saniswara thirunallaru

பொதுவா ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி இந்த காலங்களில் துன்பம் நிறைந்திருப்பது போல சிலருக்கு இருக்கும்.

ஆனால் அது சனியால் அல்ல வேறு கிரஹங்களினால் கூட நிகழும்.

உதாரணமாக விருச்சிக ராசி, தனுர் ராசி, மகர ராசி, ரிஷப ராசி கன்னி ராசி ஆகியோருக்கு கடந்த சிலமாதங்களாக மந்தமாக அல்லது முடங்கி போனால் போல இருந்திருக்கும். காரணம் சில மாதங்கள் தனூர் ராசியில் சனியுடன் செவ்வாயும் இருந்தது. இவை ஒன்றுக்கொன்று பகை அதனால் செயல்பாடுகள் சரியாக இருக்காது.

மேலும் ஜனன ஜாதகத்தில் சனியின் நிலையை கணக்கில் கொள்ள வேண்டும். சனி தசை சனி புக்தி இவற்றையும் அறிந்து அதற்கு தக்க வாறு பலன் சொல்ல வேண்டும்.

சனீஸ்வரன் ஏழரை சனி நடக்கும் காலங்களில் தான் சிலருக்கு திருமணத்தை முடித்து வைப்பார்.

சனீஸ்வரரின் ஏழரை (விருச்சிகம், தனூர், மகரம்), அஷ்டமம் (ரிஷபம்) , அர்த்தாஷ்டமம் (கன்னி) இந்த கால கட்டங்களில் உங்களுக்கு கஷ்டம் வருகிறது என்றால் மற்ற கிரஹ நிலைகளை நன்கு அலசி பார்க்க வேண்டும்.

ஜோதிடர்கள் நிறைய பரிகாரம் சொல்லுவர் ஆனால் உண்மையில் ஜோதிட சாத்திரங்களில் பரிகாரம் சொல்லப்படவில்லை அவை நம் திருப்திக்காக பின்னர் சேர்க்கப்பட்டது. கிரஹ ப்ரீதி பண்ணி கிரஹத்தின் வலுவை குறைக்க முடியாது.

உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இது போன்ற கஷ்ட காலங்களில் குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு கோவிலுக்கு செல்லுதல், அன்னதானம் போன்றவற்றை செய்தல் நல்ல காரியங்களை செய்தல் நல்லவற்றை பேசுதல் போன்றவை உங்கள் மனதை கட்டுப்பாடாக வைத்து துன்பங்களை ஏற்கும் மனோ திடத்தை உண்டாக்கும்

சனீஸ்வரரை கண்டு அஞ்ச வேண்டாம்.

– ஜோதிடர் லக்ஷ்மி நரசிம்மன் (ரவி சாரங்கன்)