Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் அன்னையின் தரிசனம்; அகம் முழுதும் நிறையும்!

அன்னையின் தரிசனம்; அகம் முழுதும் நிறையும்!

madurai-ambigai
madurai ambigai

மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரன் ஆலயத்தில் நவராத்ரியையொட்டி அம்மன் அலங்காரம்….

saraswathi alankaram

மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன்.

sringeri sharathamba

கண்களைக் கவர்கிறது அம்பிகையின் அமர்ந்த திருக்கோலம்.
பத்மாசன திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.
நான்கு திருக்கரங்கள்.
அந்த நான்கு திருக்கரங்களில்
சின்முத்திரை, ஜபமாலை, கெண்டி, ஏடு ஆகியவை தேவியின் திருக்கரங்களை அலங்கரிக்கின்றன.
திருமேனியில் பல்வேறு ஆபரணங்களைத் தரித்துக் கொண்டிருக்கிறாள்.
மலர் மாலைகள் அன்னையை அடைந்த நிறைவை வெளிப்படுத்துகின்றன.

அம்பிகையின் நயன நதிகளிலிருந்து அருள் வெள்ளம் பிரவாகித்து வழிகிறது.
சிரசில் சந்திரகலை ஒளிர்கிறது.
இந்தத் திருக்கோலமே அன்னை சகல வித்யா ஸ்வரூபிணி, ஞானஸ்வரூபிணி என்பதை புலப்படுத்துகிறது.
இவள்தான் சாரதை. கரத்தில் பச்சைக் கிளி ஒன்றையும் காண்கிறோம்.

சாரதாம்பாள் என்கிற திருநாமத்தைக் கொண்டு துலங்குபவள்;
தாம் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி வருபவள்;
இன்றும் சிருங்கேரியில் வாசம் செய்பவள்;
அவள் பக்தர்கள் பிரார்த்திக்கும் அனைத்தையும் அருள்பவளாக பிரகாசித்துக் கொண்டிருப்பவள் சாரதை!!

சரஸ்வதி பூஜை நன்னாளில் ஞானரூபினியான அன்னை சாராதையின் எழில் கோலத்தை, இங்கிருந்தே மனமாற கண்டு களிப்போம்.
அன்னையின் திருவிழி நம் அனைவருக்கும் பேதங்கடந்த ஞானத்தை அருளட்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version