செஞ்சிலுவை சங்க எரிவாயு தகன மேடை முறைகேடு

Published:

செஞ்சிலுவை சங்கத்தின் பராமரிப்பின்  கீழ் எரிவாய்வு தகனமேடை திருநெல்வேலி  சிந்துபூந்துறையில் செயல்படுகிறது.

அதில் அமரர்களை எரியூட்ட படிவம் 4, 4A. பெற வேண்டும் என மாநகராட்சி உத்திரவு இட்டுள்ளது. (படிவம்  4 என்பது இறந்தவர்  பற்றிய விபரம்,  4A என்பது எப்படி இறந்தார்  என்ற விபரம் மருத்துவரால் வழங்கப்படும்  சான்று)

ஆனால் 237 உடல்கள் எப்படி எரிக்கப்பட்டுள்ளது என்பது உங்கள் பார்வைக்கு ….( எந்த ஆவணமும் கிடையாது)

இப்போது புரியும்  முருகேஷ்சன் முன் ஜாமீன் ஏன் கேட்கிறார் என்ற விபரம்.

4, 4A இல்லாமல் எரியூட்டது மிக பெரிய குற்றம்

 ஆனாலும் மாநகராட்சி  மற்றும் காவல்துறையின் உளவுபிரிவு கடமையாற்றிய விதம் எப்படியுள்ளது என்பது உங்கள் பார்வைக்கு….

எரிக்கப்பட்ட உடல்களில் காணாமல் போனவர்கள், தேடப்படும் குற்றவாளி, சட்டவிரோதமாக இறந்தவர்கள்  யாரும் இருப்பார்களோ? என. நாம் யூகம் செய்ய வேண்டாம்.

காவல்துறையில்  புகார் மனு  கொடுக்கப்பட்டு    60 நாட்கள் கடந்துவிட்டது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

வழக்கு பதிவு செய்ய யோசனை செய்கிறது காவல் துறை.

எல்லாம் சரி எரிக்கப்பட்ட உடல் ஒன்றுக்கு ரூபாய்   2000/-  வீதம் வசூல் செய்யப்பட்ட.  சுமார்  5 லட்சம்  எங்கே?

பிரபாகர், சொக்கலிங்கத்திற்கே  வெளிச்சம்.

ஆதாரத்துடன்

செய்தி: அ.பிரம்மா, திருநெல்வேலி

nellai pukar

Related articles

Recent articles

spot_img