“மாவடு ஊறுகாய்” எஸ்.மீனாட்சி அம்மாளின் பக்குவம் (பழைய கால புத்தகத்தில் இருந்து) தட்டச்சு-வரகூரான் நாராயணன். தேவையான சாமான்கள், 1) (மலை வடுவானால்) 48 கப்புகள் (12 லிட்டர்கள்) ,மாவடு 2)உப்பு- 8 கப்புகள் (2 லிட்டர்) 3)மிளகாய் வற்றல் அல்லது 2 கப்புகள் காரப்பொடி. 4)கடுகு 3 டீஸ்பூன்கள். 5)வரளிமஞ்சள்,விளக்கெண்ணெய் 3 டீஸ்பூன்கள். (தோப்பு வடுவானால்) 64 கப்புகள் (16 லிட்டர்) மாவடு உப்பு 8 கப்புகள் (2 லிட்டர்) காரப்பொடி 2 கப்புகள். கடுகு 4 டீஸ்பூன்கள் வரளி மஞ்சள் 4 விளக்கெண்ணெய் 4 டீஸ்பூன்கள் (கடுகையும்,மஞ்சளையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மாவடுவை ஜலத்தில் கொட்டி அலசி,அலம்பி, மூங்கில் கூடையில் வடியவைத்து, தாம்பாளத்தில் போட்டுக்கொண்டு விளக்கெண்ணெய்,கடுகு-மஞ்சள் அரைத்த விழுது இவைகளையும் போட்டுக் கலந்து கொள்ளவும். ஊறுகாய் போடும் ஜாடியை அல்லது பாத்திரத்தை நன்றாக துடைத்துக் கொண்டு, முதலில் ஒரு கை உப்பை அடியில் போடவும். அதன் மேல் நான்கு கை மாவடுவைப் போட்டு, ஒரு கை உப்பையும்,கொஞ்சம் காரப்பொடியையும் போடவும். அதே மாதிரி மாவடுவும்,உப்பும்,காரப்பொடியுமாகக் கடைசிவரை நிறவிப் போட்டு மூடி வைத்து, மறுநாள் போக மறுநாள் கலந்து எடுக்கவும்.உப்பு காரப்பொடி மிகுந்து போனால் மேலாகப் போட்டுவிடவும். (மிளகாயையும் இடித்துக்கொண்டு,கடுகு மஞ்சள் இவற்றை அரைத்து விளக்கெண்ணையையும் விட்டுப் பிசறிக் கலந்து, வடுவையும்,இடித்து வைத்துள்ள உப்பு-மிளகாயையும் போடலாம்) 8 கப்புகள் உப்புக்கு, 8 கப்புகள் ஜலத்தை விட்டு அடுப்பில் வைத்து உப்பு நன்றாகக் கரைந்து பாதி ஜலம் வற்றும் வரை நன்றாகக் காய்ச்சி, இறக்கி ஆறவைத்துக் கொண்டு இரண்டு கரண்டிகள் (1/3 கப்) உப்பு ஜலமும்,காரப்பொடியும்,வடுவுமாக முன் சொன்னபடி போட்டால், எத்தனை நாட்களானாலும் வடு அழுகாமல் நிறமாக இருக்கும். குறிப்பு; மாவடுவின் காம்புகளை முழுவதும் எடுக்காமல், அரைவிரல் நீளக் காம்புடன் போட வேண்டும். பொதுவாக எல்லா ஊறுகாய்களுக்கும், மிளகாய் வற்றலை மிஷினில் அரைக்காமல், உரலில் அல்லது கிரைண்டரில் இடித்துப் போட்டால், ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
“மாவடு ஊறுகாய்”
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari