Home சமையல் புதிது ஆரோக்கிய சமையல்: குதிரைவாலி சொஜ்ஜி!

ஆரோக்கிய சமையல்: குதிரைவாலி சொஜ்ஜி!

kuthiraivali soji
kuthiraivali soji

குதிரைவாலி சொஜ்ஜி

தேவையானவை:
பச்சைப் பட்டாணி – கால் கப், குதிரைவாலி அரிசி – அரை கப்,
கோதுமை குருணை – அரை கப்,
உப்பு – தேவையான அளவு,
பாசிப்பருப்பு – கால் கப்,
தேங்காய்த் துருவல் – கால் கப்.

தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுந்து – ஒரு டீஸ்பூன்,
உடைத்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 4,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு உப்பு, குதிரைவாலி அரிசி, கோதுமை குருணை, பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறி மூடி, 3 விசில் வரும் வரை வேகவிடவும். இத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். நொடியில் சத்தான சொஜ்ஜி ரெடி.

குறிப்பு: குதிரைவாலி, கோதுமை குருணையை அலசி 10 நிமிடம் சுடுநீரில் ஊறவைக்கவும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version