Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் வெறுப்பு: ஆச்சார்யாள் அருளுரை!

வெறுப்பு: ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi-thirthar
Bharathi thirthar

பக்தனுக்கு இருக்க வேண்டிய குணங்களைப் பற்றி ஓர் அத்யாயத்தில் பகவான்,
அத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச I
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ II
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிச்சய: I
மய்யர்பிதமனோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: II
என்று விவரிக்கிறார்.

பக்தர்களுக்கு இருக்க வேண்டிய இலக்ஷணங்களுள் முதலில் நாம் பார்ப்பது,
அத்வேஷ்டா ஸர்வபூதானாம்
தமது வாழ்க்கை புனிதமாக வேண்டும், நாமும் பகவத் பக்தர்களாக வேண்டும் என்றெல்லாம் யாருக்கு எண்ணம் வருகின்றதோ அவர்களுக்கு முதலில் இருக்க வேண்டிய தகுதி – “த்வேஷம் இல்லாமை” என்பதாகும். இன்னொருவனை வெறுத்து நமக்கு என்ன ஆக வேண்டும்? துஷ்டர்களைக்கூட வெறுப்புடன் நோக்க வேண்டும் என்றில்லை. அவர்களிடமிருந்து விலகியிருந்தாலே போதும்.

ராகத்வேஷங்களினால் ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் மனவமைதியை இழந்து விடுகிறார்கள். சிலர் விஷயத்தில், அவர்கள் அயோக்கியர்களாய் இருந்தாலும், உறவினர்கள் என்பதால் அவர்கள் மீது பிரியம் வைத்திருப்பர்.

அதே சமயம் நல்லவர்களாய் இருக்கும் வேறு சிலர் விஷயத்தில் வெறுப்புக் காட்டுவர். விருப்பும் வெறுப்பும் இருப்பதால்தான் நமக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் வருகின்றன.

ராகத்வேஷங்களை போக்கிக் கொண்டுவிட்டால் நமக்குக் கஷ்டங்கள் வராது, அதற்காகத்தான் பகவான், “நாம் யாரையும் வெறுக்கக்கூடாது” என்று கூறினார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version