- Ads -
Home Reporters Diary மெக்காவில் இந்தியர் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து

மெக்காவில் இந்தியர் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நேற்று(26ம் தேதி) நிலவரப்படி இந்தியர்கள் சிக்கி 35 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்தியர் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து. மேலும், 4 இந்தியர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.இதில், ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்; இருவர், ஜார்க்கண்ட் மற்றும் உ.பி.,யைச் சேர்ந்தவர்கள். எஞ்சியோரை, அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ‘டுவிட்டரில்’ தெரிவித்து உள்ளார்.
இத்தகவலை, ஜெட்டாவில் உள்ள ஹஜ் தூதரகமும் உறுதி செய்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானவர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இன்று (செப்.,24) பக்ரீத் என்பதால் அதிகமானவர்கள் வழிபாடு நடத்த மெக்கா நகரில் குவிந்தனர். அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் மினாவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 760 பேர் உயிரிழந்துள்ளனர். 930 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் அவசர நிலை சிகிச்சைகள் அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு மட்டும் இதுவரை 1,50,000 பேர் ஹஜ் யாத்திரை சென்றுள்ளனர்.மெக்கா நகரில் இம்மாதத்தில் நடைபெறும் இரண்டாவது பயங்கர விபத்து இது. கடந்த சில நாட்களுக்கு முன் மெக்கா மசூதியில் கிரேன் விழுந்த சம்பவத்தில் 105 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version