Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் மனைவிக்கு கணவன் வைத்த பரிட்சை!

மனைவிக்கு கணவன் வைத்த பரிட்சை!

nalayani
nalayani

தொண்டை நாட்டில் நிடத நாடு என்ற நாடு உள்ளது. இதன் தலை நகரம் ஆதிந்தபுரம் ஆகும். அந்நாட்டை ஆண்ட ஸ்ரீநளச்சக்கரவர்த்திக்கும், சேது நாட்டு இளவரசி தமயந்திக்கும் பிறந்தவள் ஸ்ரீநளாயினி தேவி. நளாயினியின் பூர்வீக பெயர் இந்திர சேனை என்பதாகும்.

இப்படி இருக்கையில் அவளுக்கு பருவம் வந்தது, பருவம் வந்த பெண்ணை வீட்டில் வைத்து இருபது சரி அல்ல ஆகையால் அவளுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் நள மன்னன்.

இவ்வாராக அவளது தந்தை எண்ணி கொண்டிருக்கும் பொழுது, அவளுக்கோ திருமணம் செய்து கொள்வதில் நாட்டம் இல்லாமல் இருந்தது, அதனை தன் தாயிடம் கூறினாள்.

ஆனால் நளச்சக்ரவர்தி மன்னன் தன் மகளிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு அவனி ஐம்பத்தைந்து தேச இளவரசர்களின் உருவப் படங்களை காமித்தார். நளாயினியோ தனக்கு ஏற்ற ஆடவன் எவனும் இல்லை என்று கூறி விட்டாள். நல மன்னரோ! என்னமா இப்படி கூறிவிட்டாய் கடைசிவரையில் கன்னியாகவே இருக்க போகிறாயா என்று கேட்டார்.

நளாயினியோ இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை ஆதலால் நான் சிவ பூஜை செய்ய போகிறேன் என்று கூறினாள். உடனே நள மன்னன் மகளே உனது விருப்பமே எனது விருப்பம் ஆகையால் நீ அரண்மனையில் இருக்க வேண்டாம் கன்னிகா மாடம் ஒன்று கட்டி தருகிறேன். உன் தோழி பெண்களுடன் அங்கே இருந்து சிவ பூஜை செய்து கொள்ளம்மா என்றார். ஆனாலும் உனக்கு ஏற்ற ஆடவரை நீ தேர்ந்தெடுத்து விட்டால் உனது கணையாழி ஆகிய மோதிரத்தை அந்த ஆடவனிடம் கொடுத்து என்னிடம் அனுப்பிவை அதை பெற்றுக்கொண்டு அதுவே உன் சம்மதம் என்று எண்ணி அவனுக்கே உன்னை திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறினார். நளாயினியும் அதனை ஒப்பு கொண்டு கன்னிகாமாடத்தில் சிவ பூஜை செய்து கொண்டிருந்தாள்.

இப்படி இருக்க தேவலோகத்திலே தேவ சபையில் ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது கற்பில் சிறந்தவள் யார் ? என்று நடந்தது
அதில் இந்திரனோ என் மனைவி கற்பில் சிறந்தவள் என்றான், அப்பொழுது நாரத மகா முனி உன்மனைவி கற்பில் சிறந்தவள் அல்ல என உரைத்தார், இந்திரனோ அப்படியென்றால் தேவமும்மூர்த்திகளின் மனைவிகளும் கற்பில் சிறந்தவர்கள் இல்லையோ ? என்று வினவினான், அதற்கும் நாரதர் இல்லை என்று மறுத்தார்.அப்போது கற்பில் சிறந்தவள் யார் என்று இந்திரன் கேட்டான் ? கற்பில் சிறந்தவளோ நளமன்னனின் மகள் நளாயினி ஒருவளே என்றார் நாரதர். இதனை கேட்ட மௌத்கல்ய முனிவர் (அவர் சிவனின் அம்சமாவார்)
அப்படி என்றாள் அவளை சோதிக்க வேண்டும்.நானே செல்கிறேன் என்று புறப்பட்டு பூலோகம் செல்ல தொடங்கினார்.

நாரதர் அவருக்கு முன் நளாயினியை சந்தித்து, உன்னை கன்னிகாமாடத்தில் வந்து சந்திக்கும் ஆடவனே உனக்கு கணவனாக அமைவான் உன்னுடைய சிவபூஜையின் பலன் இது தான் அம்மா என்று கூறினார் , நளாயினியோ நாரத மாமுனிவர் கூறினால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணி, மணாளன் வரவை எதிர் நோக்கி காத்திருந்தாள்.

மௌத்கல்ய முனிவர் நளமகராஜனை சந்தித்து உமது பெண்ணை எனக்கு மணமுடித்து தர வேண்டும் என கேட்டார். ஆனால் மன்னர் மறுத்து விட்டார் நான் ஒன்றும் சொல்ல முடியாது முனிவரே எனது மகள் கன்னிகா மாடத்தில் இருக்கிறாள் நீர் அங்கே சென்று அவளது சம்மதம் வாங்கி வந்தால் திருமணம் செய்து வைகிறேன் என்று கூறினார். ஆனால் கேளும் முனிவரே எனது மகள் உங்களை மணக்க சம்மதிக்க மாட்டாள் ஆகையால் உம் ஆசையை விடுத்து போய் தவம் மேற்கொள்வாயாக என்று அறிவுறித்தி அனுப்பி விட்டான் நளமன்னன் முனிவரோ எப்படியும் உனது மகளிடம் சம்மதம் வாங்கி வருவேன் என்று கூறி சென்றார்.

இப்படி இருக்க மௌத்கல்ய முனிவர் தான் இவ்வேடத்தில் சென்றாள் அவள் மனம் செய்து கொள்ள மாட்டாள் ஆகையால் தனது உருவத்தை மாற்றி செல்ல வேண்டும் என்று மன்மதனை போல அழகு கொண்ட உருவம் எடுத்து கன்னிகா மாடம் சென்றார், நளாயினியை சந்தித்தார் அவரது அழகில் மயங்கி நளாயினியும் சம்மதம் தெரிவித்தாள் பின் தனது மோதிரத்தை கழட்டி அவரிடம் தந்து தன் தந்தை இடம் கொடுங்கள் நமது திருமணத்தை நடத்தி வைப்பர் என்று கூறினாள்.

அதை வாங்கி கொண்டு மௌத்கல்ய முனிவர் தனது வயதான ரூபத்துடன் மன்னனிடம் மோதிரத்தை கொடுத்தார் , நள மன்னன் வியந்தான் என்னவோ தெரியவில்லை நமது மகளுக்கு இந்த கிழவனை தான் பிடித்திருக்கிறது போல ஆகையால் திருமணத்தை முடித்து வைப்போம் என்று முடிவு செய்து திருமணத்தையும் முடித்து வைத்தார்.
நளாயினி .. பொன்னிற மேனியும், பார்ப்பவரை வசீகரம் செய்யும் அழகானவள். அவள் அழகுக்கு சற்றும் பொருத்தமே இல்லாத மௌத்கல்ய முனிவருக்கு மனைவியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் மனைவியாகி இல்வாழ்வை மனமகிழ்வுடன் துவங்க இசைகிறாள்.

ஆனால் மௌத்கல்யர் இயல்பிலேயே சந்தேக குணமும், முன் கோபமும் கொண்டவர். அவரால் நளாயினி தன்னை கணவனாக ஏற்றுகொள்ளத்தயாரானதை ஒத்துக்கொள்ளவே இயலவில்லை. குள்ளமாக, கருப்பாக அவலட்சணத்துடன் இருக்கும் தன்னுடன் நளாயினி நிச்சயம் மனமொத்து வாழ இயலாது என்று அவருக்கு தாழ்வுணர்ச்சி ஏற்பட்டது. இதனால் தன் மனைவி நளாயினியின் அன்பை சோதித்து அவள் அதில் தேர்வு பெற்றாள் மட்டுமே அவளுடன் இல்லறவாழ்வை துவங்குவது என்று முடிவு செய்தார்.

தன் தவவலிமையால் பெற்ற யோக சக்தியில், தன்னை முதியவனாக மாற்றிக்கொண்டு அறைக்குள் படுத்துக்கொண்டார். இளமைக்கே உரிய கனவுகளுடன் கணவனைக்காண அறைக்குள் நுழைந்தாள் நளாயினி. இளமையும் அழகும் ஒருங்கிணைந்த ஒரு பெண்ணுக்கு தாம்பத்தியம் குறித்த கனவுகள் இருந்தாலும், தான் வளர்ந்த சூழலும், கட்டுப்பாடும் அவள் அதை வெளிப்படுத்த சந்தர்ப்பங்களே தருவதில்லை. தன் மொத்த தாபத்தையும் தீர்த்து கொள்ள அவளுக்கு கிடைக்கும் ஒரே வடிகால் கணவன்தான்.

அதனாலேயே நம் குல பெண்களுக்கு கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற தாரக மந்திரத்தை அவள் கருவில் இருக்கும்போதே விதைத்து விடுகின்றனர். அதுவும் பத்தினித்தன்மை கொண்டாடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த நளாயினியின் வாழ்க்கை சூழலில், இல்வாழ்க்கை குறித்த பார்வை எப்படியிருந்திருக்கும்? இளமையின் தினவினை அவள் எங்கு போய் தொலைக்க முடியும்? அறைக்குள் நுழைந்த நளாயினி, அசந்து தூங்கி கொண்டிருக்கும் தன் கணவனைக் கண்டாள்.

தான் உள்ளே நுழையும் சப்தம் கேட்டு கணவன் விழித்து விட கூடாதே என்ற கவனத்துடன் மெதுவாக வந்து அவனருகில் அமர்ந்து தன் முந்தானையால் அவன் உடலில் இருக்கும் வியர்வைத்துளிகள் போக விசிறி விட்டாள்.

திடீரென்று தன் உடலில் குளிர்ந்த காற்று வீசியவுடன்,தூக்கம் கலைந்து இருமிக்கொண்டே எழுந்தார் முனிவர். அழகே உருவாக தன் அருகே அமர்ந்திருக்கும் நளாயினியை தன் இடுங்கிய கண்களால் பார்த்தவர் முகம் சுளித்தபடி “உன்னைப்பார்த்தால் எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு பிடித்த மனைவியாக என்று நீ மாறுகிறாயோ அன்றுதான் உனக்கும் எனக்கும் இடையில் தாம்பத்யம். போ.. போ.. தள்ளிப்போ..” என்று சீறுகிறார். பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாக ஒதுங்கி அமர்கிறாள் அழகுதேவதை நளாயினி.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் கணவனுக்கு பணிவிடை செய்வதும், அவள் எப்படி பணிவிடை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து அவளைத்திட்டி தண்டிப்பது கணவனான மௌத்கல்யரின் செயலாகவும் ஆனது. தன் தவவலிமையால் மௌத்கல்யர் தன் மேனியில் தொழுநோய் பரவ செய்தார்.

அதனால் அவர் உடலில் இருந்து நீர் வடிவதும் துர் நாற்றம் வருவதும் அதிகமானது. நளாயினி அது குறித்து கொஞ்சம் கூட அருவெறுப்பு படாமல் எப்பொழுதும் கணவனின் மேனி முழுவதும் துடைத்து விட்டு, நாற்றம் தெரியாமல் இருக்க வாசனை திரவியங்களைத்தடவி அவரை மிகவும் அன்புடன் கவனித்துக்கொண்டாள்.

நளாயினியின் பொறுமையும், அமைதியான சேவையும் கண்ட முனிவருக்கு அவள் மேல் நம்பிக்கை வருவதற்கு பதில் சந்தேகமே அதிகமானது. எந்த பெண்ணும் கல்யாண சுகமே இல்லாமல், நோயாளி கணவனை பேணும் வாழ்க்கையே சுகம் என்று வாழ முடியவே முடியாது எனவே இவளை இன்னமும் சோதிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார். எப்பொழுதும் கணவன் சாப்பிட்டு வைக்கும் மிச்சத்தையே உண்ணும் வழக்கம் கொண்டவள் நளாயினி.

அன்றும் வழக்கம்போல் கணவன் சாப்பிட்ட இலையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சொற்றின் நடுவே தொழுநோயால் விண்டு விழுந்த கணவனின் விரல் ஒன்று இருந்தது. இப்பொழுது நளாயினியின் முகபாவத்தை வைத்து அவளது உண்மையை கண்டு பிடித்து விடவேண்டும் என்று தூங்குவதுபோல் பாசாங்கு செய்து படுத்திருந்தார் முனிவர்.

நளாயினி எந்தவித உணர்வினையும் வெளிக்காட்டாமல், அந்த விரலை தன் இலையிலேயே ஒரு ஓரமாக வைத்து விட்டு, சாப்பாட்டை மிகவும் ஆசையுடன் சாப்பிட ஆரம்பித்தாள். முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. நாம் என்ன செய்தாலும் இவளை ஒண்ணும் செய்ய இயலவில்லையே என்று யோசித்தார். சாப்பிட்டு கொண்டு இருந்தவளை எட்டி உதைத்தார். ” எனக்குள் காமம் பெருக்கெடுத்து என்னை தவிக்க வைக்கிறது. ஆனால் உன்னைப்பார்த்தால் எனக்கு அந்த ஆர்வம் அடங்கி குமட்டல் எடுக்கிறது. இப்பவே என்னை பக்கத்து ஊரில் வசிக்கும் நாட்டியக்காரியிடம் கூட்டிச்செல். அவள் மட்டும்தான் என் மோகவெறியை தீர்க்க முடியும்.” என்று வெறிக்கொண்டு கத்துகிறார் முனிவர்.

பக்கத்து ஊரில் வசிக்கும் நடன மங்கை தொழில் முறை தாசி. அவள் படுக்கை சுகமளிக்க பணத்திற்கு பதில் தங்க நகைகளை மட்டுமே பெற்றுக்கொள்வாள். நளாயினி தன் கழுத்தில் உள்ள தாலிச்சரடை கழட்டி விட்டு, தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து கொண்டு,கணவனை பக்கத்து ஊருக்கு கொண்டு செல்ல தயாரானாள். தன் கணவனை ஒரு பெரிய போர்வை கொண்டு போர்த்தி,பெரிய கூடையில் உட்காரவைத்து தன் தலையில் சுமந்து கொண்டு பக்கத்து ஊருக்கு நடந்தே செல்ல ஆரம்பித்தாள். வழி நெடுக அவளைப்பார்த்த ஊர் மக்கள் ,”இவளுக்கு என்ன பயித்தியம் பிடித்திருக்கிறதா… இப்படி வாட்டும் கொடுமைக்கார கணவனை தாசி வீட்டிற்கு சுமந்து செல்கிறாளே…ஒரு பெண் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கலாம். தன் கணவனையே இன்னொருத்திக்கு விட்டு கொடுக்க இயலுமா” என்று ஒருவருக்கொருவர் பேசி, அவளைப்பார்த்து கிண்டலாக சிரித்தனர். யாருடைய நகைப்பினையும் பொருட்படுத்தாமல், சலனம் எதுவும் இல்லாமல் தன் கணவனை மிகவும் பொறுமையாக தாசியின் படுக்கையில் படுக்கை வைத்து விட்டு, தன் பசிக்கு உணவு கூட உண்ணாமல், தாசியின் வீட்டு வாசலிலேயே பொழுது சாய்ந்து தன் கணவன் வெளியில் வரும்வரை தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். உள்ளே சென்றதும் கிழவன் உருவத்தில் இருந்த மௌத்கல்யர் மன்மதனைப்போல் அழகிய இளைஞனாக மாறினார் இதைக் கண்டதும் தாசி இச்சையுடன் அவரருகே வந்தாள் பெண்ணே அங்கேயே நில் என்றார் மௌத்கல்யர் நீயும் நானும் ஒன்று சேர்ந்தால் வெளியே உள்ள என் மனைவியாகிய நளாயினி கற்பு தீ நம்மை எரித்துவிடும் சுகம் கண்டது போல் வெளியே சென்று விடு என்று மௌத்கல்யர் சொன்னார் அதன்படியே வீட்டிற்கு வெளியில் ஓடிவந்து, ” நளாயினியைப்பார்த்து இவனை முதலில் இங்கிருந்து தூக்கி செல் என்று கோபத்துடன் திட்டினாள். சூரியன் அஸ்தமனமாகி வானம் இருளத்துவங்கியது. சின்ன சின்னதாக நட்சத்திரங்கள் உதித்து வானில் கண்சிமிட்டி சிரிக்கத்துவங்கின. புண்ணான கால்களினால், பொன்னான நளாயினியை எட்டி உதைத்து,” களைப்பாய் இருக்கிறது, சீக்கீரம் போ என்று உதைத்து, குஷியுடன் நகைத்தான் முனிவன். உலர்ந்து போன மனதுடன், உலகையே மறந்து கணவனை சீக்கிரம் இன்னொரு மழை வருவதற்குள் வீட்டிற்கு தூக்கி செல்ல வேண்டுமே என்ற பதைப்புடன் ஓட்டமும், நடையுமாக கணவனை சுமந்து வேகமாக நடந்து சென்றாள் நளாயினி. அவளுடைய பொல்லாத நேரம் கவனமில்லாமல்,

வழியில் மாண்டவ்யர் என்ற முனிவர் மன்னன் ஆணையின்படி கழுவேற்றப்பட்ட நிலையில் இருந்தார் என்று மகன் கூறத் தந்தை மாண்டவிய முனிவரின் அந்நிலைக்குக் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு மகன் மாண்டவ்யர் சிறுவயதில் பூச்சிகளைப் பிடித்து இம்சை செய்து வந்ததன் பலன் அது என்று கூறினான். மேலும் திருடர்கள் அவ்வூர் மன்னன் அரண்மனையில் திருடிவிட்டு ஓடிவருகையில் முனிவர் கழுத்தில் ஒரு முத்துமாலையைப் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னால் துரத்தி வந்த அரண்மனை சேவகர்கள் முனிவர் கழுத்தில் முத்துமாலையைக் கண்டு அவரை மன்னன் முன்னிலையில் கொண்டு நிறுத்த, விசாரணையின் போது முனிவர் தவநிலை காரணமாக பேசாதிருக்க அவரைக் கழுவேற்றுமாறு மன்னன் உத்தரவிட, அதன்படி மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டு இருந்தார்.
கூர்மையான மரத்தில் உட்காரவைக்கப்பட்டு, பின்புற சதையைத்துளைத்து ரத்தம் சொட்ட சொட்ட தொங்கி கொண்டிருந்த மகரிஷி மாண்டவியாரை கவனிக்காமல், அவர் கால்களில் மோதி விட்டாள்.

வேதனையின் உச்சத்தில் இருந்த மகரிஷிக்கு நளாயினி சுமந்திருந்த கூடையின் விளிம்புகள் உரசி அவர் பாதங்கள் இரண்டு ஊஞ்சல் போல் ஆட, வேதனை அதிகரித்து கழுமர கூர்மை அவர் உடலை இன்னும் ஒரு அங்குலம் இறக்கியது. தாங்க இயலா வேதனையுடன் தன்னை இடித்தவர் யார் என்று பார்க்க, மிக வேகமாக கூடையில் கணவனை சுமந்து செல்லும் நளாயினி தெரிந்தாள். தன்னை இடித்ததும் அல்லாமல் நின்று பதில் கூட சொல்லாமல் செல்லும் நளாயினியை பார்த்து மகரிஷி ” ஏய் பெண்ணே என்னை இடித்து வேதனைப்படுத்தி விட்டு, எதுவும் நடவாதது போல் ஓடுகிறாயே… எந்த கணவனை நீ தெய்வமாக சுமந்து செல்கிறாயோ அவன் இந்த இரவு விடியும் போது இறந்து போவான். நீ விதவையாவாய்… நிச்சயம்”என்று சாபமிட்டார்
. கணவனை சுமந்து ஓடிக்கொண்டிருந்த நளாயினி வேகமாக திரும்பி வந்து ,” மகரிஷீ, நான் தங்களை வேதனைப்படுத்த வேண்டும் என்று செய்யவில்லை. என் கணவன் துரிதமாக செல் என்று ஆணையிட்டதால், எனக்கு சுற்றுப்புறம் பற்றிய சிந்தனையில்லாமல் வேகமாக சென்று விட்டேன். தயவு செய்து என் தவறை மன்னியுங்கள். நான் செய்த தவறுக்கு ஒரு பாவமும் அறியாத என் கணவன் இறக்க வேண்டும் என்று சபிப்பது நியாயமல்ல. தங்கள் சாபத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்” என்று ரிஷீயிடம் கெஞ்சினாள். ரிஷியோ அவளை ஏறெடுத்தும் பாராமல் நான் பட்ட வேதனையை நீ உணர வேண்டும். என் சாபத்தை திரும்ப பெற மாட்டேன் ” என்று தீர்மானமாக கூறினார். நளாயினி வேதனையுடன், ” மகரிஷீ நான் இன்னமும் இல்வாழ்க்கையை துவங்காத புதுமணப்பெண்.

எனக்கு கணவன் இறந்து விடுவான் என்று சபிப்பது நியாயமா? என்னை மன்னிக்க கூடாதா? என்று கண்ணீர் மல்க வேண்டினாள். ஆனால் மகரிஷி உடல் வேதனை அதிகரிக்க, கண்களை மூடிக்கொண்டு பதில் ஏதுவும் பேசாமல் மவுனமானார். அதுவரை கெஞ்சிகொண்டிருந்த நளாயினிக்கு கோபம் வந்தது, ” முப்பது முக்கோடி தேவர்களே… தேவர்களின் மன்னன் இந்திரன், இந்திராணி அவர்களே கேளுங்கள். இன்னமும் திருமண வாழ்வை துவங்காத, கன்னியான என்னை கைம்பெண்ணாக சபித்த மகரிஷீ மந்தவராயரின் சாபம் பலிக்க வேண்டுமாணால் நாளை காலை சூரியன் உதிக்க வேண்டும். சூரியனே.. நீ உதிப்பதால் என் கணவன் இறக்க நேரிடுமானால்.. இனி நீ இப்பூவுலகில் உதிக்கவே கூடாது. இது என் ஆணை” என்று மறைந்து கொண்டிருக்கும் சூரியனை நோக்கி கூவினாள்.

அவள் சப்தமாக பேசிய வார்த்தைகள் கேட்டு சுற்றிலும் இருந்த மரங்கள் ஒரு நிமிடம் தன் இயக்கத்தை நிறுத்தின. காற்று ஒரு நிமிடம் நின்று வீசியது. ஆனால் எதுவும் நடவாததுபோல் நளாயினி தன் கணவனை சுமந்து கொண்டு வீடு திரும்பினாள். மனதில் எந்த சலனமும் இல்லாமல் கணவனை சுத்தப்படுத்தி அருகம்புல் மெத்தையில் படுக்க வைத்து அவன் தூங்கும் வரை கால் கைகளில் வாசனைத்தைலங்களை தடவி, வலி நீங்க அழுத்தி பிடித்து விட துவங்கினாள். அந்த இரவு விடியவேயில்லை. தேவர்களின் மன்னன் இந்திரன் சூரியனை தேடிப்போக சூரியன் தன் கதிர்களை மேரு மலையின் பின்னால் மறைத்துக்கொண்டு உதிக்காமல் இருந்தான். தன்னைத்தேடிவந்த தேவர்களிடம், ” என்னை மன்னிக்க வேண்டும். நளாயினியின் ஆணையை என்னால் மீற இயலாது என்று கூறினான். இந்திரன் மகரிஷி மந்தவராயரிடம் சென்று அவரை கழுமரத்தில் இருந்து இறக்கி, அவர் வேதனையை நீக்கி, ,”மகரிஷீ தயை கூர்ந்து நளாயினியினிக்கு கொடுத்த சாபத்தை திரும்ப பெறுங்ககள் என்று வேண்டினான்.

மகரிஷி தன் சாபத்தை விலக்கி கொள்ள, நளாயினியும் தன் ஆணையை திரும்ப பெற சூரியன் உதிக்க துவங்கினான். தன் மனைவி நளாயினிக்கு தன் மேல் இவ்வளவு காதலா என்றும் இவள் கற்பில் சிறந்தவள் என்றும் பிரம்மித்து போனார் ரிஷி மௌத்கல்யர்.

பின்னர் நளாயினியை பார்த்து நான் முனிவர் அல்ல பெண்ணே நான் தான் சிவபெருமான் நீ சாட்சாத் பார்வதி தேவியே உனது கற்பினை சோதிக்கவே இவ்வாறு திருவிளையாடல் புரிந்தோம் ஆகையால் வா நாம் தேவலோகம் செல்வோம் என்று அழைத்து கொண்டு பயணித்தார்,

இதனை கேட்ட நளாயினி அம்மனாகப்பட்டது, நாதா இது தகுமோ!ஒரு பெண்ணுக்கு ஐந்து கணவர்களா? இந்த உலகம் இதை ஏற்குமா? பழித்து பேசுவார்களே ? என வினாவினாள் ? அதற்கு இறைவன் பெண்ணே உன் முன் பிறவியில் நீ பெற்ற வரமே இதற்கு கரணம்- நீ ஒரு முனிவர்க்கு மகளாய் பிறந்து வளர்ந்தாய் அப்பொழுது உனக்கு திருமணம் கைகூடி வராததால் மனம் நொந்து சிவனை நோக்கி தவம் இருந்தாய் அப்போது உனது தவத்தை மெச்சி உனக்கு காட்சி கொடுத்தார். என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்,

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version