Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஒன்பதாம் பாசுரம்

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஒன்பதாம் பாசுரம்

கண்வளரும்… ஆறாயிரப்படி, நாலாயிரப்படி வியாக்யாங்களில் – பட்டருக்கு சிலர் ‘தொண்டனூர் நம்பி திருவடிசார்ந்தார்’ என்று விண்ணப்பஞ் செய்ய; ‘அவர், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்து போந்தபடிக்கு ‘திருநாட்டுக்கு நடந்தார்’ என்று சொல்ல வேண்டாவோ! என்று அருளிச்செய்தார்.

தொண்டனூர் நம்பி என்பவர் இறைவனடி சேர்ந்தார் என்பதைக் குறிக்க திருவடி சேர்ந்தார் என்று சொல்ல, இப்படி அடியார்களுக்குத் தொண்டு செய்யும் பாகவதர் சென்று சேருமிடமான அடியார் நிலாகின்ற வைகுந்தம் என்னும் நித்திய சூரிகள், முக்தர்கள் இருக்கும் இடத்தை இட்டு திருநாட்டுக்கு நடந்தார் என்று அல்லவா சொல்ல வேண்டும், என்றாராம்.

நஞ்சீயர் பகவத் கைங்கரியத்தில் ஈடுபாடு உடையவர்கள் விஷயத்தில் திருவடி சார்ந்தார் என்றும், பாகவத கைங்கர்ய விஷயத்தில் ஈடுபாடுடையவர்களை திருநாடு எழுந்தருளினார் என்றும், ஆசார்ய கைங்கர்யர் விஷயத்தில் ஈடுபாடுடையவர்களை
ஆசார்யன் திருவடிசேர்ந்தார் என்றும் வ்யவஹாரங்கள்.

II- ஆழ்வான் ஹிதாம்ஸத்துக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவனுடைய க்ருஹயாத்திரையை அனுசந்திக்க வேண்டும் என்றாப் போலே இவர்களும் இவளுடைய மாளிகையிலழகை அனுபவிக்கிறார்கள்.

தூமணி மாடம்.. தூமணி மாடம் என்று அந்த கோபிகையை எழுப்புபவர்கள் அவளின் க்ருஹத்தின் அழகை ரசிப்பது ,
ஸ்ரீவைஷ்ணஷ்வ சம்பந்தம் பெற்ற க்ருஹத்தை, அதன் அழகை நெஞ்சினால் நினைத்தால் போதும் அடியார்கள் ஸம்பந்த்தால் உயர்வே என்றபடி.

  • வானமாமலை பத்மனாபன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version