
திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்னை சிறப்பு ரயில் சேவை 16.9.2026 – 28.10.26வரை இரு மார்க்கத்திலும் தலா 7 நடைகள் நீட்டிப்பு செய்து தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாம்பரம் – தென்காசி மற்றும் செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை தெற்கு ரயில்வேயால் இயக்கப்படுகிறது. தாம்பரம் – தென்காசி _ செங்கோட்டை சிறப்பு ரயில் சேவை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு செப்டம்பர் 10 நேற்று காலை 08:00 மணிக்கு தொடங்கி சில நிமிடங்களிலேயே இருக்கைகள் பதிவாகின.
இது போல், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லக்கூடிய மக்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி மற்றும் பெங்களூர் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் முன்பதிவு நாளை வெள்ளிக்கிழமை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
06151 || சென்னை எழும்பூர் திருநெல்வேலி சிறப்பு ரயில் வரும் செப்டம்பர் 12 சனி இரவு 11:50 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் ஞாயிறு காலை 11:15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
06152 || திருநெல்வேலி சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் வரும் செப்டம்பர் 14 திங்கள் இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் செவ்வாய் காலை 10:15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும்.
இந்த ரயில் தாம்பரம் செங்கல்பட்டு விழுப்புரம் விருதாச்சலம் அரியலூர் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் சோழவந்தான் மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டியில் இரு மார்க்கத்திலும் நிற்கும். செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை இன்று காலை 8 மணிக்கு இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் மற்றும் முன்பதிவு செயலிகளில் தொடங்கியது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் இந்த சிறப்பு ரயிலை சென்னையிலிருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
பெங்களூரில் இருந்து விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்கள் திருநெல்வேலி மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. சொந்த ஊருக்கு பெங்களூரில் இருந்து செல்லும் மக்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்தி கொள்ளுங்கள் !
கே எஸ் ஆர் பெங்களூர் திருநெல்வேலி மற்றும் பெங்களூர் கண்டோன்மெண்ட் சென்னை சென்ட்ரல் ஆகிய சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது
ரயில் எண். 06109/06110: திருவனந்தபுரம் சென்ட்ரல் – சென்னை – திருவனந்தபுரம் மத்திய சிறப்பு சேவை
இந்த சேவை திருவனந்தபுரம் மற்றும் சென்னை (தாம்பரம்) மற்றும் கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக மீண்டும் இயங்குகிறது.
திருவனந்தபுரம் – சென்னை சிறப்பு: ஒவ்வொரு புதன்கிழமை
சென்னை – திருவனந்தபுரம் சிறப்பு: ஒவ்வொரு வியாழன்

