Home அடடே... அப்படியா? அதிசயம்! ஆச்சரியம்! ஊமைகளைப் பேச வைக்கும் ஒரு பாடல்!

அதிசயம்! ஆச்சரியம்! ஊமைகளைப் பேச வைக்கும் ஒரு பாடல்!

தமிழகத்தில் மக்கள் இப்போது வெகு நலமாக இருக்கிறார்கள். மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுகமாக வாழ்கிறார்கள். தமிழக அரசு மக்களின் சுமைகளை வெகுவாகக் குறைத்து, சுகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியினருக்கு வேலையே இல்லாமல் ஆளும் அரசு தமிழகத்தை சொர்க்க பூமியாக வைத்திருக்கிறது. மக்கள் எந்த வித பிரச்னைகளும் இல்லாமல் வாழ்வதால், ஊடகங்களுக்கு செய்திக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் இருக்கும் ஒரே ஒரு தலையாய பிரச்னை, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்தான்! இந்தப் பாடலை எப்போது பாட வேண்டும், எப்படிப் பாட வேண்டும், எங்கே எல்லாம் பாட வேண்டும், எந்த ராகத்தில் எப்படிப்பட்ட வாய் அசைப்பில் எந்த விதத்தில் ழ உச்சரிப்புடன் பாட வேண்டும் என்று, ஊடகங்கள் பொதுமக்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் கையாளப் பட்டிருக்கும் வடமொழிச் சொற்களை தமிழில் மொழி பெயர்த்துப் பாடலாமா என்றும் விவாதித்து வருகிறார்கள்.

இப்படி எல்லாம் வாய் பேச இயலா ஊமைகளாக இருந்த பலர் பேசுவதற்குக் காரணமாக அமைந்தது, கணபதிப் பெருமானின் துதிப்பாடல்தான். முத்துசுவாமி தீட்சிதரு என்ற தஞ்சை தரணியின் திருவாரூர்ப் பிறந்த தமிழர் இயற்றிய இந்தப் பாடல் மகிமை வாய்ந்தது. இந்தப் பாடலை வாய்பேசாமல் அமர்ந்திருக்கும் நபர் முன் பாட வேண்டிய அவசியம் கூட இல்லை. இப்படி ஒரு பாடலைப் பாடினார்கள் என்று அவர்களின் காதில் சொன்னாலே போதுமானது. உடனே அவர்கள் வாய் திறந்து பேசத் தொடங்கிவிடுவார்கள்.

சிந்து பைரவி ராகத்தில், ஊமைகளை பேச வைக்கும், நவ துவார அடைப்பு நீக்கும் அத்தகைய மகிமை வாய்ந்த பாடல் இதுதான்…

மஹா கணபதிம்..
ஸ்ரீ மஹா கணபதிம்
ஸ்ரீ மஹா கணபதிம்- மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் – மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் – மனஸா ஸ்மராமி

மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி .
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி .
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித.
மஹா கணபதிம்… ஆ ஆ ஆ…
மஹா தேவ சுதம்….. ஆ ஆஅ ஆ
மஹா தேவ சுதம் – குரு குக நுதம்.
மஹா தேவ சுதம் – குரு குக நுதம்.
மாரகோடி ப்ரகாஷம் சாந்தம்
மாரகோடி ப்ரகாஷம் சாந்தம்.
மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மூஷிக வாகன் மோதக்ப்ரியம்
மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மூஷிக வாகன் மோதகப்ரியம்,
மஹா கணபதிம். மனஸா ஸ்மராமி
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித மஹா கணபதிம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version