திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட , அவர் உசிலம்பட்டி பகுதியில் சைக்கிளில் பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஸ்டாலின் ஆட்டோவில் தொங்கிக்கொண்டும், மற்றும் டூவீலர் ஓட்டி மக்களை சந்தி்த்து குறைகளை கேட்டு வருகிறார். நாளை மதுரை மாநகராட்சி பகுதியில், சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.