Home ஜோதிடம் ஆலோசனைகள் கன்னி, தனுர், மகர ராசியினரே உங்களுக்கு கலவரம் தரப்போகும் நாட்கள் எவை தெரியுமா?

கன்னி, தனுர், மகர ராசியினரே உங்களுக்கு கலவரம் தரப்போகும் நாட்கள் எவை தெரியுமா?

537 வருடங்களுக்குப் பிறகு தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைந்து ராகுவின் பார்வையைப் பெறுகிறார்கள் இந்த கோட்சார அமைப்பு 25.12.19, 26.12.19, 27.12.19 மூன்று நாட்கள் நடைபெறும்.

தனுசு ராசியில் சூரியன். சந்திரன். குரு. சனி. புதன். கேது. ஆகிய கிரகங்கள் ஒன்றாக இணைந்து ராகுவின் பார்வையை பெறுகிறார்கள். இந்த அமைப்பு நெருப்புக்கும் காற்றுக்குமான மிகப்பெரும் போராட்டமான அமைப்பாக வரும் கோட்சார கிரக சேர்க்கை. 1482 ஆம் வருடம் வந்த இது போன்ற கோட்சார அமைப்பு மிகப்பெறும் சாம் ராஜ்யங்களையே காணாமல் போகச்செய்துள்ளது.

மனிதர்களின் மனநிலையும் புத்தியையும் வெகுவாக பாதித்துள்ளது .ஆத்மகாரகனான சூரியன், மனோகாரகனான சந்திரன், ஞானகாரகனான கேது, பாக்கியகாரகரான குரு, புத்தி காரகனான புதன். ஆயுள் காரகனான சனி இவர்கள் அனைவரும் ஒரே ராசியில் அசுப கிரகமான ராகுவின் பார்வையில் ஒரு நீள்வட்டப்பாதையில் இயங்கும் போது இந்தகிரகச்சேர்கையினால் இவர்களிடம் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு ஒன்றன் மேல் ஒன்று படும் பொழுது ராகுவின் கதிர் வீச்சும் இவர்கள் அனைவரின் மீதும் படுகிறது

இது மிகப்பெரும் போராட்டமான அமைப்பாகும் இந்த மூன்று நாட்களும் பன்னிரெண்டு ராசியினரும் பதட்டம். கோபம். ரத்த அழுத்தம். சோம்பல். மனச்சோர்வு. இனம்புரியாத கலவரம்.எல்லாச் செயல்களிலும் தாமதம். மறதி அதிகமாதல் என்னவென்று தெரியாத அளவிற்கு காலில் அதிக வலி ஏற்பட்டு அமைதியை கெடுக்கும் சூழ்நிலை என்று இந்த மூன்று நாட்கள் இருக்கும்.

இதில் தனுசு ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கலவரமாக இருக்கும் சூழ்நிலை அமையும். கன்னி ராசியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு காலில் இனம் புரியாத மிகுந்த வலி ஏற்படும்

மகர ராசியினருக்கு மனதில் சிந்தனைகள் மாறுபடும் .எதையும் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் அனைத்திலும் சந்தேகங்களும் கருத்து வேறுபாடுகளுக்கும் ஆளாகி சண்டை சச்சரவுகளில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் மிகவும் அதிகமான பாதிப்பிற்கும் கஷ்டங்களுக்கும் உள்ளாகும் ராசி தனுசு ராசியினர் மட்டுமே

25.12.19 மார்கழி 9 புதன் கிழமை ஆஞ்சநேயர் ஜெயந்தி .அன்று அமாவாசை காலை 11.59 க்கு சூரிய கிரகணம் ஆரம்பம் 26.12.19 வியாழன் காலை 10.27 வரை அமாவாசை உள்ளது 27.12.19 வெள்ளிக்கிழமை சந்திரதரிசனம் மிகவும் விசேஷம் அன்று இரவு சந்திரனை பார்பது அபரிதமான விசேஷம். இம்மூன்று நாட்களும் கடவுள் வழிபாட்டிற்கு உகந்ததாக இருப்பதால் கடவுளை பூஜித்து இதன் பாதிப்பிலிருந்து விடுபடுகின்ற பலத்தை பெறலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version