சென்னை: நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் ஆகிறது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான கூட்டம் பிப்ரவரி 17-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை நடந்தது. நாளை மீண்டும் சட்ட சபை கூடுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும். முதலில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். அதை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும். இதில் அந்த துறைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்படும். பட்ஜெட் விவாதம் நிறைவு பெற்றதும் அதற்கு முதல் – அமைச்சர் பன்னீர் செல்வம் பதில் அளிப்பார். துறை ரீதியாக விவாதத்துக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். இந்த கூட்டத்தொடர் ஒரு மாதம் நடைபெறலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

