― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்கர்ப்பம் என்றாலும் கலங்காது அடிமுறை கற்ற சினேகா! டெடிகேஷன்!

கர்ப்பம் என்றாலும் கலங்காது அடிமுறை கற்ற சினேகா! டெடிகேஷன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்னேகா. திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு வேலைக்காரன் படத்தில் நடித்தார், சமீபத்தில் தனுஷுடன் இணைந்து பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார்.

திருமணம் முடிந்து இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார் ஸ்னேகா.

இந்நிலையில் பட்டாஸ் படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு உடற்பயிற்சி செய்து, அடிமுறை என்னும் தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டு படத்தில் நடித்துள்ளார் ஸ்னேகா. தான் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அதனை கண்டுகொள்ளாமல் படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு உடற்பயிற்சி செய்து வருகிறார்.

கர்ப்பமாக இருக்கும் நிலையில் இது தேவையா என பலர் கருத்து கூறினாலும், தான் கவனமுடன் உடற்பயிற்சி செய்வதாக கூறிவருகிறார் ஸ்னேகா. அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தனுஷுற்கு மனைவியாக, அம்மாவாக, அடிமுறை பயிற்சியை பயன்படுத்தி வில்லன்களை வெளுத்து வாங்கும் ஆக்‌ஷன் குயனாக என சினேகா தனது பல விதமான அவதாரங்களை ஒன்றாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

இந்தப்பாராட்டு அனைத்தும் இயக்குநர் துரை செந்தில்குமாரைத்தான் சேரும். அவர் தான் இப்படியொரு மிகச்சிறந்த கதாப்பாத்திரத்தை உருவாக்கி, அதில் என்னை நடிக்கவும் வைத்தார். நடிகர்களுக்கு சவால் தரும் பாத்திரத்தை உருவாக்கி, அதில் நம்மை பிரகாசிக்க செய்வது இயக்குநர்தான்.

அதுவும் முன்னணி நடிகரான தனுஷ் நடித்திருக்கும் படத்தில் அவருக்கு இணையான ஒரு கதாப்பாத்திரத்தை எனக்கும் தந்து, இன்று இத்தனை பாராட்டையும் பெற்று தந்திருக்கிறார்.

“அடிமுறை” கலையை எனக்கு சொல்லி தந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தின் பெருமை பேசும் இப்படியொரு படத்தில் நானும் பங்கு கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இன்று உலகின் தொன்மையான தற்காப்பு கலை தமிழகத்தின் “அடிமுறை” என்பது இப்படம் மூலம் பதிவாகியிருக்கிறது.

இது நம் அனைவருக்கும் பெருமையே. இந்நேரத்தில் படத்தில் அதிக கனம்மிகுந்த பெண்பாத்திரத்திற்கு இடம் தந்து, என் மீது விழ காரணமாயிருந்த நடிகர் தனுஷ்க்கு மிக்க நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

நடிகை சினேகாவின் திரைப்பயணம் மிகப்பெரியது. அவருக்கு என்றும் அழியாத பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரது திறமைக்கு அவர் எந்த மாதிரியான பாத்திரத்தையும் மிக எளிதாக செய்துவிடுவார். வெகு சவால் நிறைந்த, தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய, இந்த கதாப்பாத்திரத்தை வெகு அர்ப்பணிப்புடன், மிக நேர்த்தியாக செய்தார். தன் தொழில் மீது மிகுந்த காதலும், நேர்த்தியும் கொண்டவராக அவர் இருந்தார்

இப்படத்திற்காக நிறைய பயிற்சிகள் மேற்கொண்டு, தனது முழு ஆற்றலையும் தந்து இக்கதாப்பாத்திரத்தை செய்தார். இன்று அவரது நடிப்பிற்கு கிடைத்து வரும் பாராட்டும் வரவேற்பும் எங்கள் மொத்த குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றார். ‘‘கம்பேக்‘ என்பது சிறந்த நடிகர்களை பொறுத்த மட்டில் ஒரு அர்த்த மற்ற சொல்.

ஒரு சிறந்த நடிகர் எக்காலத்திலும் மறக்கப்படமாட்டார். அதிலும் தன் தொழிலை நேசித்து, நேர்த்தியாக தன் நடிப்பு திறமையை, அர்ப்பணிப்புடன் செய்பவர்களை ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காது குடியிருப்பார். சினேகா அப்படியானவர் தான். அவர் தன் நடிப்பை, உயிராக நேசித்து செய்யக்கூடியவர். அப்படிப்பட்ட சிறந்த நடிகர்கள் ஒரு அற்புதமான கதாப்பாத்திரத்தை செய்யும்போது ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்.

சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் எப்போதும் மதிப்பு மிக்கதாக இருக்கும் இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருப்போம். இத்தருணத்தில் இத்தனைய சிறப்பு மிக்க பெண் கதாப்பாத்திரத்தை உருவாக்கிய இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துகொள்கிறேன்.

இக்கதாப்பாத்திரத்திற்காக நடிகை சினேகா செய்து கொண்ட முன்னேற்பாடுகளும், பயிற்சியும், அவர் அந்த கதாப்பாத்திரத்தை அர்ப்பணிப்புடன் செய்த விதமும் பார்த்தபோது, நிச்சயம் ரசிகர்களிடம் பெருத்த பாராட்டு பெறுவார் என எதிர்பார்த்தோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version