
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டத்தை 30க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு.
சிவகாசி மாநகராட்சி மொத்தம் 48 வார்டுகளைக் கொண்டது .இதில் திமுகவை சேர்ந்த சங்கீதா இன்பம் மேயராக உள்ளார்.
இந்நிலையில் மேயர் சங்கீதா தலைமையில் இன்று மாதாந்திர கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் 48 மாம் என்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களிடம் எந்த தகவலும் முறையாக அறிவிப்பதில்லை எனவும் பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாக இதனால் தங்கள் பகுதிக்குள் செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் கூறி துணை மேயர் விக்னேஷ் பிரியா உட்பட கூட்டத்தை புறக்கணித்தனர்.
மீதமுள்ள 18 உறுப்பினர்கள் கொண்டு மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மீதமுள்ள உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் சாலை உள்ளிட்ட அடிப்படை வேண்டும் என அதிகாரியிடம் முறையிட்டனர்.