Category: விளையாட்டு

  • ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

    ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்த படியே ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி ஒருநாள் அணிக்கு திரும்பினர். ரெய்னாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. வரும் 2016 ல் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 5 ஒருநாள் (ஜன., 12, 15, 17, 20, 23), மற்றும் 3 ‘டுவென்டி-20’ போட்டிகள் (ஜன. 26, 29, 31) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணித் தேர்வு இன்று டில்லியில் நடந்தது. சந்தீப் படேல் தலைமையிலான இந்திய கிரிக்கெட்…

  • ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மனோஜ் பிரபாகர்

    புது தில்லி:  ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2016) மார்ச் 11 முதல் ஏப்ரல் 1 வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாட இருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்…

  • மும்பைக்கு எதிராக டெல்லி டேர் டெவில்ஸ் வெற்றி

    ஐபிஎல் சீஸன் 8ல் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு, டெல்லி அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

  • விராட் கோலியால் ‘அவுட்’டான அனுஷ்கா சர்மா!

    உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்ற இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி ஒரு ரன்னில் அவுட் ஆனதால், அவரது காதலியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா மூட் அவுட் ஆனார். இதனை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இருவரையும் வறுத்தெடுத்தனர். இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலியின் காதலியும், ஹிந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா, இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறும் அரையிறுதிப் போட்டியை சிட்னி மைதானத்தில் பார்க்க நேரில் வந்திருந்தார். அனுஷ்கா சர்மா வருகையால், விராட் கோலி…

  • பட்டம் வென்ற ஸ்ரீகாந்த்

    பேசில் நகரில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடந்த முறை பட்டம் வென்ற விக்டர் எக்சல்சனை போராடி வீழ்த்தியதன் மூலம் சுவிஸ் ஓபன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த் கடாம்பி. 21-15, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் அவர் தன்னை எதிர்த்து விளையாடிய எக்சல்சனை வீழ்த்தினார். இது இந்த வருடம் இவர் வெல்லும் முதல் பட்டம் என்பதும் , சுவிஸ் ஓபன் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்பதும்…

  • இந்தியா தொடர் வெற்றி: ஜிம்பாப்வேக்கு எதிராக 6 விக். வித்தியாசத்தில் வெற்றி!

    ஆக்லாந்து: இந்திய அணி இந்த உலகக் கோப்பை போட்டிகளின் லீக் சுற்று ஆட்டங்களில் தொடர் வெற்றிகளைப்பெற்றுள்ளது. இந்திய அணி தான் விளையாடிய 6 போட்டிகள்லும் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில், ஜிம்பாப்வே அணியை தோற்கடித்து இந்திய அணி தொடர் வெற்றியைப் பதிவு செய்ததுடன், விளையாடிய 6 போட்டிகளிலும் எதிரணியை அனைத்து விக்கெட்களையும் வீழ்த்திய சாதனையையும்பதிவு செய்துள்ளது. இன்று ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • மேற்கு இந்தியத் தீவு அணியுடன் மோதல்: தென்னாப்பிரிக்கா தன்னம்பிக்கை பெருக்கிய வெற்றி

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று சிட்னியில் நடைபெற்ற பி பிரிவு லீக் சுற்று 19வது போட்டியில், தென்னாப்பிரிக்க அணி மாபெரும் வெற்றி பெற்று, மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 257 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 33.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன் எடுத்து தோல்வியைத்…