― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதேனி நியூட்ரினோ திட்டம் குறித்து வரும் தகவல்கள் எல்லாம் குழப்பத்தை ஏற்படுத்துகிறதே!

தேனி நியூட்ரினோ திட்டம் குறித்து வரும் தகவல்கள் எல்லாம் குழப்பத்தை ஏற்படுத்துகிறதே!

- Advertisement -

தேனி மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் அமையவுள்ள நியூட்ரினொ திட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கருத்துப் பரவலாக்கங்கள் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மட்டத்திலும் எழுப்பப் பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், நியூட்ரினோ திட்டம் குறித்த தன் சமூகப் பார்வையை முன்வைக்கிறார் எழுத்தாளர் மாரிதாஸ்…

தேனி Neutrino observatory – அதை எதிர்த்து whatsapp போன்ற சமூக ஊடகங்களில் வரும் கட்டுரைகள் எல்லாம் குழப்பமாக இருக்கே மாரிதாஸ். இதற்கு கொஞ்சம் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக விளக்கம் தரவும். {கேள்வி : ஸ்ரீநிவாஸ்}

Chlorine-37 என்ற ஐசோடோப்பு solar neutrino காரணத்தால் – ஒரு எலக்ட்ரான் இழந்து Argon 37 மாறி— போதும் போதும் இப்படி அதன் ஆய்வு உள்ளே சென்று நான் உங்களை குழப்ப விரும்பவில்லை. ஆனால் திட்டத்தை என்னால் முடிந்த அளவு எளிமையாக அதை சுற்றி விவாதமாக இந்த பதிவை வெளியிடுகிறேன்.

இந்த விவகாரத்தை பார்க்கும் முன் சில அடிப்படை விவரங்கள் புரிந்து கொள்ளவேண்டும்:

இதே ஆய்வை neutrino detector என்று உலக நாடுகள் முழுவதும் செய்கின்றன. ஜப்பான் Super-Kamiokande , கனடாவில் Sudbury Neutrino Observatory, ரஷ்யாவின் Baksan Neutrino Observatory இப்படி உலக நாடுகள் அனைத்திலும் இது நடக்கிறது நடந்தது. அறிவியல் ஆய்வுகளில் மிக அதிக பயனுள்ள தேடல்களில் இதுவும் மிக முக்கியமான தேடல்.

1,300 meters அளவு ஆழமான கிணறு தோண்டுவதாக கூறும் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்- கனடாவில் இருக்கும் Homestake experiment ஏறக்குறைய 1,478 meters ஆழத்தில் மேற்கொள்ளபட்ட இதே நியூட்ரினோ ஆய்வு – நடந்தது 1980களில். அதாவது 30வருடம் முன்னர் இதை விட ஆழத்தில் இந்த சோதனையை Raymond Davis – அமெரிக்காவில் மேற்கொண்டார். இது இதை விட கூடுதல் ஆழமும் – நிலப்பரப்பு என்பது தேனி போல் இடமே ஆகும்.

கனடாவில் உள்ள Sudbury Neutrino Observatory இதன் ஆழம் 2100 m. ரஷ்யாவின் Baksan Neutrino Observatory இது 4,700 m ஆழத்தில் அமைத்துள்ளனர்.

எனவே இந்த ஆய்வு எந்த உலகம் முழுவதும் இப்படியாகவே நடக்கின்றன. இது எதோ இங்கே மட்டும் பூதாகரமாக பேசி எதோ பெரும் பிரளயம் – தமிழ் நாடே அழிந்து போகும் என்ற அளவில் உணர்வை தூண்டிவிடும் தகவல்களை பரப்புகிறார்கள் வழக்கம் போல இந்த போராளிகள்.

இப்போ எதுக்கு இந்த Neutrino observatory?

இது நியூட்ரினோ என்ற ஒரு துகளை தேடும் பணி. அவ்வளவு தான். அந்த துகள் நீங்கள் என்று நினைத்து கொள்ளுங்கள் – நீங்கள் இப்போ என் வீட்டு கதைவை திறக்காமலே உள்ளே வருகிறீர் – என் உடல் உள்ளே புகுந்து செல்ல முடியும் – நம்ம சினிமா பட பேய்கள் போல. அதே போல ஒரு மரம் செடி மட்டும் அல்ல இந்த பூமியின் நடுவே பயணிக்க முடியும் – அதனால் உங்களுக்கு எதுவும் ஆகாது என்றால் எப்படி ? அப்படி ஒரு விசித்திரமான துகள்.

இதை ஏன் கண்டிபிடிக்க வேண்டும்???

GAMMA, X-RAY போர்வை எல்லாம் இது போல தான் கண்டிபிடிக்கபட்டு இன்று பெரிய அளவில் மருத்துவம் முதல் கடல் ஆய்வுகள் வரை மேற்கொள்ளபடுகிறது. அந்த விதாம் எந்த Alpha, beta, gamma, X-rays இவைகளை விட இது மிக அதிக பலன் தரக்கூடியது என்று நம்பபடுகிறது.

நியூட்ரினோ நமது உடலை ஏதும் செய்துவிடும் என்று கிளப்புகிறார்களே?

உங்கள் சுண்டு விரலை பாருங்கள் – அதன் நுனியில் மட்டும் சுமார் 65 பில்லியன் – அதாவது 6500,00,00,000 நியூட்ரினோ ஒவ்வொரு நிமிடமும் கடக்கிறது. வெறும் விரல் நுனியில் மட்டும். எனவே தினமும் கடந்து செல்லும் மிக சின்ன துகள் அதை பிடிக்கவேண்டும் என்று நினைத்து கொள்ளவும்.

இதை பிடிக்க எதற்கு அவ்வளவு ஆழம் செல்ல வேண்டும்???

ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள் – இது எதோ முயல் பிடிக்கும் வேலை இல்லை. இந்த துகள் அனைத்துக்கும் பொதுவான குணம் ஒன்று உண்டு – அதாவது அவை ஒரு இடத்தில் வைத்து பிடிப்பது மிக கடினமான ஒன்று.

அது ஏன் என்றால் – நீங்கள் என் வீட்டிற்கு வந்து பேசிவிட்டு செல்கிறீர். 10மணிக்கு வந்து பேசிவிட்டு 10.30க்கு கிளம்புகிறீர். அப்போ உங்களை பிடிக்க என் வீட்டிற்கு அந்த 10-10.30குள் வந்தால் பிடித்துவிடலாம். சரியா?? இந்த 30நிமிடம் என் வீட்டில் இருப்பீர்.

அதே போல இது போல துகள்களை பிடிக்க முடியும் – ஆனால் பிரச்சனை அவை அந்த இடத்தில் இருக்கும் நேரம் 10-24 (ten to the power of 24) – அதாவது பாருங்க ஒரு நொடில் 0.0000000000000000000000001 நேரம் தான் ஒரு இடத்தில் இருக்கும். இப்போ அந்த இடமும் தெரியாது – அது இருக்கும் நேரமும் இந்த விதமாக மிக விந்தையாக இருக்க அதை தேடிவது என்பதன் சவாலை கொஞ்சம் நாம் உணரவேண்டும்.

{0.0000000000000000000000001 நொடி மட்டுமே இருக்க கூடியது???? அப்படி என்றால் ஒரு நொடியை ஆயிரம் கோடி கோடி கோடியால் வகுக்க கிடைக்கும் ஒரு நேரம். 1 மணியை 60ஆள் வகுக்க கிடைக்கும் 1நிமிடம் போல். கொஞ்சம் மல்லாக்க படுத்து சிந்திக்கவும்.

நமக்கு எதுக்குடா இந்த வேலை என்று தோன்றலாம் – ஆராய்ச்சியாளர்கள் – மாணவர்களுக்கு இது ஒரு தவம். இந்த விதம் ஆய்வுகள் அறிவியல் தேடல்களில் மூலம் கிடைத்த கண்டிபிடிப்புகள் தான் உங்களை சுற்றி இருக்கும் அனைத்தும். தயவு கூர்ந்து ஆராய்ச்சிகளை – அறிவியலை எதிர்க்காதீர். அவர்கள் அதை தவமாக செய்கிறார்கள்.}

இதை பிடிக்கக் முடியாது. நிச்சயம் அது உங்களை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும். ஆனால் ஆய்வாளர்கள் 1,300 மீட்டர் ஆழத்தில் chlorine 37 – argon 37 ஆக மாறும் நிகழ்வை அதில் இருந்து வெளிப்படும் ரேடியேசன் கணக்கிடுவதன் மூலம் இதன் தன்மையை உணர்வது என்று கூறுகிறார்கள். உறுதியாக தெரிவது இல்லை.

ஒன்றை உறுதியாக புரிந்து கொள்ளுங்கள் இது அவர்கள் எதுவும் செய்வது இல்லை – தினமும் நடக்கும் அந்த நிகழ்வை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்று மட்டுமே இந்த கிணறு வெட்டபடுகிறது. எனவே இது வெறும் கண்டுபிடிக்கும் detectorமட்டுமே.

ரெம்ப சத்தம் வருதே???

வெறும் 300அடி கிணறுக்கே சத்தம் வரும் தானே… இதில் ஒரு துளை என்பது சுமார் 4200அடி வரை போடப்படும் பெரிய கிணறு – சத்தம் வருவது இயற்கையே. அதை கொண்டு பயம் கொள்ள தேவை இல்லை. இவ்வளவு ஆழமா????? ஐயோ பூமி தாய் என்ன ஆவாள்???? பூமியே அழிய போகிறது இவ்வளவு பெரிய ஓட்டையை போடா.!!

பூமி விட்டம் 12,742கிமி. அதாவது நீங்கள் போடும் இந்த கிணறு 0.01%கூட கிடையாது இதன் ஆழம். எனவே இதனால் எந்த பாதிப்பும் பூமியின் மேல்பகுதிக்கு ஏற்பட போவது இல்லை. பூமி நாம் நினைப்பதை விடவும் கொஞ்சம் உருவம் பெரிது. நீங்கள் போடும் இந்த துளை மிக மிக மிக சின்னது அதன் வடிவத்தை பொறுத்து ஒப்பிட்டால்.

சரி இதனால் எந்த ஆபத்தும் இல்லை; எங்களுக்கு என்ன லாபம்?

சுமார் 1800கோடி முதலீட்டில் இந்த ஆய்வு நடப்பதால் – தேனி அதனை சுற்றி பண புழக்கம் இதனால் உருவாகும். அது அந்த பகுதி மக்களுக்கு நிச்சயம் பொருளாதார வகையில் மறைமுகமாக நன்மை பயக்கும் விசயாமே. சாதாரண 50கோடி ரூபாய்க்கு Highway Road போட்டாலே அந்த பக்கம் நல்ல வியாபாரம் நடக்கும். இது 1800கோடி முதலீடு. எனவே நல்லது தான். ஆபத்தும் இல்லை முதலீடும் கிடைக்க இதை மக்கள் எதிர்ப்பு உருவாக காரணம் என்ன????

மேற்கொண்டு இதை பற்றி பேசும் முன்னர் :

எல்லா மத்திய அரசின் திட்டங்கள் எதையும் தமிழகத்தில் வரவிடாது தொடர்ந்து எதையாது கிளப்பி விட்டுக்கொண்டே இருக்கிறார்கள் போராளிகள் என்று புரியவில்லையா உங்களுக்கு? நீங்கள் இது பிஜேபி காங்கிரஸ் என்று பிரிக்க தேவை இல்லை. இங்கே போராளிகள் பொது நோக்கம் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து மக்களிடம் குழப்பம் தூண்டுவது தான்.

தயவு கூர்ந்து நன்கு கவனிக்கவும் – National Thermal Power Corporation(NTPC) அணுஉலை எதிர்ப்பு போராட்டம் ; Oil and Natural Gas Corporation(ONGC) எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம் , Gas Authority of India Limited(GAIL)கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் என்று அனைத்து மத்தி அரசு கீழ் வரும் நிறுவனங்கள் திட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் தூண்டப்படும்.

அதை சுற்றி காரணம் உருவாக்குவது போராட்டக்காரர்களுக்கு கைவந்த கலை. போராட்டங்கள் அனைத்தையும் நன்கு உற்றுநோக்கினால் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் , இடதுசாரி ஆதரவாளர்கள் -திராவிட கழகத்தினர் இருப்பர். இவர்களை பின்புலமாக கொண்ட பிரிவினைவாதிகள்.பிரிவினைவாதிகள் நோக்கம் ஒன்று தான் நாட்டில் பிரிவினை நடக்கவேண்டும். தனி நாடு கோரிக்கை எல்லாபக்கமும் உருவாக்கவேண்டும். இப்படி திட்டங்கள் மூலம் மத்திய அரசுக்கும் மாநில மக்களுக்கும் பகையை எளிதில் உருவாக்க முடியும்..

அட என்னப்பா சொல்ற????

சரி இந்த விதமான திட்டங்கள் அனைத்துமே முறையாக cleared by the Ministry of Environment (India) அனுமதி வாங்கிவிட்டு தானே தொடங்குகிறார்கள்? அதாவது சுற்று சூழலுக்கு ஆபத்து என்றால் எப்படி சுற்றுசூழல் துறை இதற்கு அனுமதி அளிக்கும்?

சரி அப்படி நாசம் ஆகும் என்று இந்த போராளிகளிடம் தகுந்த ஆதாரம் இருக்கும் என்றால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal , NGT) போகவேண்டியது தானே??? அதுவே சுற்று சூழல் சார்ந்து மட்டும் விசாரிக்கும் விரைவு நீதிமன்றம் தானே..

அட கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பு நடந்தது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல – பக்கா பிளான் பண்ணி 1வருடம் மேலாக பெரும் செலவில் தான் அந்த போராட்டத்தை நடத்தினர் போராட்டகாரர்கள். சரி தானே???? ஒரு திட்டமிடல் அதற்கு தகுந்த செலவுகள் செய்து எப்படி இந்த போராட்டகாரர்கள் போராட்டங்களை எதற்கு நடத்துகிறார்கள்???

நீதிமன்றம் போகாமல் – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் போகாமல் முறையாக சுற்றுசூழல் அமைச்சகத்தில் அனுமதி வாங்கி நடக்கும் திட்டங்களை எதிர்த்து இவர்கள் ஏன் மக்களை தூண்ட வேண்டும்?

போராட்டக் காரர்களுக்கு இதனால் என்ன பயன்????

பின்ன எதற்கு போராட்டகாரர்கள் கிளப்பி விடுகிறார்கள்????

சீனாவுக்கு 1,70,00,000அமெரிக்க டாலர்(110கோடிக்கு) மதிப்பில் ஒரு CAIC-10 போர் கெலிகாப்டர் செய்வதை விட – இந்தியாவை பொருளாதார ரீதியாக தாக்க வெறும் 10கோடியை சீனா போன்ற நாடுகள் இந்த போராளிகளுக்கு செலவு செய்தால் போதும் இந்த CAIC-10 போர் கெலிகாப்டர் செய்வதை விட அதிகம் சேதத்தை இந்த போராளிகள் உருவாக்குவர்.

உலகளாவிய அளவில் NGO , போராட்டகாரர்கள் என்பதே ஒரு தனி பிசினஸ் ஆவிட்டது. எந்த முதலீடும் தேவை இல்லை. வாய் இருந்தால் போதும்.

போராளிகள் நம்புவதை விட – நாட்டின் நீதிமன்றம் – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் போன்ற சட்ட அமைப்புகளின் மீது நம்புக்கைவையுங்கள்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்பது நம் நாட்டில் இதை போன்ற சுற்றுசூழல் சார்ந்த வழக்குகளை மட்டும் விசாரணை செய்யும் நீதிமன்றங்கள். தாராளமாக இந்த போராளிகள் அங்கே செல்லலாமே???? எந்த போராளியும் போகமாட்டான்.

மோடி வந்த பின் அனைத்து ஆய்வு திட்டனகளையும் வேக படுத்தியுள்ளார். எனவே பணி வேகம் பிடித்துள்ளது. இதில் மோடி பெயரையும் இழுத்து விடுகிறார்கள் – அதற்கு நான் காரணம் சொல்லி தெரிய தேவை இல்லை. திராவிட கட்சிகளை பொறுத்தவரை இப்படி நல்ல திட்டங்களை கையெழுத்து போடுவோம் – பின்ன போராட்டம் என்றால் மக்களுக்கு எடுத்து சொல்வதை விட நாடு நாசம் ஆனா கூட பரவா இல்லை வோட்டு வேண்டும் அதனால மக்கள் பக்கம் போய் நின்னு பல்லை காட்டுவோம். அவ்வளவு தான் திராவிட கட்சிகள். எவன் எக்கேடு கேட்ட என்ன எனக்கு வோட்டு போடு. அவ்வளவு தான் திமுக.

அப்துல்கலாம் இந்த ஆய்வை ஆதரித்தவர் – அவர் ஒவ்வொரு நாளும் இந்த நாட்டின் முன்னேற்றம் குழந்தைகள் கல்வி என்று நாட்டை உண்மையில் நேசித்த தேவதை- அவரை போன்றவர்களை பின் தொடருங்கள். இந்த போராளிகள் புரட்சி செய்கிறேன் என்று உங்கள் உணர்வுகளை தூண்டி ஆதாயம் தேடும் பிரிவினை ஓநாய்கள். மீசை வைத்தவன் எல்லாம் பாரதி என்று ஏமாறாதே.

இறுதியாக :

1735ல் இன்றைய நோபல் பரிசு தரும் Royal Academy of science ஒரு ஆய்வு குழுவை பெரு நாட்டுக்கு அனுப்பியது. அந்த குழுவின் வேலை பூமியின் விட்டம் , அகலம் என்று பூமியின் அளவுகளை கண்ட்பிடிப்பது. charles Marie – Pierre Bouguer தலைமையல் சென்ற இந்த குழுவை அந்த பகுதி மக்கள் எல்லோரும் சேர்ந்து எதோ சூனிய காரர்கள் என்று கருதி கல்லால் அடித்து விரட்டி – அந்த குழு எங்கோ தப்பி ஓடி இறுதியில் என்ன ஆனார்கள் என்று பலரை பற்றி விவரமே கிடைக்காமல் போனது.

அந்த காலகட்டம் அப்படி! அதனால் மக்கள் தவறாக புரிந்து கொண்டனர் கல்லால் அடித்தனர். இன்று அறிவார்ந்த சமூகமாக முன்னேறியுள்ளோம் – ஆனால் இன்று மக்கள் அறிவியலை எதிப்பது சமூகத்திற்கு நல்லது அல்ல. மக்களை தவறாக தூண்டிவிடுகிறார்கள் என்பது தான் உண்மை.

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கூறுவது போல “வெள்ளையன் போய்-கொள்ளையன் ஆட்சிக்கு வந்துவிட்டான்” என்று கூறினால் நம் மக்கள் “வெள்ளையன் கொள்ளையன் சரியாக இருக்கு அப்போ சரி தான்” என்று நம்புவர். அது தான் நம் மக்கள் பிரச்சனை. இது போல தான் இப்போ பலர் திடீர் போராளிகளாக பேச ஆரம்பித்துவிட்டனர் தமிழகத்தில். ஆனால் இப்படி வசனங்கள் அர்த்தம் இல்லாதவை. தயவு கூர்ந்து உணர்ச்சி தூண்டிவிடும் இப்படியான வாசனைகளை எல்லாம் நம்பாதீர்.

மாணவர்களை நான் கேட்டு கொள்வது – அறிவியல் சார்ந்து ஆரோக்கியமாக சிந்திக்கும் பக்குவத்திற்கு வாருங்கள். இந்த தமிழ் , முப்பாட்டன் என்று கண்ட கண்ட கதைகள் அவன் அவன் இஷ்டத்துக்கு எழுதி பரப்பி விடுகிறார்கள் – அதில் பல உண்மை அல்ல. உண்மையான தமிழக இந்திய வரலாறு தெரியவேண்டும் என்றால் புத்தகங்களில் தேடுங்கள். ஜெயமோகன் போல அறிவிவார்ந்த மக்களிடம் வரலாறை தேடி செல்லுங்கள் – அதை விட்டு விட்டு சும்மா whatsapp – Facebookல் வரும் கண்ட கண்ட கதை எல்லாம் நம்பாதீர்.

{மாரிதாஸ் என்னையும் நம்பாதீர். நான் சொன்ன தகவல் சரி என்று நீங்களே தேடி ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதங்கள் செய்து பழகுங்கள். நான் கொடுக்கும் தகவல்கள் , புள்ளிவிவரங்கள் அனைத்தையும் தயவு கூர்ந்து படித்து சரியா என்று தேடி படிக்கவும்.}

மீண்டும் கூறுகிறேன் : சமூக முன்னேற்றத்திற்கு அறிவியலையும்- மனஅமைதிக்கு ஆன்மிகம் ; இந்த இரண்டையும் மதிக்காத சமூகம் உருப்படாமல் போகும். அதை விட நடிகர் மயில்சாமியிடம்-நடிகை கஸ்தூரியிடம் பொருளாதார கேள்விகள் கேட்டு திரியும் இந்த செய்தி ஊடகங்களால் சமூகம் நாசம் ஆகும்.

-மாரிதாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version