IMG 20221105 WA0052

ஆனைக்குட்டம் அணை-ஷட்டர்கள் பழுதால் வெளியேறி வீணாகும் தண்ணீர்..

IMG 20221105 WA0052


சிவகாசி பகுதியில் பெய்த மழையால் ஆனைக்குட்டம் அணைக்கு 14
அடிக்கு தண்ணீர் வந்தும், மதகுகளில் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது.
சிவகாசி ஆனைக்குட்டத்தில் 1989 ல் ஆனைக்குட்டம் அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அணையில் 9 மதகுகள் உள்ளது.
இந்த அணைக்கு, எவ்வளவு மழை பெய்தாலும் நேரடியாக தண்ணீர் வந்து தேங்கியது இல்லை. ஆனால் பிளவக்கல் அணை நிரம்பினால் அதன் உபரி நீர், பல்வேறு கண்மாய்களை நிரம்பி
ஆனைக்குட்டம் அணைக்கு வரும். இந்த அனை தற்போது, பாசன வசதியை விட குடிநீர் ஆதாரமாக அதிகளவில் பயன்படுகின்றது.

IMG 20221105 WA0049

விருதுநகரின் குடிநீர் ஆதாரமே இந்த அணைதான் . தவிர அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம், குடிநீர் தேவைக்கு போர்வெல் அமைப்பதற்கு நீர் ஆதாரமாக பயன்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையினால் அணைக்கு 14 அடி வரைக்கும் தண்ணீர் வந்துள்ளது. அணை 2006 ம் ஆண்டு முழுவதுமாக நிரம்பியது. அதன் பின்னர் இப்பொழுது வரையும் முழுமையாக நிரம்பியது இல்லை. ஆனாலும் பாதியளவு தண்ணீர் வந்தாலும் ஷட்டர் பழுதால் தண்ணீர் வெளியேறி வீணாக சென்றுவிடும். இதனால் எப்பொழுதுமே அணையில் இருக்கின்ற தண்ணீரை தேக்க முடியவில்லை. 2020 ல் ஷட்டரில் தற்காலிகமாக பழுது பார்க்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் அணையில் முழுமையாக தண்ணீர் வந்தும் அணை பலவீனமாக இருந்ததால் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழைக்கு அணையில் 14 அடிக்கு தண்ணீர் வந்துள்ளது. ஆனால் இங்குள்ள மூன்று மதகுகளில் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது.
சுந்தரலட்சுமி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், விருதுநகர், அணையில் மூன்று மதகுகளில் ஷட்டர் பழுதால் தண்ணீர் கசிந்து வெளியேறுகின்றது. எனவே துாத்துக்குடியில் இருந்து முத்துக்குளிப்பு நபர்களை வரவழைத்து ஷட்டரில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்படும்.

IMG 20221105 WA0050
IMG 20221105 WA0051

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.