― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

railway news
#image_title

கிட்டத்தட்ட 50ஆண்டுகளுக்கு பிறகு கேரளா தமிழ்நாடு தலைநகர் களுக்கு இடையே மதுரை, ராஜபாளையம் செங்கோட்டை வழியாக தாம்பரம் – கொச்சுவேலி கோடை சிறப்பு ரயில் தென்னி ரயில்வே இயக்குகிறது.இதற்கான முன்பதிவு சனிக்கிழமை துவங்கிய நிலையில் முன்பதிவு அதிக வேகம் இல்லாமல் உள்ளது.தமிழக கேரள மக்கள் இந்த சிறப்பு ரயிலை அதிகம் பயன்படுத்தினால் இந்த வழித்தடத்தில் இந்த ரயில் நிரந்தர ரயிலாக இயங்கும் வாய்ப்பு உள்ளது.

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் – கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோடை விடுமுறை கூட்ட நெரிசலைச் சமாளிக்க சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் (வண்டி எண் 06035) மே 16 முதல் ஜூன் 29-ம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.40 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் கொச்சுவேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06036) மே 17 முதல் ஜூன் 30 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங் கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வண்டி எண் (06035) தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் 16 ஆம் தேதியில் இருந்து ஜூன் 29 ஆம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும்.

தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருத்துவர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவல்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவுனீஸ்வரம், கொட்டரக்காரா, குண்டரா, கொல்லம் வழியாக கொச்சுவேலி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். கொச்சுவேலியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரத்திற்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலானது (வண்டி எண்; 06036) வரும் 17 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 14 + 2 லக்கேஜ் பெட்டிகளுடன் இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை துவங்கியுள்ளது.முன்பதிவு அதிக வேகம் இல்லாமல் உள்ளது.தமிழக கேரள மக்கள் இந்த சிறப்பு ரயிலை அதிகம் பயன்படுத்தினால் இந்த வழித்தடத்தில் இந்த ரயில் நிரந்தர ரயிலாக இயங்கும் வாய்ப்பு உள்ளது.

14 ‘ஏசி’ பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஸ்லீப்பர் பெட்டிகளோ, முன்பதிவு இல்லாத பெட்டிகளோ கிடையாது. சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில் முன்பதிவு இருக்கை அதிகம் உள்ளது.

விருதுநகர் -செங்கோட்டை -கொல்லம் அகல ரயில் பாதையாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் முதல் முறையாக இந்த ரயில் கொச்சுவேலிக்கு இயக்கப்படுவதால் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் நேரடியாக திருவனந்தபுரம் செல்லலாம்.

இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை வரை எந்த ஊருக்கு பயணித்தாலும் ரூ. 990 கட்டணம். அதன்பின்பு விருதுநகர் ரூ.1040, சிவகாசி ரூ.1060, ஸ்ரீவில்லிபுத்தூர் ரூ.1075, ராஜபாளையம் ரூ. 1085, தென்காசி ரூ. 1160, புனலுார் ரூ.1220, கொல்லம் ரூ.1275, கொச்சுவேலிக்கு ரூ. 1335 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், தென்காசி, செங்கோட்டை, புனலுார் ஆகிய எந்த ஊரில் இருந்தும் கொச்சுவேலிக்கு ரூ.990 என ஒரே கட்டணமாகும்.

திருவனந்தபுரம் -கொல்லம்-செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் முதல்முறையாக திருவனந்தபுரம் சென்னை இடையே விரைவு ரயில் சேவையை 50ஆண்டுகளுக்கு முன் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் துவக்கி வைத்தார்.திருவனந்தபுரம் கொல்லம் கொச்சி சென்னை வழித்தடம் உதயமானதும் இந்த வழித்தடத்தில் பிரதான வழியாக மாறி அதிக ரயில் இயக்கப்படுகிறது.கொல்லம் செங்கோட்டை மலைவழிப்பாதை முக்கியத்துவம் இல்லாமல் போனது.தற்போதுஇந்த வழியாக சிறப்பு ரயில் இயக்கம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1918 ஆம் ஆண்டு கொல்லம் – திருவனந்தபுரம் ரயில் பாதை தொடங்கியதில் இருந்து, 1976 ஆம் ஆண்டு அவசர காலத்தின் போது திருவனந்தபுரம் – கொல்லம் – கோட்டயம் – எர்ணாகுளம் வழித்தடம் அகலப்பாதையாக திறக்கப்படும் வரை, திருவனந்தபுரத்திலிருந்து கேரளாவிற்கு வெளியே செல்லும் ஒரே ரயில் பாதை திருவனந்தபுரத்தில் இருந்து மீட்டர் கேஜ் பெட்டிகள் மட்டுமே. கொல்லம் – தென்காசி வழியாக தமிழகத்தின் சில பகுதிகளுக்கு சென்று வந்தது முக்கியத்துவமானது.

திருவாங்கூர் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் சென்று மீண்டும் சென்னை எழும்பூருக்கு செங்கல்பட்டு – விழுப்புரம் – விருத்தாசலம் – திருச்சிராப்பள்ளி – திண்டுக்கல் – மதுரை – விருதுநகர் – ராஜபாளையம்- தென்காசி – கொல்லம் வழியாக சென்னையை இணைக்கும் மீட்டர் கேஜ் வழித்தடத்தில் இயக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான அனந்தபுரி திருவனந்தபுரம் இன்றைய அகலப் பாதை வழியாக எஸ் ரயில்கள் (கொச்சுவேலி) – சென்னை (தாம்பரம்) சிறப்பு சேவையின் நினைவைப் புதுப்பிக்கும் வகையில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version