― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeNewsPARIS MANICKA VINAYAGAR TEMPLE CAR FESTIVAL

PARIS MANICKA VINAYAGAR TEMPLE CAR FESTIVAL

- Advertisement -




















பாரீஸ் மாணிக்க விநாயகர் 12 வது தேர்த் திருவிழா

இங்கே நீங்கள் காண்பது, பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் வீற்றிருக்கும் மாணிக்க விநாயகர் ஆலயத்தில் நடந்த தேர்த்திருவிழா பற்றிய செய்தியும் படங்களும்…

பிறந்த பொன்னாடும் பிறந்த மதமும் கலாசாரமும் என்றென்றும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்ற கொள்கை உடைய உண்மைத் தமிழர் உலகமெலாம் பரந்திருக்கின்றனர். அவர்களின் கொள்கைகளை இன்றளவும் காத்துவருவதை இந்த விழாவின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். குறிஞ்சிக்கு முருகனும் முல்லைக்கு மாலவனும் தெய்வங்களாக பழங்காலத் தமிழனின் பார்வையிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கிறது.

பிரான்ஸின் பாரீஸ் நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீமாணிக்க விநாயகர் கோயிலில் தர்மகர்த்தாவாக இருந்து கோயிலை நல்ல முறையில் பரிபாலித்துவரும் திரு. சந்திரசேகரம் குழுவினரின் முயற்சியில் இந்த வருடமும் தேர்த்திருவிழா நல்ல முறையில் நடந்து முடிந்தது. பாரீஸ் நகரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்தத் தேர் பவனியை பல செய்தி ஊடகங்கள் அங்கே வெளிப்படுத்தியுள்ளன. தமிழர் கலாசார நிகழ்வாகத் திகழும் இந்த நிகழ்வுக்கு பாரீஸ் மற்றும் பிரான்ஸின் இந்துக்கள் மட்டுமல்லாது அண்டை நாட்டு இந்துக்கள் அல்லாதோரும் இந்துக் கலாசார நிகழ்வாகிய இந்த தேர் பவனியில் காவடி எடுத்து உற்சாகமாகக் கலந்து கொள்கின்றனர்.

இந்த வருடம் செப். 2இல் இந்த 12வது தேர்பவனி விழா நடந்தது, இந்த நிகழ்வில் இலங்கை இந்திய தூதரகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். வழக்கம் போல் வீதியில் வர்த்தகர்களும் பக்தர்களும் கூடி, வீதியை சுத்தம் செய்து, மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்து, வந்த பக்தர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து சிறப்பித்தனர்.

தேர்பவனியின் போது, பல ஆயிரக்கணக்கான தேங்காய்கள் சிதறி அடிக்கப்பட்டதை, அதாவது விடல் போடப்பட்டதை வேற்றுநாட்டவர்கள் ஆச்சரியமுடனும் ஆர்வத்துடனும் கண்டு ரசித்தனர். பகல் 11 மணியில் இருந்து, பிற்பகல் 3மணி வரை பாரீஸின் குறிபிட்ட பிரதான வீதிகள் வழியாக பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. மேளதாளங்கள், காவடிகள், கற்பூரச் சட்டிகள் என பக்தர்களின் கூட்டம் அலைமோத விநாயகப் பெருமான் பாரீஸின் நகர வீதிகளில் தேரில் அமர்ந்துகொண்டு பவனி வந்தார்.

தமிழகத்தின் டமில் கல்ச்சர் காக்கும் கலகத்துக்காரர்கள் தினந்தோறும் சிறுமூளை சிதறியபடி சுய உணர்வில்லாமல் உளறிக்கொண்டிருக்க, திக்கெட்டும் கால் பதித்துள்ள இலங்கைத் தமிழர்கள் இன்னும் அதே பழைய கலாசாரப் பிடிப்புடன் திகழ்வது ஆறுதல் அளிக்கும் சங்கதி. மேலே படங்களில் நீங்கள் கண்ட இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் இலங்கைத் தமிழர்களே!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version