உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்ற இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி ஒரு ரன்னில் அவுட் ஆனதால், அவரது காதலியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா மூட் அவுட் ஆனார். இதனை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இருவரையும் வறுத்தெடுத்தனர். இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலியின் காதலியும், ஹிந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா, இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறும் அரையிறுதிப் போட்டியை சிட்னி மைதானத்தில் பார்க்க நேரில் வந்திருந்தார். அனுஷ்கா சர்மா வருகையால், விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களைக் குவிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது ஆனால் விராட் கோலியோ ஒரு ரன் எடுத்த நிலையில், எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். கோலி அவுட் ஆனதைப் பார்த்த அனுஷ்கா சர்மா, வாயில் கையை வைத்துக் கொண்டு தலையை குனிந்து மூட் அவுட் ஆனார். இந்நிலையில், அவர்கள் இருவரையும் இணைத்து டிவிட்டரில் மோசமான கமெண்டுகள் கருத்துரைகள் உலவின.
விராட் கோலியால் ‘அவுட்’டான அனுஷ்கா சர்மா!
Popular Categories


