கார்யகர்த்தர் மீதும் கவனம் செலுத்தினார். அவர்கள் செய்த விஷயங்களையும் குறிப்பிட்டு பாராட்டுவார். அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்று தெரியவந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய பெரும் முயற்சி எடுப்பார். அவர் யாரிடமும் கடிந்து பேச மாட்டார். ஸ்ரீ வேதகிரிஜியிடம் தொடர்பிக்கு வந்தவர்கள் அவரை வாழ்க்கையில் மறக்கவே மாட்டார்கள்.

சேவாபாரதி நடமாடும் மருத்துவ ஊர்திகளை துவங்கிய போது, அதற்கு தேவையான அரசு அனுமதிகளை பெற தீவிரமாக முயற்சி செய்தவர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதிகளில் மதமாற்றம் செய்ய கிறிஸ்தவர்கள் மிகவும் தீவிரமாக முயற்சி செய்வதை அறிந்த அவர், அதை தடுக்க பல இடங்களில் இலவச டியூஷன் வகுப்புகள், பண்பாட்டு வகுப்புகள் ஆரம்பிக்க மிகவும் முயற்சி செய்தார். இதற்காக குன்றியிருந்த தன் உடல்நிலை பொறுப்படுத்தாமல். பேருந்தில் பயணன் செய்வார். சேவாபாரதி காரை பயன்படுத்துங்கள்ஜி என்று சொல்லியும் கேட்க மாட்டார். அர்த ராத்திரியில் அவர் சுற்றுப்பயணத்தை முடிந்துவிட்டு வீடு திரும்புவார். அதை கேட்கும் போது மனம் மிகவும் கனமாக இருக்கும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சேவாபாரதி வளர அடித்தளமாக இருந்தார். அவர் பல இடங்களில் ஆசிரியைகளைக் கண்டுபித்து, டியூஷன் வகுப்புகளை ஆரம்பித்தார்.

கொரோனா காலகட்டத்தில் பல இளைஞர்கள் பயந்து வீட்டில் ஓடிங்கியிருந்த போது, 70 வயது நிரம்பிய இவர் பலர் நிவாரணப் பணிகளில் பங்குகொண்டார். அவர் வசிக்கும் பகுதியில் மட்டுமல்ல, திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பயணித்து நிகழ்ச்சி கலந்து கொள்வார். கார்யகர்த்தர்கள் செய்யும் பணிகளை பைட்டக்கில் நடத்தில் ஆய்வு செய்வார். நீங்கள் வீட்டில பாதுகாப்பாக இருங்கள் என்று பலர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. சேவை செய்வதில் அவருக்கு ஒரு அலாதியான விருப்பம்.

ஸ்ரீ வேதகிரிஜிக்கு ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்ந்வர். சேவாபாரதியில் அவர் தயாரித்த திட்ட அறிக்கை, பிரசுரங்களில் அவருடைய ஆங்கில புலமை மிளுரும். அதுமட்டுமல்ல தமிழிலும் அவர் புலமை மிக்கவர்.

நமக்கு யாராவது வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பினால், அதை ஏற்று கொண்டவிதமாக கை கும்பிடுவது போன்ற சின்னங்கள் மூலம் நாம் பதிலளிப்போம். அவர் அதற்கு

அருமையான வாசகத்தை குறிப்பிட்டு அவரின் சேவையை பாராட்டுவார்.

அவரிடம் பல விஷயங்களைப் பற்றி பேசும் போது, எனக்கு இது ஸ்ரீ சிவராம்ஜி கற்றுக் கொடுத்த பாடம் என்று குறிப்பிடுவார். ஸ்ரீ சிவராம்ஜியின் ஒரு அணுக்க தொண்டராக அவர் வாழ்த்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் திருக்கடையூரில் நடைபெற்ற அவரது பீமரதசாந்தி விழாவில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டு, அவரின் ஆசிகளை பெற்றதை, பெறும் பாக்கியமாக கருதுகிறேன்.

அவர் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக நான் கருதுகிறேன். பிறர்க்கென வாழ்பவர்களே வாழ்பவர்கள், மற்றவர்கள் நடைபிணத்திற்குச் சமமானவர்கள் என்ற சுவாமி விவேகானந்தரின் அறைகூவலுக்கு உதாரணமாக அவர் வாழ்த்துள்ளார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கார்யகர்த்தர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

— காசி ஸ்ரீனிவாசன்
(சேவாபாரதி, தமிழ்நாடு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version