Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா! ஜூலை 6ல் தொடக்கம்!

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா! ஜூலை 6ல் தொடக்கம்!

தென் தமிழகத்தின் பண்டைய பாண்டிய நாட்டின் தொன்மைச் சிறப்பு வாய்ந்த பழம்பெரும் நகரமாம் நமது திருநெல்வேலியில், அடுத்து ஆனிப் பெருந்திருவிழா இனிதே தொடங்க இருக்கிறது.

திருநெல்வேலி அருள்தரும் ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி ஶ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில் “ஆனி பெருந்திருவிழா-2019” அழைப்பிதழ்:

திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவிலின் பிரசித்தி பெற்ற ஆனி திருவிழா வரும் 06/07/2019அன்று கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக பத்து நாட்கள் நடைபெற இருக்கிறது. மெய்யன்பர்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கு கொண்டு “அம்மை அப்பன்” அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்!

திருவிழா நிகழ்ச்சிகள்:

  1. 06/07/2019:
    காலை:- திருவிழா கொடியேற்றம் பெரிய தங்கக்கொடிமரம் மற்றும் அஷ்டதிக்கு கொடியேற்றம். சுவாமி, அம்பாள் இருவரும் தங்க பூங்கோவில் சப்பரத்தில் காட்சி.

இரவு:- பஞ்சமூர்த்திகள் தீபாராதனை மற்றும் வீதி உலா. சுவாமி, அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் எழுந்தருளல்.

  1. 07/07/2019:
    காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா. சுவாமி அம்பாள் வெள்ளிச்சப்பரத்தில் பவனி

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி – வெள்ளி கற்பக விருக்ஷம், அம்பாள் – தங்கக் கமல வாகனம்.

  1. 08/07/2019:
    காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா. சுவாமி – வெள்ளி கற்பக விருக்ஷம், அம்பாள் – தங்கக் கமல வாகனம்.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி – தங்க பூத வாகனம், அம்பாள் – வெள்ளி சிம்ம வாகனம்.

4. 09/07/2019:
காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா. சுவாமி வெள்ளி வெட்டுங்குதிரை வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை, 63-நாயன்மார்களுடன் வீதி உலா.
சுவாமி, அம்பாள் – வெள்ளி விருஷப வாகனம்.

  1. 10/07/2019:
    காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா.
    சுவாமி, அம்பாள் – வெள்ளி விருஷப வாகனம்.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி, அம்பாள் – இந்திர விமானம். சுவாமி அம்பாள் திருஊடல் திருநாள் .

6. 11/07/2019:
காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா.சுவாமி, அம்பாள் – வெள்ளிச்சப்பரம், திருஞானசம்பந்தர் தங்கப்பல்லாக்கில் எழுந்தருளல். ஞானப்பால் திருவிழா.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி வெள்ளியானைமேல் தங்க அம்பாரியில் பவனி, அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்- .

  1. 12/07/2019:
    காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா. சுவாமி தந்தப்பல்லாக்கிலும், அம்பாள் முத்துப் பல்லக்கிலும் எழுந்தருளல். ஸ்ரீ காந்திமதி அம்பாள் தவழ்ந்த திருக்கோலம்.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி – வெள்ளி வெட்டுங்குதிரை வாகனம், அம்பாள்- வெள்ளி காமதேனு வாகனம். ஸ்ரீ தாமிரசபைநடராஜர் சிவப்பு சாத்தி திருக்கோலம்.

  1. 13/07/2019:
    அதிகாலை:- ஸ்ரீ நடராஜர் வெள்ளை சாத்தி கோலத்தில் திருக்கோவில் உட்பிரகார உலா.

காலை: ஸ்ரீ தாமிரசபை நடராஜர் பச்சை சாத்தி கோலத்தில் ரத வீதி உலா.

பிற்பகல்: சுவாமி அம்பாள் உள்வீதி உலா., பின் வெள்ளி வெட்டுங்குதிரையில் முருகர் வேணுவனகுமாரர் கோவில் சென்று பரிவேட்டை.

மாலை:- ஸ்ரீ கங்காளநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா.

பின்னிரவு:- சுவாமி – தங்க கைலாய பர்வதம், அம்பாள் – தங்க கிளி வாகனம் எழுந்தருளி தேர் கடாட்சம். விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடித்தல்.

9. 14/07/2019:

காலை:- தேரோட்டம்.
சுவாமி தேர் வடம் பிடித்தல், அம்பாள் தேர் வடம் பிடித்தல்.

மாலை:- சுவாமி அம்பாள் தேர்கள் நிலையம் சேர்ந்ததும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடித்தல். தேர்கள் நிலையம் சேர்ந்த பின் சுவாமி அம்பாள் பல்லாக்கில் சப்தாவர்ணம், தேர் தடம் பார்த்தல்.

  1. 15/07/2019:

காலை:- சுவாமி அம்பாள் சப்தாவர்ண பல்லாக்கு. பின்னர் தீர்த்தவாரி.

இரவு சோமாஸ்கந்தர் உள்வீதி பவனி, கொடியிறக்கம்.

முன் திருவிழாக்கள்!

ஜுன் 2 – ஸ்ரீ பிட்டாபுரத்தி அம்மன் கோயில் திருவிழா…
ஜுன் 18 வைகாசி மூலம் பிள்ளையார் கொடியேற்றம்
ஜுன் 23 முதலி மூவர் திருவிழா துவக்கம்
ஜுன் 29 ஸ்ரீ சந்திரசேகரர் உத்ஸவாரம்பம்…

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version