சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது: சேலத்தில் விமான நிலைய விரிவாக்கம் தேவையற்றது.
160 ஏக்கர் நிலப்பரப்பே போதுமானதாக
இருக்கும் போது 570 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவாக்க வேண்டிய அவசியமேயில்லை
விளைநிலங்களே குறைவாக இருக்கும் போது தேவையில்லை என்றும்
எட்டு வழி சாலை தேவையற்றது ஏற்கனவே நான்கு வழி சாலைக்கு சுங்கவரி கட்டணம் முடியவில்லை எனவே மக்களுடைய உணர்வும் கோரிக்கையும் தவிர அனைத்தையும் செய்வதாக குற்றம்சாட்டியவர் பரம்பரை பரம்பரையாக இருக்கின்ற நிலத்தை விட்டுவிட்டு போகவேண்டிய அவசியமில்லை அப்படிப்பட்ட வாணுர்தி நிலையமே வேண்டாம் நாங்க கேட்கிற உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி நான்கு டிஎம்சி தண்ணீர் அதை வாங்க தர வக்கில்லை என்றார். சொந்த நிலத்திலேயே அகதிகள் ஆக்கும் வேலை நடக்கிறது என்று பேசினார்.
எஸ்விசேகர் கைது நடவடிக்கை பற்றிய கேள்விக்கு அவர் வீட்டு வாசலில் போராடிய பத்திரிகையாளர்கள் மீது வழக்கு போடப்பட்டது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் போராட காரணமானவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். பாஜக கர்நாடகத்தில் ஆட்சி வந்தால் தண்ணீர் கிடைக்கும் எனக்கூறுவது
நேரத்தை கடத்துவதாக பேசுகிறார்கள்.இந்தியாவின் வெளியுறவு கொள்கை தமிழர்களின் எதிராக இருக்கிறது திமுக எதில் அதிக வருமானம் வருமோ அந்த அமைச்சகத்தை கேட்டு வாங்கியது என்றார்.



